இந்தியாவில் முதல்முறை! சிறந்த பணியிட மகிழ்ச்சி விருதுகள் அறிமுகம்! ஹர்ஷ் கோயங்கா தலைமையில் மெகா டீம்
டெல்லி: 'Happiest Places to Work' நிறுவனம், இந்தியாவின் முதல் 'பணியிட மகிழ்ச்சி விருதுகளை' அறிமுகப்படுத்தியுள்ளது. ஊழியர்களுக்கு நேர்மறையான தினசரி அனுபவங்களையும், சிறந்த பணி கலாச்சாரத்தையும் வளர்க்கும் நிறுவனங்களுக்கான அங்கீகாரம் இதன் நோக்கம்.
ஜூலை மாத இறுதியில் மும்பையில் இதன் முதல் நிகழ்வு நடைபெறும்; இதில், பெருநிறுவனத் தலைவர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அனைத்துத் துறைகளிலும் உள்ள நிறுவனங்கள், எந்த அளவிலான நிறுவனங்களும் இதில் பங்கேற்கலாம்.

பணியிட மகிழ்ச்சியை மட்டுமே மையமாகக் கொண்ட இந்த விருதுகள், ஊழியர்களின் அன்றாட அனுபவங்களுக்கும் வணிக வளர்ச்சிக்கும் உள்ள தொடர்பை வலியுறுத்துகின்றன. இந்த காலத்தில் ஒரு நிறுவனத்தின் வேலை கலாச்சாரம் மற்றும் ஊழியர் அனுபவத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுவதால், அர்த்தமுள்ள பணிச்சூழலைக் கொண்ட நிறுவனங்களை அங்கீகரித்து, சிறந்த நடைமுறைகளை வெளி கொண்டு வரவே இந்த விருதுகள் அறிவிக்கப்படுகிறது.
நடுவர்
இந்த விருதுக் குழுவுக்கு RPG குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா தலைமை தாங்குவார். வணிகம் மற்றும் மனிதவளத் துறையின் மூத்த தலைவர்களைக் கொண்ட ஒரு மதிப்பீட்டுக் குழு விண்ணப்பங்களை ஆய்வு செய்யும். இந்த குழுவில் பல்வேறு தரப்பினரும் வேலை செய்கிறார்கள். இந்த குழுவில் இடம்பெற்றுள்ள வல்லுநர்கள் நம்பகத்தன்மையை உறுதி செய்கிறது.

மதிப்பீட்டுக் குழு உறுப்பினர்கள் பதவி
| மதிப்பீட்டுக் குழு உறுப்பினர்கள் | பதவி |
| ஹர்ஷ் கோயங்கா | தலைவர், RPG குழுமம் |
| அசால் கன்னா | CEO, SHRM APAC & MENA |
| ஹரித் நாக்பால் | MD & CEO, டாடா ப்ளே |
| பவித்ரா சிங் | CHRO & VP, பெப்சிகோ இந்தியா & சவுத் ஆசியா |
| டாக்டர். அதுல் ஹெக்டே | நிறுவனர் & தலைவர், யாப் டிஜிட்டல் |
| டாக்டர். ப்ரஜ்ஜல் சஹா | நிறுவனர் & முதன்மை ஆசிரியர், ஹெச்ஆர் கதா |
| நீது பூஷன் | மனிதவள இயக்குநர், நெஸ்லே சவுத் ஆசியா |
| புஷ்ப் குமார் நாயர் | நிர்வாக இயக்குநர் HRD, BPCL |
| சுனிதா செரியன் SVP, விப்ரோ | முன்னாள் தலைமை கலாச்சார அதிகாரி & கார்ப்பரேட் HR |
ஹர்ஷ் கோயங்கா
இந்த விருதுகள் தொடர்பாக ஹர்ஷ் கோயங்கா கூறுகையில், "வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவுவது முக்கியம். அது நிறுவனங்களின் வளர்ச்சிக்கும் செயல்திறனுக்கும் மையமாகிவிட்டது. ஊழியர்களின் மகிழ்ச்சி எந்தளவுக்கு முக்கியம் என்பதை இதுபோன்ற விருதுகள் உலகிற்கு உணர்த்தும்" என்றார்.
விருதுகள்
ஊழியர்களின் தினசரி அனுபவங்களையும், பணிச்சூழலில் அவர்களின் உணர்வுகளையும் பல நிறுவனங்கள் கவனிக்கத் தவறிவிடுகின்றன என்று 'Happiest Places to Work' நிறுவன நிறுவனர் ராஜ் நாயக் சுட்டிக்காட்டினார்.
அன்றாடப் பணி அனுபவத்தை மதிக்கும் நிறுவனங்களை இந்த விருதுகள் வழங்கப்படுகிறது. ஊழியர்களுடனான உரையாடல், கலாச்சார ஆய்வு மற்றும் நடுவர் குழுவின் இறுதி ஆய்வு ஆகியவற்றைக் கொண்டே இந்த மதிப்பீடு வழங்கப்படும். எந்த துறையைச் சேர்ந்த.. எவ்வளவு பெரிய அல்லது சிறிய நிறுவனங்களும் இதில் பங்கேற்கலாம்.
விண்ணப்பிப்பது எப்படி
விருதுகளுக்கான விண்ணப்பங்கள் www.happiestplacestoworkawards.com என்ற இணையதளத்தில் உள்ளன. இந்தச் செயல்முறை எளிமையானது.. நிறுவனங்களுக்குத் தெளிவான வழிகாட்டுதலை வழங்கும் வகையில் விண்ணப்பிக்கும் பிராசஸ் வடிவமைக்கப்பட்டுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் கூறினர். ஊழியர்கள் சார்ந்த பாலிசி, சலுகைகளைத் தாண்டி.. ஒவ்வொரு நாளும் அவர்கள் பணியிடத்தில் எப்படி உணர்கிறார்கள் என்பதன் மீது இந்த மதிப்பீடு கவனம் செலுத்துகிறது.
முக்கியமான நிகழ்வு
இந்த விருது விழா, தலைமை நிர்வாக அதிகாரிகள் , மனிதவளத் தலைவர்கள் (CHRO) மற்றும் பிற வணிகத் தலைவர்கள் கலந்துகொள்ளும் முக்கிய நிகழ்வாகும். பல்வேறு துறைகள் மற்றும் பிரிவுகள் கீழ் தனித்தனியாக விருதுகள் வழங்கப்படும். உண்மையான பணியிடக் கலாச்சாரம் குறித்தும் விவாதங்கள் நடக்கவுள்ளது.
'Happiest Places to Work' நிறுவனம், ஊழியர்களின் அனுபவத்தைப் புரிந்துகொண்டு, பணியிடத்தில் ஊழியர்கள் பெறும் உணர்வை மேம்படுத்த நிறுவனங்களுக்கு உதவுகிறது. வேலை செய்யும் இடங்களில் நடைமுறைப்படுத்தக்கூடிய, அர்த்தமுள்ள நடவடிக்கைகளைப் பரிந்துரைப்பதில் இது கவனம் செலுத்துகிறது.












Click it and Unblock the Notifications