கொரோனாவுக்கு இந்தியாவில் முதல் பலி.. கர்நாடகத்தைச் சேர்ந்த 76 வயது முதியவர் மரணம்
டெல்லி: கர்நாடக மாநிலம் கல்பர்கியைச் சேர்ந்த 76 வயது முதியவர் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பலியாகியுள்ளார். கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியான முதல் இந்தியர் இவர்தான்.
Recommended Video
உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கானோரை பலி வாங்கியுள்ள கொரோனாவுக்கு இந்தியாவில் முதல் பலி ஏற்பட்டுள்ளது. வியாழக்கிழமை இரவு கல்பர்கியைச் சேர்ந்த 76 வயது முதியவர் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானார். இவர் பிப்ரவரி 29ம் தேதி சவூதி அரேபியாவிலிருந்து உம்ரா பயணத்தை முடித்து விட்டுத் திரும்பியிருந்தார்.

உம்ராவை முடித்து விட்டு ஹைதராபாத் திரும்பிய அவருக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டபோது எந்த அறிகுறியும் தெரியவில்லை. மார்ச் 5ம் தேதி அவரை கல்பர்கியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தபோது அவருக்கு ஆஸ்த்மா பிரச்சினையும், ரத்த அழுத்தமும் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து டாக்டர்கள் அவரை பரிசோதித்தபோது அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து அவரை ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றினர். இந்த நிலையில் இன்று இரவு 10. 30 மணியளவில் அந்தப் பெரியவர் மரணமடைந்தார். தற்போது அந்தப் பெரியவரின் குடும்பம் முழுமையும் தீவிரக் கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் இதுவரை 70க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளாகியிருப்பது குறிப்பிடத்தக்கது. இப்போதுதான் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
-
செல்போன் ஸ்விட்ச் ஆஃப்.. கர்நாடக அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த பெங்களூர் எம்எல்ஏ மாயம்.. தமிழ்நாட்டில் பதுங்கல்? -
பெங்களூர் நகர வளர்ச்சி துறை அமைச்சர் யார் தெரியுமா? கர்நாடக அமைச்சர்களின் இலாகா விவரம் -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
மாணவிகளுக்கு மட்டுமில்லை, பள்ளி, கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் இலவச பஸ் பாஸ்! டிகே சிவகுமார் பலே -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications