ரகசிய கப்பலில்.. ரஷ்யாவுக்கு சென்ற இந்திய பெட்ரோல்! அமெரிக்காவுக்கு தெரியாமல் ஆட்டம்!
டெல்லி: உக்ரைனின் தாக்குதல் காரணமாக, ரஷ்யாவின் எண்ணெய் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், இந்த மாதம் இந்தியா ரகசியமாக கப்பலில் ரஷ்யாவுக்கு பெட்ரோலை சப்ளை செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் மட்டும் ரஷ்யாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது உக்ரைன் 32 முறை தாக்குதல் நடத்தியிருக்கிறது. அதாவது, இரண்டு நாட்களுக்கு ஒருமுறை தாக்குதல் நடத்தியது.

இதன் காரணமாக ஏராளமான எண்ணெய் உற்பத்தி நிலையங்கள் கடுமையாக சேதங்களை சந்தித்தன. எனவே ரஷ்யாவின் பெட்ரோல் உற்பத்தி 70% வரை சரிவடைந்திருக்கிறது. உலகின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் ஏற்றுமதி நாடான ரஷ்யாவுக்கே இந்த நிலைமையா? என்று மற்ற நாடுகள் பார்க்க தொடங்கின. இந்நிலையில் சொந்த நாட்டின் தேவைக்காக ரஷ்யா தற்போது பெட்ரோலை இறக்குமதி செய்ய தொடங்கியிருக்கிறது.
நாம் கடந்த காலங்களில் ரஷ்யாவிடமிருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய்யை வாங்கியிருக்கிறோம். எனவே தற்போது ரஷ்யாவுக்கு பெட்ரோலை சப்ளை செய்ய தொடங்கியிருக்கிறோம். கடந்த 2 மாதங்களில் மட்டும் இந்திய சுத்திகரிப்பு நிறுவனங்கள் 1 மில்லியன் பேரல் அளவுக்கு பெட்ரோலை ரஷ்யாவுக்கு அனுப்பி வைத்திருக்கிறது.
பெரும்பாலான பெட்ரோல் குஜராத்தில் உள்ள வாடினார் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்துதான் சென்றிருக்கிறது. இந்த நிலையத்தில் ரஷ்யாவின் ரோஸ்நெப்ட் நிறுவனம் பாதி பங்குகளை கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியா தற்போது தனது கச்சா எண்ணெய் தேவையில் 50%க்கும் மேல் ரஷ்யாவிடமிருந்துதான் இறக்குமதி செய்கிறது. இப்படி இறக்குமதி செய்யப்பட்ட எண்ணெய்யை பெட்ரோலாக பிரித்து மீண்டும் ரஷ்யாவுக்கே அனுப்பி வைத்திருக்கிறது.
ரஷ்யாவுக்கு பெட்ரோல் அனுப்ப சர்வதேச தடை மற்றும் கண்காணிப்பு இருப்பதால்.. ஆகஸ்ட் மாதத்தில் இந்தியாவிடமிருந்து ரஷ்யா இறக்குமதி செய்த பெட்ரோல் அனைத்தும் தடை விதிக்கப்பட்ட கப்பல்கள் மூலமாகவே கொண்டு செல்லப்பட்டிருக்கின்றன. இந்த கப்பல்கள் தங்களின் இருப்பிடத்தை காட்டும் AIS சிக்னல்களை ஆஃப் செய்துவிட்டு மத்திய தகை்கடல் பகுதியில் வைத்து ரகசியமாக பொருட்களை மாற்றிக்கொண்டுள்ளன.
இந்தியா மட்டுமல்லாது துருக்கி, மொராக்கோ ஆகிய நாடுகளும் ரஷ்யாவுக்கு பெட்ரோலை சப்ளை செய்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
