இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைவோர் எண்ணிக்கை அதிகரிப்பு - 2,56,92,342 பேர் மீண்டனர்
இந்தியாவில் கடந்த 4வது நாளாக இரண்டு லட்சத்திற்கும் கீழே கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது. இன்று ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,52,734 பேராக குறைந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையை விட கு
டெல்லி: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையை விட குணமடைபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையும் படிப்படியாக குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 1,52,734 பேர் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,80,47,534 பேராக அதிகரித்துள்ளது. 2,38,022 பேர் ஒரே நாளில் குணமடைந்துள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையை விட குணமடைவோர் எண்ணிக்கை அதிகரித்து வருவது நம்பிக்கை அளிக்கிறது.
கொரோனா இரண்டு அலை தீவிரமாக உள்ளது. நாட்டின் பல பகுதிகளில் மக்கள் ஆக்ஸிஜன் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் பற்றாக்குறையால் திண்டாடி வருகின்றனர். பல மாநிலங்களில் தளர்வுகள் அற்ற லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் தினசரி கொரோனா பாதிப்பு 2 லட்சத்திற்கும் கீழே குறைந்துள்ளது. கடந்த நான்காவது நாளாக கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது.

மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 1,52,734 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,80,47,534 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் 2,38,022 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,56,92,342 ஆக அதிகரித்துள்ளது. நோயினால் பாதிக்கப்படுபவர்களை விட குணமடைபவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.
நாடு முழுவதும் ஒரே நாளில் 3,128 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,29,100 ஆக உயர்ந்துள்ளது.
நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 20,26,092 பேராக குறைந்துள்ளது. நாடு முழுவதும் நேற்று வரை பொதுமக்களுக்கு 21,31,54,129 டோஸ்கள் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 34,48,66,883 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications