டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஜிடிபி வளர்ச்சி 5% மட்டுமே.. அரசு டேட்டாவில் அதிர்ச்சி தகவல்.. வேலையில்லா திண்டாட்டம் பெருக வாய்ப்பு

Google Oneindia Tamil News

டெல்லி: நாட்டு பொருளாதாரம் 2019-20ஆம் ஆண்டில் 5 சதவீதமாக வளர்ச்சியடையும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இது முந்தைய நிதியாண்டில் 6.8 சதவீதமாக மதிப்பிடப்பட்டு இருந்தது.

உற்பத்தி துறை வளர்ச்சியில் ஏற்பட்ட, சரிவு காரணமாக இந்த ஜிடிபி சரிவடையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 2019-20 ஆம் ஆண்டில் உற்பத்தி துறை வளர்ச்சி 2 சதவீதமாகக் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது முந்தைய ஆண்டின் நிதியாண்டில் 6.2 சதவீதமாக இருந்தது.

Indias GDP growth rate for 2019-20 estimated at 5 per cent

விவசாயம், கட்டுமானம் மற்றும் மின்சாரம், எரிவாயு மற்றும் நீர் வழங்கல் போன்ற துறைகளிலும் இந்த சரிவு காணப்பட்டது. அதேசமயம், சுரங்கம், பொது நிர்வாகம் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட சில துறைகள் சிறிய முன்னேற்றத்தில் உள்ளன.

தனிநபர் வருமானத்தின் வளர்ச்சி விகிதம் 2019-20 ஆம் ஆண்டில் 4.3% என மதிப்பிடப்பட்டுள்ளது, இது முந்தைய ஆண்டில் 5.6% ஆக இருந்தது.

தற்போதைய விலைவாசி அடிப்படையில், மொத்த நிலையான மூலதன உருவாக்கம் (ஜி.எஃப்.சி.எஃப்) 2019-20ல் 57.42 லட்சம் கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது, இது 2018-19ல் ரூ.55.70 லட்சம் கோடியாக இருந்தது.

பேரணிக்கு வாங்க.. அழைத்த பாஜக.. வராமல் நிராகரித்து.. ஷாக் கொடுத்த அதிமுக, பாமக!பேரணிக்கு வாங்க.. அழைத்த பாஜக.. வராமல் நிராகரித்து.. ஷாக் கொடுத்த அதிமுக, பாமக!

முந்தைய ஆண்டில் 2.9% உடன் ஒப்பிடும்போது விவசாயத் துறை 2.8% வளர்ச்சியைக் காணும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நடப்பு நிதியாண்டின் முதல் பாதியில் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி 4.8% ஆக இருந்தது. ஒவ்வொரு ஆண்டும் தொழிலாளர் பிரிவில் சேரும் மில்லியன் கணக்கான இளைஞர்களுக்கு போதுமான வேலைவாய்ப்புகளை உருவாக்க இந்தியா ஆண்டுக்கு சுமார் 8% வளர்ச்சியடைய வேண்டியது அவசியம். அல்லது, வேலையில்லா திண்டாட்டம் நாட்டில் அதிகரித்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
India's GDP growth rate for 2019-20 estimated at 5 per cent against 6.8 per cent in 2018-19, says government data.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X