இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 1,00,636 பேராக குறைந்தது - 1,74,399 பேர் மீண்டனர்
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,00,636 பேராக குறைந்துள்ளது. தினசரி கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையை விட குணமடைவோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையும்
டெல்லி : நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையை விட குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதன் மூலம் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையும் குறையத் தொடங்கியுள்ளது. நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் 1,00,636 பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரே நாளில் 1,74,399 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.
இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலையின் தாக்கத்தினால் தினசரி பாதிப்பு 4 லட்சத்திற்கும் மேல் பதிவானது. மகாராஷ்டிரா, டெல்லி, கர்நாடகா மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. உயிரிழப்பும் அதிகரிக்கவே அந்த மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
தமிழகத்திலும் தினசரி பாதிப்பு அதிகரிக்கவே கடந்த சில வாரங்களாக ஊரடங்கு கடுமையாக அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து தொற்று பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. இந்தியாவில் நோய் தொற்று பாதிப்பு குணமடைந்தோர் எண்ணிக்கை குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் இன்று தகவல் வெளியிட்டுள்ளது.

2,89 கோடி பேர் பாதிப்பு
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 1,00,636 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 2,89,09,975 பேராக அதிகரித்துள்ளது.

2.71 கோடி பேர் மீண்டனர்
கொரோனாவால் பாதிக்கப்படுவோரை விட குணமடைந்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 1,74,399 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர். குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,71,59,180 பேராக உயர்ந்துள்ளது.

மரணமடைந்தவர்கள் விபரம்
நாடு முழுவதும் மருத்துவமனைகளில் 14,01,609 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 2427 பேர் ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,49,186 பேராக அதிகரித்துள்ளது. இதுவரை 23,27,86,482 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பரிசோதனை எத்தனை கோடி
ஜூன் 6ஆம் தேதி வரைக்கும் நாடு முழுவதும் 36,63,34,111 சாம்பிள்களை பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் ஒரே நாளில் 15,87,589 சாம்பிள்கள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications