இந்தியாவில் கொரோனா பாதிப்பு 2.6 லட்சமாக குறைவு- ஒருநாள் உயிரிழப்பு 4,340 ஆக அதிகரிப்பு
டெல்லி: இந்தியாவில் பல மாநிலங்களில் லாக்டவுன் கடுமையாக அமல்படுத்தபப்ட்டு வரும் நிலையில் ஒருநாள் கொரோனா பாதிப்பு சற்று குறைய தொடங்கி உள்ளன. இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 2,63,045 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. அதேநேரத்தில் இதுவரை இல்லாத வகையில் ஒரே நாளில் 4,340 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.
உலக நாடுகளில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 16,42,44,556. உலகின் மொத்த கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 34,03,206. உலக நாடுகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 14,29,11,035.

இந்தியா 2.6 லட்சம் பேருக்கு பாதிப்பு
உலக நாடுகளில் ஒருநாள் பாதிப்பில் இந்தியா தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. இருப்பினும் இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு கடந்த 2 நாட்களாக சற்று குறைய தொடங்கியுள்ளது. இந்தியாவில் நேற்று ஒருநாள் கொரோனா பாதிப்பு 2,63,045 ஆக இருந்தது.

4,340 பேர் மரணம்
ஆனால் கொரோனா மரணஙக்ள் இந்தியாவில் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 4,340 பேர் கொரோனாவால் மரணம் அடைந்துள்ளனர். இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,52,27,970. இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 2,15,90,003. இந்தியாவில் மொத்த கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 2,78,751.

மகா., தமிழகம்
இந்தியாவில் தற்போதைய நிலையில் ஆக்டிவ் கேஸ்கள் எண்ணிக்கை 33,59,216. மாநிலங்களில் அதிக பாதிப்பு நீடித்து வந்த மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைய தொடங்கியது. மகாராஷ்டிராவில் திங்கள்கிழமையன்று 26,616 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. அதேநேரத்தில் மகாரஷ்டிராவில் ஒருநாள் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 1,000-த்தை தொட்டுவிட்டது.

கர்நாடகாவில் 476 பேர் பலி
கர்நாடகாவில் நேற்று மட்டும் 38,603 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இம்மாநிலத்தில் ஒரே நாளில் 476 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். தமிழகத்தில் திங்களன்று 33,075 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. தமிழகத்தில் 24 மணிநேரத்தில் 335 பேர் கொரோனாவால் மரணம் அடைந்தனர். டெல்லியில் ஒரே நாளில் 340 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
-
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
ஜப்பானில் பாகிஸ்தான் கட்டிய மசூதி.. இடிக்க அதிரடியாக உத்தரவிட்ட அதிகாரிகள்.. என்ன காரணம்? -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
ஒரு சுறா கோபப்பட்டால் உங்களுக்கு இன்டர்நெட் கிடைக்காது.. ஹாட்ஸ்பாட் சென்னை தான் தெரியுமா -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
இனி சீனாவுக்கு தெரியாமல் அணுவும் அசையாது.. எதிர்காலத்தை கணிக்கும் AI சாப்ட்வேர்.. திக்திக் ஆய்வு -
95% கொசுக்கள் காலி.. கூகுள் உருவாக்கிய புது வகை கொசுக்கள்! உலகை வியக்க வைக்கும் சீக்ரெட் திட்டம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்!












Click it and Unblock the Notifications