இந்தியாவில் கொரோனாவிற்கு 34,63,973 பேர் பாதிப்பு - 26,48,999 பேர் மீண்டனர்

இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு 24 மணி நேரத்தில் 76,472 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 34,63,973 பேர் கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர்.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 76,472 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 34,63,973 பேர் கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரே நாளில் 1021 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று மட்டும் 65050 பேர் குணமடைந்துள்ளனர். குணமடைந்தோர் விகிதம் 76.47 சதவிகிதமாக உள்ளது.

உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று அதிகம் பாதிக்கப்படுவது இந்தியர்களாக இருக்கின்றனர்.
இந்தியாவில் தினசரி நோய்த்தொற்று எண்ணிக்கை 70 ஆயிரத்தை தாண்டி உள்ளது. அதேசமயம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருவது சற்றே ஆறுதல் தருகிறது.

Indias coronavirus tally crosses to 34 lakh-mark with a spike of 76,472 new cases

இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி கடந்த 24 மணி நேரத்தில் 76,472 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34,63,973 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 26,48,999 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் 65050 பேர் குணமடைந்துள்ளனர். குணமடைந்தோர் விகிதம் 76.47 சதவிகிதமாக உள்ளது. நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 7,52,424 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

கொரோனாவிற்கு நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் 1,021 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை மொத்தம் 62,550 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழப்பு 1.81 சதவிகிதமாக உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+