BRICS: டாலருக்கு சம்மட்டி அடி.. இந்தியா எடுத்த முக்கிய மூவ்! அமெரிக்காவின் கதை முடிய போகுது

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்திய பொருட்களுக்கு 50% அளவுக்கு அமெரிக்கா வரியை போட்டிருக்கிறது. இதனால் இந்திய-அமெரிக்க வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் இந்தியா எடுத்த முக்கிய நடவடிக்கை அமெரிக்காவுக்கு கடுமையான பின்னடைவை ஏற்படுத்தும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது.

அதாவது பிரதமர் நரேந்திர மோடி ஏற்கெனவே பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வாவுடன் தொலைபேசியில் பேசிய நிலையில் தற்போது ரஷ்ய அதிபர் புதினுடனும் பேசியிருக்கிறார். அத்துடன், சீன அதிபர் ஜி ஜின்பிங் அதிபரை வரும் வாரங்களில் சந்திக்கவும் தயாராகி வருகிறார்.

BRICS US Tariff

இந்தியா-ரஷ்யா உறவு

புதினுடன் தான் பேசியது குறித்து சோஷியல் மீடியாவில் பதிவிட்டிருக்கும் பிரதமர் மோடி, "என் நண்பர் அதிபர் புதினுடன் மிகச் சிறந்த, விரிவான உரையாடல் நடைபெற்றது. உக்ரைன் தொடர்பான சமீபத்திய முன்னேற்றங்களைப் பகிர்ந்துகொண்டமைக்கு அவருக்கு நன்றி தெரிவித்தேன். எங்கள் இருதரப்பு நிகழ்ச்சி நிரலின் முன்னேற்றத்தையும் நாங்கள் ஆய்வு செய்தோம். இந்தியா-ரஷ்யா சிறப்பு மற்றும் சலுகை பெற்ற ராஜதந்திர ஒத்துழைப்பை மேலும் ஆழப்படுத்துவது குறித்து பேசினோம். இந்த ஆண்டு பிற்பகுதியில் அதிபர் புதினை இந்தியாவிற்கு வரவேற்க ஆவலுடன் உள்ளேன்" என்று கூறியுள்ளார்.

அமெரிக்கா வரி மேல் வரியை போட்டு தள்ளிக்கொண்டிருக்கும் நிலையில், இந்தியா பிரிக்ஸ் நாடுகளுடன் நெருக்கம் காட்டுவது நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா-பிரேசில் உறவு

புதினுடன் பேசியதை போலவே பிரேசில் அதிபருனுடனும் மோடி பேசியிருந்தார். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் இந்தியப் பொருட்களுக்கு விதிக்கப்படும் வரியை இரட்டிப்பாக்கும் உத்தரவை அமெரிக்கா வெளியிட்ட சில மணி நேரங்களிலேயே பிரேசிலுடன் உரையாடல் நிகழ்ந்தது என்பதுதான். நேற்றிரவு இரவு, பிரேசில் அதிபர் லூலா, மோடியைத் தொடர்புகொண்டு, அமெரிக்காவின் "தன்னிச்சையான வரி விதிப்பு" குறித்து விவாதித்தார். அத்துடன், பிரேசில் மற்றும் இந்தியாவுக்கு இடையே நெருக்கமான ஒருங்கிணைப்புக்கான சாத்தியக்கூறுகளையும் ஆராய்ந்தார். இரு நாடுகளுக்கும் 50% அமெரிக்க வரி விதிக்கப்பட்டுள்ளது. இதனால், "இந்த நடவடிக்கைகளால் அதிகம் பாதிக்கப்பட்ட இரண்டு நாடுகள்" இவை என்று லூலா குறிப்பிட்டார்.

பிரேசில் மூவ்

பிரிக்ஸ் அமைப்பில் இந்தியாவும், பிரேசிலும் மிக முக்கியமான நாடுகள். இந்த அமைப்புக்கு ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு நாடுகள் தலைமை ஏற்கும். இந்த ஆண்டு பிரேசில் தலைமை ஏற்றிருக்கும் நிலையில், அடுத்த ஆண்டு இந்தியா இந்த தலைமையை ஏற்க இருக்கிறது. இதற்கு ஆதரவு தெரிவித்த லூலா, அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இந்தியாவுக்கு வருமாறு மோடி விடுத்த அழைப்பை ஏற்றுக்கொண்டார். "நான் அதிபர் மோடியைத் தொடர்புகொள்வேன், சீன அதிபரை தொடர்புகொள்வேன். பின்னர் மற்ற அதிபர்களையும் தொடர்புகொண்டு இந்தச் சூழ்நிலையில் ஒவ்வொருவரும் என்ன செய்கிறார்கள் என்பதைப் பற்றி விவாதிப்பேன், அதனால் நாம் ஒரு முடிவை எடுக்க முடியும்" என்று லூலா இந்த வார தொடக்கத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இந்தியாவுக்கு முக்கியத்துவம்

மோடி-லூலா இடையே ஒரு மணி நேரம் உரையாடல் நடந்தது. இதில் வர்த்தகம், பாதுகாப்பு, எரிசக்தி, விவசாயம், அத்தியாவசிய கனிமங்கள், சுகாதாரம், தொழில்நுட்பம் போன்ற துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்த இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர். பிரேசில் துணை அதிபர் ஜெரால்டோ அல்க்மின், அமைச்சர்கள் மற்றும் வணிகத் தலைவர்களுடன் அக்டோபர் மாதம் இந்தியாவுக்கு வருகை தரவுள்ளார். அப்போது வர்த்தக கண்காணிப்பு வழிமுறை கூட்டத்தில் பங்கேற்பார்.

டிரம்ப் மீது விமர்சனம்

டிரம்பை வெளிப்படையாக விமர்சித்து வரும் லூலா, அமெரிக்க அதிபருடன் நேரடிப் பேச்சுவார்த்தை நடத்த மறுத்துவிட்டார். அத்தகைய பேச்சுவார்த்தை "அவமானத்தில்" முடிவடையும் என்று அவர் கூறினார். இதற்கு மாறாக, இந்தியா வாஷிங்டனுடன் வெளிப்படையான மோதலைத் தவிர்த்து வருகிறது. ஆனால், இந்த வரிகளை "நியாயமற்றது" என்று விவரித்துள்ளது.

பிரிக்ஸ் கரன்சி

இந்த உரையாடல் மூலம் அமெரிக்காவுக்கு இந்தியா ஒரு செய்தியை அனுப்பியிருக்கிறது. அதுதான் பிரிக்ஸ் கரன்சி. ஆம், பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையில் பொதுவான ஒரு கரன்சியை உருவாக்குவது குறித்து நீண்ட காலமாக பேச்சுக்கள் அடிப்பட்டு வருகின்றன. குறிப்பாக சீனா, பிரேசில் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் இதற்கு தீவிர ஆர்வம் காட்டி வருகின்றன. மற்ற நாடுகள் இந்த திட்டத்திற்கு போதிய ஆதரவை கொடுக்கவில்லை. இந்தியா இந்த யோசனையை முற்றிலுமாக எதிர்த்திருந்தது.

இந்தியாவின் மூவ்

இப்படி இருக்கையில் பிரேசில் அதிபருடன் மோடி பேசியிருப்பதன் மூலம் பிரிக்ஸ் கரன்சி குறித்து விவாதித்திருப்பார் என்று சந்தேகங்கள் எழுந்துள்ளது. ஏனெனில் ரஷ்யா, சீனாவை விட, பிரேசில்தான் எப்போ சான்ஸ் கிடைக்கும் என்று பிரிக்ஸ் கரன்சிக்கா எதிர்பார்த்து காத்திருக்கிறது. நீங்கள் 'உம்' என்று மட்டும் சொல்லுங்கள் மற்றதை நான் பார்த்துக்கொள்கிறேன். நாங்களே பிரிக்ஸ் கரன்சியை உருவாக்கி கொடுத்துவிடுகிறோம் என்று பிரேசில் கூறி வருகிறது.

பிரிக்ஸ் கரன்சியே வேண்டாம் என்று சொன்ன இந்தியா, பிரிக்ஸ் கரன்சி கண்டிப்பாக வேண்டும் என்று சொல்லும் பிரேசிலுடன் பேசியிருப்பது அமெரிக்காவுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரிக்ஸ் கரன்சி மட்டும் வந்தால், டாலர் டம்மியாகிவிடும். டாலருக்கான மதிப்பு மள, மளவென அப்படியே சரிந்துவிடும்.

இப்போது இந்தியாவுக்கு இருக்கும் வாய்ப்பும் இது ஒன்றுதான் என்பதால் அமெரிக்கா லைட்டாக ஜர்க்காகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+