இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு- ஒரே நாளில் 43,654 பேருக்கு தொற்று உறுதி- 640 பேர் மரணம்
டெல்லி: நாட்டில் கொரோனா பாதிப்பு மீண்டும் கிடுகிடுவென அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் 43,654 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் ஒரேநாளில் 640 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் கொரோனா பாதிப்பும் மரணங்களும் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கடந்த 5 மாதங்களுக்குப் பின்னர் நேற்று கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து 30 ஆயிரத்துக்கும் கீழே இருந்தது.

நாட்டில் நேற்று முன்தினம் ஒருநாள் கொரோனா பாதிப்பு 29,689 ஆகவும் கொரோனா உயிரிழப்புகள் எண்ணிக்கை 415 ஆகவும் இருந்தது. கொரோனாவால் குணமடைவோர் எண்ணிக்கையும் அதிகரித்திருந்தது.
இந்த நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நேற்று ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 43,654 ஆக அதிகரித்துள்ளது. மேலும் செவ்வாய்க்கிழமையன்று கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 640 ஆகவும் அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து மொத்தம் 41,678 பேர் குணமடைந்தும் உள்ளனர். இந்தியாவில் தற்போதைய நிலையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 3,99,436 (ஆக்டிவ் கேஸ்கள்). நாட்டில் கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 3,06,63,147.
இந்தியாவின் மொத்த கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 4,22,022. நாட்டில் இதுவரை மொத்தம் 44,61,56,659 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
-
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications