கொரோனா: மகாராஷ்டிராவில் நோயாளிகள் எண்ணிக்கை திடீர் உயர்வு.. கேரளாவை மிஞ்சியது! நாடு முழுக்க 114 பேர்
டெல்லி: இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதித்தோர் எண்ணிக்கை 114ஆக உயர்ந்துள்ளது. புதிதாக லடாக், ஒடிசா, ஜம்மு காஷ்மீர் மற்றும் கேரளா ஆகியவற்றில் தலா ஒரு நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளதால், இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
Recommended Video
புதிதாக நேற்று 19 புதிய கொரோனா நோயாளிகள், கண்டறியப்பட்டனர். அதில், மகாராஷ்டிராவைச் சேர்ந்த 15 பேர் அடங்கும். அந்த மாநிலத்தில்தான் இவ்வாறு மிக வேகமாக நோயாளிகள் எண்ணிக்கை கூடியுள்ளது.

மகாராஷ்டிராவில் இப்போது 33 நோயாளிகள் உள்ளனர். வைரஸ் பரவல் அதிகரித்திருப்பதால், முதல்வர் உத்தவ் தாக்கரே, பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் மால்களை மார்ச் 31 வரை மூடிவிட உத்தரவிட்டது.
இந்தியாவில் கோவிட் -19 பாதித்தோர் எண்ணிக்கையில், இரண்டாவது இடத்தில் கேரளா உள்ளது, அங்கு, 25 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உத்தரபிரதேசம் 12, டெல்லி மற்றும் கர்நாடகாவில் தலா 7 நோயாளிகள் உள்ளனர். நாடு முழுவதும் 112 பேருக்கு இந்த பாதிப்பு உள்ளது. தமிழகத்தில் சிகிச்சை பெற்று வரும் ஒருவர், இன்று மாலை தனது வீட்டுக்கு திரும்ப உள்ளார்.
இதுவரை வெளியான தகவல்படி, நாடு முழுக்க, 10 நோயாளிகள் குணமடைந்துள்ளனர், கடந்த வாரம் இரண்டு பேர் இறந்தனர்.
மத்திய மற்றும் மாநில அரசுகள் கடந்த சில நாட்களாக பள்ளிகள், கல்லூரிகள், மால்கள் மற்றும் திரையரங்குகளை மூடிவிட்டன, பெரும்பாலான எல்லை சோதனைச் சாவடிகளை மூடிவிட்டன, சர்வதேச விமானப் பயணிகளைத் தனிமைப்படுத்தியுள்ளன, மற்றும் சமூக கட்டுப்பாட்டை கடைப்பிடிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளன.
ஞாயிற்றுக்கிழமை, குஜராத் அரசும், அம்மாநிலத்தில் அதை கொரோனா வைரஸை ஒரு தொற்றுநோயாக அறிவித்து, அதன் பரவலைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க சில அதிகாரிகளுக்கு அதிகாரம் அளித்தது.
தெலுங்கானா, தமிழகம், டெல்லி, ஒடிசா, கர்நாடகா, ஜம்மு-காஷ்மீர், உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்களை போல குஜராத்தும், கல்வி நிலையங்கள், அங்கன்வாடிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களையும் மார்ச் 29 வரை மாநில அரசு மூடியுள்ளது. இதுவரை இந்த மாநிலத்தில் ஒருவருக்கு கூட பாதிப்பு உறுதி செய்யப்படவில்லை. அந்த மாநிலத்தில் சோதனை செய்யப்பட்ட 77 மாதிரிகளில் 72 இல்லை என்றுதான் வந்துள்ளன. 5 முடிவுகள் நிலுவையில் உள்ளன.


Click it and Unblock the Notifications
