இந்தியாவில் 24 மணிநேரத்தில் 1,990 பேருக்கு கொரோனா பாதிப்பு- 49 பேர் பலி- மத்திய அரசு
டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,990 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கொரோனாவால் 49 பேர் பலியாகி உள்ளனர் என்கிறது மத்திய அரசு.
Recommended Video
கொரோனா பாதிப்பு தொடர்பான விவரங்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதில் கடந்த 24 மணிநேரத்தில் 1,990 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.

26,496 பேருக்கு பாதிப்பு
இந்தியாவில் ஒரே நாளில் மிக அதிகமாக இத்தனை பேருக்கு பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதேபோல் ஒரே நாளில் 49 பேர் பலியாகி உள்ளனர். இந்தியாவில் மொத்தமாக 26,496 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தோர் எண்ணிக்கை 824 ஆக அதிகரித்துள்ளது.

மகா. , குஜராத் மாநிலங்கள்
மகாராஷ்டிராவில் 7628 பேரும் குஜராத்தில் 3071 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் கொரோனாவால் அதிகம் பாதித்த மாநிலங்கள் இந்த இரண்டும்தான். மகாராஷ்டிராவில் 323 பேரும் குஜராத்தில் 133 பேரும் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். 3-வது இடத்தில் டெல்லி உள்ளது. இம்மாநிலத்தில் 2625 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

ம.பி., ராஜஸ்தானில் அதிகம்
மத்திய பிரதேசத்தில் 2096 பேரும் ராஜஸ்தானில் 2083 பேரும் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். மத்திய பிரதேசத்தில் 99 பேரும் ராஜஸ்தானில் 33 பேரும் கொரோனாவுக்கு மரணித்துப் போயுள்ளனர். இதற்கு அடுத்ததாக தமிழகத்தில் கொரோனாவால் 1821 பேர் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். தமிழகத்தில் மொத்தம் 23 பேர் மரணமடைந்துள்ளனர்.

பிற மாநிலங்களில் நிலவரம்
உத்தரப்பிரதேசத்தில் 1793, ஆந்திராவில் 1061, தெலுங்கானாவில் 991, கர்நாடகாவில் 500, ஜம்மு காஷ்மீரில் 494 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் மொத்தம் 5804 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்துள்ளனர். மகாராஷ்டிராவில் 1076 பேரும் தமிழகத்தில் 960 பேரும் கொரோனாவால் இருந்து மீண்டிருக்கின்றனர்.
-
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
"நாளைக்கு வரோம்.. களத்தை அதிர வைக்கிறோம்!" டெல்லியை மிரள வைக்க கிளம்பிய கரப்பான் பூச்சி கட்சி! -
புலிப் பாய்ச்சல்.. உலக அரங்கில் தலைநிமிரும் இந்தியா! எதிர்பார்ப்புகளை கடந்த பிரம்மாண்ட GDP வளர்ச்சி! -
2047ல் இந்தியா வல்லரசு.. வாய்ப்பில்லை ராஜா! இன்னும் 34 வருஷமாகும்.. உண்மையை உடைத்த ஆய்வறிக்கை! -
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
"பொருளாதார சுனாமி.." ராகுல் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. சட்டென பாயிண்ட்டை பிடித்த பாஜக! மோதல் -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்? -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல்












Click it and Unblock the Notifications