இந்தியாவில் மேலும் 54,069 பேருக்கு கொரோனா பாதிப்பு- 24 மணிநேரத்தில் 1,321 பேர் மரணம்
டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 54,069 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 1,321 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
உலக நாடுகளின் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 18 கோடியை தாண்டியுள்ளது. கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 39 லட்சத்தை கடந்துள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதியதாக 54,069 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,00,82,778 ஆக அதிகரித்துள்ளது.

1,321 கொரோனா மரணங்கள்
மேலும் கடந்த 24 மணிநேரத்தில் 68,885 பேர் கொரோனா சிகிச்சைக்குப் பின்னர் டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர். இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 2,90,63,740. இந்தியாவில் நேற்று ஒருநாளில் 1,321 பேர் கொரோனாவால் மரணம் அடைந்துள்ளனர். நாட்டின் மொத்த கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 3,91,981 ஆக அதிகரித்துள்ளது.

தற்போதைய ஆக்டிவ் கேஸ்கள்
நாட்டில் கொரோனாவுக்கு தற்போது சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 6,27,057 ஆகும். தற்போது வரை மொத்தம் 30,16,26,028 பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.

மகாராஷ்டிராவில் மீண்டும் பாதிப்பு அதிகம்
மகாராஷ்டிராவில் சற்று குறைந்த கொரோனா பாதிப்பு நேற்று கூடுதலாக இருந்தது. மகாராஷ்டிராவில் நேற்று 10,066 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. மேலும் இம்மாநிலத்தில் 508 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர்.

கேரளா, தமிழகம்
இதையடுத்து 2-வது இடத்தில் கேரளா உள்ளது. கேரளாவில் நேற்று 12,787 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. கேரளாவில் நேற்று 150 பேர் கொரோனாவுக்கு பலியாகினர். தமிழகத்தில் 6,596 பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது. தமிழகத்தில் நேற்றைய கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 166.












Click it and Unblock the Notifications