முக்கிய இலக்கை நோக்கி வந்த.. பாகிஸ்தானின் ஃபத்தா-1 ஏவுகணை.. தடுத்து அழித்த இந்தியா.. காத்த அரண்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பாகிஸ்தானின் ஃபத்தா-1 ஏவுகணையை தடுத்து நிறுத்தியது இந்திய பாதுகாப்பு படை. முக்கிய இலக்கை நோக்கிச் சென்ற ஃபத்தா-1 ஏவுகணை தடுத்து அழிக்கப்பட்டது. மேற்குப் பகுதியில் இந்திய வான் பாதுகாப்புப் படையினரால் இடைமறித்து அழிக்கப்பட்டது.

இந்த சம்பவம் எங்கே நடந்தது என்பது பற்றிய விவரங்கள் ராணுவ பாதுகாப்பு கருதி வெளியிடப்படவில்லை. மேற்குப் பகுதியில் முக்கிய இலக்கை நோக்கிச் சென்ற ஃபத்தா-1 ஏவுகணை அழிக்கப்பட்டதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பாகிஸ்தானில் இருந்து வரும் ஏவுகணைகளை தடுத்து எஸ்400 சுதர்சன் சக்ரா, Akash Missile System உள்ளிட்ட தடுப்பு அமைப்புகள் முறியடித்தது. ஆனால் என்ன மாதிரியான ஏவுகணை தடுப்பு அமைப்புகள் இதில் பயன்படுத்தப்பட்டன என்ற முழு விபரங்கள் வெளியாகவில்லை.

இதற்காக multi-layered air defence network முறை தடுப்பு நடவடிக்கை பயன்படுத்தப்பட்டு உள்ளது.

India Stops Pakistan Fattah 1 Missiles that came towards strategic places

பாகிஸ்தானின் தாக்குதலை ஏற்கனவே எதிர்பார்த்த இந்தியா.. multi-layered air defence network எனப்படும் பல அடுக்கு வான் பாதுகாப்பு வலையமைப்பை முழுமையாக செயல்படுத்தி உள்ளது. அதாவது போர் விமானங்கள் ரோந்து செல்வது.. ஹெலிகாப்டர்கள் தாழ்வாக ரோந்து செல்வது, ட்ரோன்கள் ஏவுகணைகளுடன் தயாராக இருப்பது, எஸ் 400 போன்ற ஏவுகணை மற்றும் ஏவுகணை மறிப்பு சிஸ்டங்கள் தயார் நிலையில் இருப்பது என்று பல கட்ட பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. அது எல்லாம் இப்போது கைகொடுத்துள்ளது.

இதுதான் மல்டி லேயர் ஏர் டிபன்ஸ் ஆகும். அதாவது ரேடார் முதலில் பாகிஸ்தானின் ஏவுகணைகளை கண்டுபிடிக்கும். அது உள்ளே வந்து தகவல் தரும். இதை எஸ்.400 தடுப்பு அமைப்புகள் உடனடியாக சுட்டு வீழ்த்தும். இன்னொரு பக்கம் போர் விமானங்கள் சிறிய அளவிலான டிரோன்களை வானத்திலே சுட்டு வீழ்த்தும்.

இப்படி மும்முனை தாண்டவத்தை நிகழ்த்தி ஜம்மு காஷ்மீரையும், பஞ்சாப்பையும் இந்திய படைகள் காத்து வருகின்றன.


எஸ் 400 களமிறங்கியது

எஸ்-40, கடந்த 1990 ஆண்டிலேயே உருவாக்கப்பட்டுவிட்டது. அப்போது இது எஸ்-300 என்று அழைக்கப்பட்டது. ரஷ்ய தயாரிப்பான இது தொடர்ந்து அப்டேட் செய்யப்பட்டு வந்தது. அதன்பின் 2007ம் ஆண்டில் முழுமையாக ரஷ்ய ராணுவத்தில் செயல்பாட்டிற்கு வந்தது.

இந்த எஸ்-400 ஏவுகணை மற்றும் ஏவுகணை தடுப்பு சிஸ்டம், 4 சிறிய ஏவுகணைகளை தனக்குள் உள்ளடக்கியது. தற்போது உலகில் இருக்கும் ஏவுகணை மற்றும் ஏவுகணை தடுப்பு அமைப்புகளில் மிகவும் வலிமை வாய்ந்தது இதுதான் என்று கூறப்படுகிறது. இதன் மூலம் ஒரே நேரத்தில் 300 டார்கெட்டுகளை தாக்கி அழிக்க முடியும். நான்கும் சேர்த்து வெவ்வேறு திசையில் சென்று தாக்க முடியும்.

வானத்தில் செல்லும் எதிரி நாட்டு போர் விமானங்களை தாக்கி அழிக்க கூடியது. அதோடு ரேடாரில் கண்டுபிடிக்க முடியாத ஸ்டெல்த் ரக விமானங்களையும் தாக்கி அழிக்க கூடியது. இதை இந்தியா வாங்கும் பட்சத்தில் அது பாகிஸ்தானுக்கும், சீனாவிற்கும் பெரிய பிரச்சனையாக இருக்கும். துல்லியம்தான் இதன் சிறப்பு.

அமெரிக்கா தனது நட்பு நாடுகளுடன் செய்திருக்கும் ஒப்பந்தத்தின் அடிப்படையில் ரஷ்யா, ஈரான், வடகொரியா ஆகிய நாடுகளிடம் இருந்து ஏவுகணைகளை வாங்க கூடாது. சில போர் கருவிகளை தவிர (விமானம் போன்றவை) மிகவும் சக்தி வாய்ந்த ஏவுகணை போன்ற கருவிகளை வாங்க கூடாது. இதை மீறி வாங்கினால் அந்நாட்டின் மீது பொருளாதார தடை விதிக்கப்படும். இதனால் சீனா மீது ஏற்கனவே அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது. அதையும் மீறி இந்தியா இதை வாங்கி உள்ளது. இதுதான் இந்தியாவிற்கு கைகொடுத்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+