டெல்லியில் புதின்.. இன்று இந்தியா ரஷ்யா உச்சி மாநாடு.. கையெழுத்தாகும் பல முக்கிய ஒப்பந்தங்கள்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இரு நாட்கள் அரசு முறை பயணமாக ரஷ்ய அதிபர் புதின் இந்தியாவுக்கு வந்துள்ளார். நேற்று இந்தியா வந்த புதினை விமான நிலையத்திற்கே நேரில் சென்று பிரதமர் மோடி வரவேற்றார். இதற்கிடையே இன்றைய தினம் நடைபெறும் இந்தியா ரஷ்யா உச்சி மாநாட்டில் இரு தலைவர்களும் கலந்து கொள்ள உள்ளனர். இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.

இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே எப்போதும் நல்லுறவு இருந்துள்ளது. அமெரிக்காவுக்கு முன்பு இருந்தே கூட ரஷ்யா நமக்கு நல்ல ஒரு நண்பராக இருந்துள்ளது. கடந்த காலங்களில் பல இக்கட்டான நேரங்களில் இந்தியாவுக்குப் பக்கபலமாக ரஷ்யா நின்றுள்ளது. அதேபோல ரஷ்யாவுக்கு ஆதரவாக இந்தியாவும் இருந்து வருகிறது.

Putin

இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு சிறப்பாகவே இருந்து வருகிறது. இந்தச் சூழலில் தான் இரு நாட்கள் அரசு முறை பயணமாக ரஷ்ய அதிபர் புதின் இந்தியாவுக்கு வந்துள்ளார். நேற்று மாலை அவர் சிறப்பு விமானம் மூலம் டெல்லியில் வந்திறங்கினார். வழக்கமாக வெளிநாட்டுத் தலைவர்கள் வரும்போது மத்திய அமைச்சர்கள் தான் நேரில் சென்று வரவேற்பார்கள். ஆனால், புதின் வந்தபோது பிரதமர் மோடியே நேரில் சென்று அவரை வரவேற்றார். டெல்லி விமான நிலையத்தில் புதினை ஆரத்தழுவி பிரதமர் மோடி வரவேற்றார்.

இருவரும் ஒன்றாக ஒரே காரில் பிரதமர் இல்லத்திற்குச் சென்றனர். அங்கு ரஷ்ய அதிபர் புதினுக்கு பிரதமர் மோடி இரவு விருந்து அளித்தார். இந்தச் சூழலில் தான் இன்று இரண்டாம் நாள் சந்திப்பு நடைபெறுகிறது. இன்று வெள்ளிக்கிழமை புதின் ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்திற்குச் சென்று மரியாதை செலுத்துகிறார்.

அதைத் தொடர்ந்து டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் இந்தியா ரஷ்யா உச்சி மாநாடு நடைபெறுகிறது. அதில் இரு தலைவர்களும் பல்வேறு விஷயங்கள் குறித்தும் ஆலோசிக்கிறார்கள். இரு தரப்பிற்கும் இடையேயான பாதுகாப்பு உறவுகள், வர்த்தக உறவுகள் குறித்து ஆலோசிக்கவுள்ளனர். மேலும், இதில் பல முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாகப் பாதுகாப்புத் துறை சார்ந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் எனத் தெரிகிறது. அதைத் தொடர்ந்து பாரத் மண்டபத்தில் நடைபெறும் நிகழ்ச்சியிலும் அவர் பங்கேற்பார். மேலும், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழங்கும் இரவு விருந்திலும் புதின் கலந்துகொள்வார்.

இந்த சந்திப்பில் இந்தியா ரஷ்யா குறித்துப் பல விஷயங்கள் பற்றி விவாதிக்கப்படும். ரஷ்யா உக்ரைன் போர் குறித்தும் இரு தலைவர்களும் ஆலோசிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ரஷ்ய கச்சா எண்ணெய் வாங்குவதால் இந்தியா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ள நிலையில், அது தொடர்பாகவும் ஆலோசிக்கப்படும் எனத் தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+