பாகிஸ்தானின் கண்மணியை காலி செய்த இந்திய ஏவுகணை.. திக்கு தெரியாமல் சுற்ற போகிறார்கள்! போச்சு!
சென்னை: விமானப்படையின் கண்மணி என்று அழைக்கப்படும்.. கண்மணி என்றால் அன்போடு சொல்லும் கண்மணி அல்ல.. உண்மையான கண்ணின் மணி போன்ற அமைப்பு. அதாவது பாகிஸ்தான் விமானப்படையின் AWACS அமைப்பை இந்தியா அடித்து நொறுக்கி உள்ளது.
பொதுவாக விமானப்படையில் AWACS என்ற விமானமும் இருக்கும். AWACS என்றால் fr Airborne Warning and Control System ஆகும். அதாவது வானத்தில் பறக்கும் விமானப்படை விமானத்திற்கான ரேடார் சப்போர்ட் தொடங்கி பல விதமான சப்போர்டுகளை இது வழங்கும்.
இப்படி சொன்னால் பலருக்கும் புரியும்.. ஒரு நாட்டின் 5 போர் விமானங்கள் இன்னொரு நாட்டிற்குள் சென்று தாக்குகிறது என்று வைத்துக்கொள்வோம். இப்போது அந்த போர் விமானங்களின் பார்மேஷனில் இந்த AWACS பொருத்தப்பட்ட விமானம் ஒன்றும் இருக்கும்.

இந்த விமானம்தான் வழிகாட்டி. இப்படி போய் அடியுங்கள்.. அங்கே போய் அடியுங்கள்.. இப்போது உங்களை நோக்கி ஏவுகணை வருகிறது flares களை வெளியே விடுங்கள் என்று சொல்லும். AWACS எப்படி இதை சொல்கிறது என்று நீங்கள் கேட்கலாம்.
AWACSல் ரேடார் இருக்கும், நீண்ட தூரம் சர்வே செய்ய கூடிய சென்சார்கள், போர் கேமராக்கள் இருக்கும். அது ஒரு பறக்க கூடிய ஏர் டிராபிக் கண்ட்ரோல். அதாவது கண்கள் மூடப்பட்ட குதிரைக்கு ஆர்டர் போடும் ஜாக்கி. AWACS ஜாக்கி என்றால் மற்ற போர் விமானங்கள் கண்கள் மூடப்பட்ட குதிரைகள் ஆகும்.
AWACS என்ன செய்யும்?
விமானங்கள், ஏவுகணைகள் மற்றும் கப்பல்களை நீண்ட தூரத்தில் (பெரும்பாலும் 400 கி.மீ.க்கு மேல்) கண்டறியும் திறன் கொண்டது இது.
ஒரே நேரத்தில் பல இலக்குகளைக் கண்காணிக்கும்.
போர் நடவடிக்கைகளின் போது நட்பு விமானங்களை ஒருங்கிணைக்கும். அதாவது எந்த பார்மேஷனில் விமானங்கள் செல்ல வேண்டும் என்பதை இதுவே சொல்லும்.
விமான நடவடிக்கைகளுக்கான பறக்கும் கட்டளை மையமாக இது செயல்படுகிறது.
இந்த விமானம் இல்லையென்றால்.. கண்ணை கட்டி காட்டில் விட்டது போல ஆகிவிடும். போர் விமானங்கள் நூலறுந்த காத்தாடி போல ஆகிவிடும்.
எப்படி இயங்கும்?
ஒரு AWACS விமானம் சுழலும் ரேடார் கொண்டு இருக்கும். பொதுவாக விமான உடற்பகுதியின் மேல் பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும். அச்சுறுத்தல்களைக் கண்டறிந்து கண்காணிக்க ரேடார் 360 டிகிரி ஸ்கேன் செய்கிறது.
பாகிஸ்தான் விமானப்படையின் AWACS அமைப்பை இந்தியா அடித்து நொறுக்கி உள்ளது. அவர்களின் AWACS விமானத்தை இந்தியா வீழ்த்தி உள்ளது. பாகிஸ்தான் தற்போது ஒன்பது AWACS (வான்வழி முன் எச்சரிக்கை மற்றும் கட்டுப்பாட்டு அமைப்புகள்) விமானங்களை இயக்குகிறது. இதில் இந்திய எல்லைக்குள் அதாவது பஞ்சாப் உள்ளே நுழைய முயன்ற ஒரு AWACS விமானம் காலி செய்யப்பட்டது. பாகிஸ்தானின் 3 விமானங்கள் இன்று ஏவுகணைகள் மூலம் சுட்டு வீழ்த்தப்பட்டு உள்ளன . இரண்டு F-16 விமானங்கள் மற்றும் ஒரு JF-17 போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. அதில் AWACS விமானம் ஒன்றும் காலி செய்யப்பட்டது.
2006 ஆம் ஆண்டில், பாகிஸ்தான் நாடு ஸ்வீடனில் இருந்து நான்கு Saab-2000 Erieye AWACS களை ஆர்டர் செய்தது, அதைத் தொடர்ந்து 2008 ஆம் ஆண்டில் சீனாவிலிருந்து நான்கு ZDK-03 AWACS களை வாங்கியது. இருப்பினும், சீன வழங்கிய AWACS 2024 இல் ஓய்வு பெற்றது. 2017 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் தலா மூன்று Erieye விமானங்களை வாங்கியது. இதன் மூலம் பாகிஸ்தான் தனது AWACS படையை விரிவுபடுத்தியுள்ளது.
இன்று இந்தியா சுட்டு வீழ்த்தியது Saab-2000 Erieye ஆக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதனால் இன்று பாகிஸ்தான் போர் விமானங்கள் திக்கு தெரியாமல் திணறின. இதன் காரணமாகவே பாகிஸ்தான் விமானங்கள் இன்று தாக்குப்பிடிக்க முடியாமல் திணறின. இவர்களுக்கு வழிகாட்ட வானத்தில் awacs இல்லை.. இதனால் அடுத்தடுத்து இந்திய ஏவுகணைகள் மூலம் பாகிஸ்தான் விமானங்கள் எளிதாக வீழ்த்தப்பட்டன.
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு!












Click it and Unblock the Notifications