Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

காஷ்மீரையா குறிவைக்கிறீங்க? பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பை முடக்க ஐநாவில் காய் நகர்த்தும் இந்தியா

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் துப்பாக்கிச்சூடு நடத்தி 26 சுற்றுலா பயணிகளை கொன்ற லஷ்கர் இ தொய்பாவின் துணை அமைப்பான ‛தி ரெசிஸ்டண்ட் ஃப்ரண்ட்' பயங்கரவாத அமைப்பை ஐநாவின் பட்டியலிடப்பட்ட பயங்கரவாத அமைப்பாக அறிவிக்க தேவையான நடவடிக்கையை நம் நாடு தொடங்கி உள்ளது.

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த மாதம் 22ம் தேதி பயங்கரவாதிகள் நுழைந்து துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 26 சுற்றுலா பயணிகள் இறந்தனர். ஆண்களை மட்டுமே குறிவைத்து அந்த பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

Pakistan india un

இந்த தாக்குதலுக்கு டிஆர்எஃப் எனும் ‛தி ரெசிஸ்டண்ட் ஃப்ரண்ட்' பயங்கரவாத அமைப்பு பொறுப்பு ஏற்றது. இந்த அமைப்பு என்பது லஷ்கர் இ தொய்பா அமைப்பின் துணை அமைப்பாகும்.

இந்நிலையில் தான் லஷ்கர் இ தொய்பா அமைப்பின் துணை அமைப்பான ‛டிஆர்எஃப்' எனும் ‛தி ரெசிஸ்டண்ட் ஃப்ரண்ட்' என்ற அமைப்பை ஐநாவின் பட்டியலிடப்பட்ட பயங்கரவாத அமைப்பாக சேர்க்க நம் நாடு நடவடிக்கையை தொடங்கி உள்ளது. நம் நாட்டின் டெக்னிக்கல் டீம் இந்த பணியை மேற்கொண்டு வருகிறது. அமெரிக்காவின் நியூயார்க்கில் தற்போது அந்த டீம் உள்ளது.

ஐநாவால் தடை செய்யப்பட்ட குழுக்களை கண்காணித்து வரும் டீம் மற்றும் ஐக்கி நாடுகள் சபையின் பிற நட்பு நாடுகளுடன் நம் டீம் இன்று பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. அதன்பிறகு ஐநா சபையின் பயங்கரவாத எதிர்ப்பு அலுவலகம் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு குழுவின் நிர்வாக இயக்குநரகத்தில் உள்ள பிரதிநிதிகளையும் சந்திக்க உள்ளது.

இந்த சமயத்தில் பஹல்காம் தாக்குதல் தொடர்பாக ‛தி ரெசிஸ்டண்ட் ஃப்ரண்ட்'அமைப்புக்கு எதிராக முக்கிய ஆதாரங்கள் வழங்கப்படவும் வாய்ப்புள்ளது. தற்போதைய சூழலில் லஷ்கர் இ தொய்பா என்பது ஐநாவின் தடை செய்யப்பட்ட பயங்கரவாத பட்டியலில் இடம்பெற்றுள்ளது. அதேபோல் அதன் துணை அமைப்பையும் ஐநாவால் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பின் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்துவதற்கு முன்பு காஷ்மீரில் அமைதி நிலவி வந்தது. ஆனால் கடந்த மாதம் 22ம் தேதி 4 பயங்கரவாதிகள் பஹல்காமில் துப்பாக்கிச்சூடு நடத்தி 26 பேரை கொன்றனர். அதன்பிறகு நம் நாட்டுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 26 பேர் பலியானதற்கு கடந்த 7 ம் தேதி நம் நாடு பதிலடி கொடுத்தது. பாகிஸ்தான் உள்ளே ஏவுகணைகளை அனுப்பி கடந்த பயங்கர தாக்குதல் நடத்தியது.

பாகிஸ்தானில் 9 பயங்கரவாதிகள் முகாம்கள், 3 விமானப்படை தளங்கள் அழிக்கப்பட்டது. பாகிஸ்தான் பதிலடி கொடுக்க முயன்ற முயற்சிகள் முறியடிக்கப்பட்டன. அதன்பிறகு மீண்டும் நம் நாடு நடத்திய ஏவுகணை தாக்குதலில் பாகிஸ்தானின் 3 விமானப்படை தளங்கள் அழிக்கப்பட்டன. இந்த தாக்குதலில் பயந்துபோன பாகிஸ்தான் போரை நிறுத்த நம்மிடம் கெஞ்சியதை தொடர்ந்து மோதல் என்பது முடிவுக்கு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+