இந்தியாவில் ஒரே நாளில் 1.67 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று.. 1,192 பேர் உயிரிழப்பு
டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1.67 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனாவால் ஒரே நாளில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியுள்ளது.
இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் இந்தியாவில் ஒரே நாளில் 1,67,059 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நேற்றைய தினம் ஒரே நாளில் 2,09,918 பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்த நிலையில் இன்றைய தினம் குறைந்துள்ளது.

இதன் மூலம் கொரோனாவால் இந்தியாவில் இதுவரை 4,13,02,440 ஆக இருந்த பாதிப்பு எண்ணிக்கை 4,14, 69, 499 ஆக உயர்ந்துள்ளது. அது போல் கொரோனாவிலிருந்து ஒரே நாளில் 2,54,076 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். குணமடைந்தோரின் எண்ணிக்கை 3,83,60,710 லிருந்து 3,87,13,494 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 17,43,059 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் கடந்த 24 மணி நேரத்தில் 1192 பேர் பலியாகிவிட்டனர். இதன் மூலம் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4,95,050 லிருந்து 4,96,242 ஆக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் ஒரே நாளில் 61,45,767 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதன் மூலம் இதுவரை இந்தியாவில் 1,66,68,48,204 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தினசரி பாசிட்டிவிட்டி ரேட்டானது 11.69% சதவீதமாகியுள்ளது. தமிழகத்தில் இதுவரை 9,35,88,972 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
நாட்டில் தடுப்பூசி போட தகுதியானவர்களில் 75 சதவீதத்திற்கும் மேற்பட்டவர்கள் இரு டோஸ்களையும் செலுத்திக் கொண்டனர். மகாராஷ்டிராவில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் எண்ணிக்கை 41 சதவீதமாக குறைந்துள்ளது என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications