பெரிய ட்விஸ்ட்.. திடீரென பாகிஸ்தானிடம் உதவி கேட்ட இந்தியா! மோதலுக்கு நடுவே என்ன நடந்தது?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நம் நாட்டுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே பிரச்சனை உள்ளது. இருநாடுகளும் எதிரெதிர் துருவங்களாக உள்ள நிலையில் திடீரென்று நம் நாடு, பாகிஸ்தானிடம் உதவி கோரியுள்ளது. கராச்சி துறைமுகத்தில் கடந்த 6 மாதங்களாக சிக்கி தவிக்கும் 6 இந்திய மாலுமிகளை மீட்க உதவி கோரியுள்ளது. இதனை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் உறுதி செய்துள்ள நிலையில் இந்திய மாலுமிகள் எப்படி கராச்சி துறைமுகம் சென்றது எப்படி? அதன் பின்னணி பற்றிய பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.

நம் நாட்டுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே பெரிய பஞ்சாயத்து உள்ளது. தற்போது இருநாடுகள் இடையே சுமூகமான உறவு இல்லை. கடந்த ஆண்டு நடந்த பஹல்காம் தாக்குதல், அதன்பிறகு பாகிஸ்தானுக்கு எதிராக நம் நாடு மேற்கொண்ட 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை உள்ளிட்டவற்றால் இருநாடுகள் இடையேயான உறவு மோசமாகி உள்ளது.

India Pakistan seafareres karachi port

இருநாடுகள் இடையேயான எல்லைகள் மூடப்பட்டு வர்த்தகம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி பாகிஸ்தான் விமானங்கள் நம் நாட்டின் வான்வெளி பரப்பை பயன்படுத்தவும், நம் நாட்டு விமானங்கள், பாகிஸ்தானின் வான்வெளி பரப்பை பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இப்படியான சூழலில் தான் திடீர் ட்ஸ்விட்டாக நம் நாடு பாகிஸ்தானிடம் உதவி ஒன்றை கோரியுள்ளது.

அதாவது பாகிஸ்தானில் உள்ள கராச்சி துறைமுகத்தில் 6 இந்திய மாலுமிகள் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக சிக்கி தவித்து வருகின்றனர். இவர்கள் ஈரான் நாட்டின் Kever ஷிப்பிங் நிறுவனத்தில் பணியாற்றி வந்தனர். இந்த கம்பெனியின் கப்பல் கடந்தஏப்ரல் 17 ம் தேதி பாகிஸ்தானின் கராச்சி துறைமுகத்திற்கு சென்றது.

இததொடர்பாக கப்பலில் Chief Officer ஆக பணியாற்றும் உத்தர பிரதேசத்தின் பிரக்யாக்ராஜ் பகுதியை சேர்ந்த வினித் கிசோர் மிஸ்ராவின் குடும்பத்தினர் கூறுகையில், ''வினித் கிசோர் மிஸ்ரா 2026 பிப்ரவரி 25ம் தேதி கெவர் ஷிப்பிங் நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்தார். அதன்பிறகு ஓமனில் இருந்து கராச்சி சென்ற அந்த கம்பெனியின் கப்பலில் பணியில் இணைந்தார். இந்த கப்பல் கராச்சி சென்றபோது அங்குள்ள துறைமுக அதிகாரிகளுக்கும், கப்பல்நிறுவனத்துக்கும் பிரச்சனை ஏற்பட்டது.

இதனால் கப்பல் கராச்சி துறைமுகத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 6 இந்திய மாலுமிகள் கப்பலிலேயே உள்ளனர். அவர்களின் பாஸ்போர்ட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு கப்பலில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. அவர்களை எங்களால் தொடர்பு கொள்ள முடியவில்லை. 15 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே பேச முடிகிறது. இதனால் 6 இந்திய மாலுமிகளையும் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று கூறினர். தற்போது மத்திய வெளியுறவுத்துறையிடம் உதவி கோரப்பட்டுள்ளது. 6 இந்தியர்களையும் எப்படியாவது மீட்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தான் பாகிஸ்தானில் தவித்து வரும் இந்திய மாலுமிகளை மீட்பது பற்றி மத்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வாலிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், ''இந்த விவகாரத்தில் பிரச்சனை என்பது கப்பலின் உரிமையாளருக்கும், கப்பலில் பணியாற்றிய ஊழியர்களுக்கும் இடையே உள்ளது. இதனால் கப்பலை சும்மா விட்டுவிட்டு வந்துவிட முடியாது. தற்போது பணியில் உள்ள ஊழியர்களுக்கு மாற்றாக மாற்று பணியாளர்கள் வந்தால் மட்டுமே அவர்களால் திரும்ப வர முடியாது.

இந்த பிரச்சனையை தீர்க்க நாங்கள் முயற்சித்து வருகிறோம். இதற்காக பாகிஸ்தானில் தவித்து வரும் இந்திய மாலுமிகளுடன் மத்திய அரசு தொடர்பில் உள்ளது. அவர்கள் பணியாற்றும் நிறுவனம் மற்றும் கப்பல் கம்பெனி ஏஜெண்ட்டுகளிடமும் தொடர்பில் இருக்கிறோம். இது ஊழியர்கள் மற்றும் கப்பல் நிறுவனம் இடையேயான பிரச்சனையாக இருந்தாலும் கூட பாகிஸ்தானிடம் தூதரக ரீதியாகவும் உதவி கோரப்பட்டுள்ளது'' என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+