டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தாக்குதல் ஏன்- இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் பரபரப்பு விளக்கம்

Google Oneindia Tamil News

Recommended Video

    பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தாக்குதல் ஏன்- இந்தியா விளக்கம்- வீடியோ

    டெல்லி: புல்வாமா தாக்குதலுக்கு இந்தியா வான் வழியாக பதிலடி கொடுத்தது ஏன் என்பது குறித்து இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் விஜய் கோகலே விவரித்தார்.

    ஜம்மு- காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாத அமைப்பின் தற்கொலை படை தாக்குதலில் கடந்த 14-ஆம் தேதி 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் வீரமரணமடைந்தனர். இதற்கு பதிலடி கொடுக்க இந்தியா தீவிரம் காட்டி வந்தது.

    இந்த நிலையில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்புகளின் முகாம்களின் மீது வெடிப்பொருள்களை வீசியதில் 200- 300-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் உயிரிழந்திருப்பர் என தெரிகிறது.

    மற்றொரு தாக்குதல்

    மற்றொரு தாக்குதல்

    இந்த தாக்குதல் குறித்து இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் விஜய் கோகலே விளக்கமளித்தார். அப்போது அவர் கூறுகையில் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பு மற்றொரு தாக்குதலை நடத்த திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகின.

    நடவடிக்கை இல்லை

    நடவடிக்கை இல்லை

    இதனால் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் குறித்து அந்நாட்டுக்கு தகவல் அளித்தோம். ஆனால் அந்த நாடு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    மசூத் அசார்

    மசூத் அசார்

    இதனால் இந்திய விமான படை கொண்டு தீவிரவாத தாக்குதலை நடத்தினோம். இதில் ஏராளமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
    பயங்கரவாத இயக்கத்தின் மற்றொரு தாக்குதலை தடுக்கவே இந்தியா தாக்குதல் நடத்தியது.

    தாக்குதல்

    தாக்குதல்

    இந்த தாக்குதலில் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத இயக்கத்தின் தலைவர் மசூத் அசாரின் மைத்துனர் கொல்லப்பட்டார் என்றார். பதான்கோட் பயங்கரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டவர் மசூத் அசார்.

    English summary
    India's Foreign Secretary Vijay Gokhale briefs about Why India did these attacks in POK?
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X