ஸ்காட்ச் விஸ்கிக்கு எகிறிய மவுசு! பிரான்ஸை முந்திய இந்தியர்கள்.. சீனாவே நமக்கு அப்புறம்தானாம்
என்னதான் இந்தியாவில் கோடிக்கணக்கில் ஸ்காட்ச் பாட்டில்களின் விற்பனை அதிகரித்தாலும், இந்திய சந்தையை பொறுத்த அளவில் இது வெறும் 2 சதவிகிதம்தான்.
டெல்லி: இங்கிலாந்தின் மிகப்பெரிய ஸ்காட்ச் விஸ்கியின் மார்க்கெட்டாக இந்தியா பரிணமித்திருக்கிறது. இதற்கு முன்னர் பிரான்ஸ் இந்த இடத்தில் இருந்த நிலையில் கடந்த ஆண்டு இந்தியா இதனை முந்தியுள்ளது. கடைசி 10 ஆண்டுகளில் இந்தியாவில் இங்கிலாந்தின் ஸ்காட்ச் இறக்குமதி சுமார் 200% வரை உயர்ந்திருக்கிறது.
ஸ்காட்லாந்தின் முன்னணி தொழில்துறை அமைப்பின் புள்ளிவிவரங்களின்படி, இந்தியா கடந்த 2021ம் ஆண்டை விட 2022ம் ஆண்டில் 60% அளவுக்கு அதிகமாக ஸ்காட்ச் விஸ்கியை இறக்குமதி செய்துள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து ஸ்காட்ச் விஸ்கி அசோசியேஷன் (SWA) கூறியதாவது, "கடந்த ஆண்டு பிரான்ஸ் சுமார் 20.5 கோடி 70cl ஸ்காட்ச் பாட்டில்களை இறக்குமதி செய்தது. ஆனால் இந்தியா, 21.9 கோடி 70cl ஸ்காட்ச் பாட்டில்களை இறக்குமதி செய்திருக்கிறது.
என்னதான் இந்தியாவில் கோடிக்கணக்கில் ஸ்காட்ச் பாட்டில்களின் விற்பனை அதிகரித்தாலும், இந்திய சந்தையை பொறுத்த அளவில் இது வெறும் 2 சதவிகிதம்தான். எனவே இந்த விற்பனையை அதிகரிக்க ஸ்காட்ச் விஸ்கி மீதான 150% கட்டண சுமையை குறைக்க வேண்டும் என்று இங்கிலாந்து வலியுறுத்தி வருகிறது. இதற்கு யுகே-இந்தியா எஃப்டிஏ ஒப்பந்தம் கையெழுத்தாக வேண்டும். இங்கிலாந்தை பொறுத்த அளவில் 2021ம் ஆண்டு நிலவரப்படி நிலையான ஸ்டாக் ஏற்றுமதியில் இந்தியா 5வது இடத்தில் இருந்தது.

2வது இடத்தில்
ஆனால் கடந்த ஆண்டு நிலவரப்படி 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இந்தியா தவிர, தைவான், சிங்கப்பூர் மற்றும் சீனாவிலும் ஸ்காட்ச் விஸ்கி ஏற்றுமதி கணிசமாக அதிகரித்திருக்கிறது. இந்த விற்பனை அதிகரிப்பானது ஸ்காட்ச் விஸ்கி தொழிலை அதிகரிக்க வைத்துள்ளது. இங்கிலாந்தில் இது சார்ந்த தொழிலாளர்களுக்கு அதிக அளவில் வேலை வாய்ப்பை உருவாக்கியுள்ளது. என்னதான் இந்தியா இரண்டாவது இடத்தில் இருந்தாலும் ஸ்காட்ச் விஸ்கியை அமெரிக்கர்கள்தான் அதிக அளவு விரும்புகின்றனர். தற்போது வரை அமெரிக்காதான் ஸ்காட்சி விஸ்கி இறக்குமதியில் முதல் இடத்தில் இருக்கிறது. எனவே நாங்கள் இந்த தொழிலில் அதிக அளவு முதலீடு செய்திருக்கிறோம்" என்று SWA தலைமை நிர்வாகி மார்க் கென்ட் கூறியுள்ளார்.

ஏற்றுமதி அதிகரிப்பு
இது குறித்து இங்கிலாந்தின் வர்த்தகத்துறை அமைச்சர் நைகல் ஹடில்ஸ்டன் கூறுகையில், "ஸ்காட்ச் விஸ்கி ஏற்றுமதி மிகவும் லாபம் தரக்கூடிய ஒரு தொழிலாகும். இது நாட்டின் பொருளாதாரத்திற்கும் குறிப்பிட்ட அளவு பங்காற்றுகிறது. மட்டுமல்லாது ஆயிரக்கணக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்குகிறது. தற்போது இந்தியா போன்ற நாடுகளில் இதற்கான சந்தை விரிவடைய தொடங்கியிருக்கிறது. எதிர் வரும் 2030ம் ஆண்டுக்குள் ஸ்காட்ச் விஸ்கி ஏற்றுமதி மேலும் அதிகரிக்கும் வாய்ப்பிருக்கிறது" என்று கூறியுள்ளார். ஸ்காட்ச் விஸ்கி அசோசியேஷனின் புள்ளிவிவரங்களின்படி கடந்த 2022ம் ஆண்டில் ஒவ்வொரு விநாடிக்கும் சுமார் 53 ஸ்காட்ச் விஸ்கி பாட்டில்கள் ஏற்றுமதியாகின்றன. இது 2021ம் ஆண்டில் 44 பாட்டில்களாக இருந்தது.

வேலை வாய்ப்பு
இந்த துறையானது நேரடியாக 11 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பை வழங்கியிருக்கிறது. இதில் 7 ஆயிரம் பேர் கிராமப்புறங்களை சேர்ந்தவர்களாவார்கள். மட்டுமல்லாது இது மறைமுகமாக சுமார் 42 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பை வழங்குகிறது. ஸ்டாக்ச் விஸ்கி நொதிக்கப்பட்ட தானிய கூழிலிருந்து வடிகட்டப்பட்டு தயாரிக்கப்படுகிறது. இவ்வாறு தயாரிக்கப்பட்ட ஸ்காட்ச் கருவேலி பீப்பாய்களில் அடைக்கப்பட்டு பதப்படுத்தப்படுகிறது. எந்த வகையான மரம் பயயன்படுத்தப்படுகிறது என்பதும், எந்த அளவுக்கு பக்குவமாக பதப்படுத்தப்படுகிறோம் எனபதும் ஸ்காட்ச் விஸ்கி தயாரிப்பில் முக்கியமானதாகும்.

சுவை
இந்த இரண்டு நடைமுறையும்தான் ஸ்காட்ச் விஸ்கியின் 60% சுவையை தீர்மானிக்கின்றன. அந்த வகையில் இங்கிலாந்திலிருந்து தயாரிக்கப்படும் ஸ்காட்ச் விஸ்கிக்கு நல்ல வரவேற்பு உண்டு. பாரம்பரிய முறையையும், அத்துடன் சில நவீன செயல்முறைகளையும் கலந்து இவர்கள் இதனை தயாரிக்கின்றனர்.
-
அதானிக்கு கிடைத்த மெகா அங்கீகாரம்.. உலகின் அழகான விமான நிலையங்கள் பட்டியலில் 2 இந்திய ஏர்போர்ட்டுகள் -
இந்தியாவை சூழும் புதிய பிரச்சனை! 64% நிலைமை மோசம்! சாட்டிலைட் படங்களில் தெரிய வந்த அதிர்ச்சி -
அலறும் சீனா - பாகிஸ்தான்.. இந்தியாவிடம் இனி வாலாட்ட முடியாது.. கைக்கு வந்த LRLACM ஏவுகணை.. வெற்றி -
இந்தியாவே இந்த 4 மாநிலத்தை தான் நம்பியிருக்கு.. உபி, பீகார் நிலைமை ரொம்ப மோசமா இருக்கே..! -
100% எத்தனால் எரிபொருள்.. கிரீன் சிக்னல் கொடுத்த மத்திய அரசு! பெரிய பிரச்சனை.. மக்களே உஷார்! -
60 எச்சரிக்கை.. 8 முறை விமானம் மூலம் வார்னிங்.. அமெரிக்கா தாக்குதலில் இந்தியர்கள் பலியானது எப்படி? -
இந்தியாவில் டெலிகாரம் செயலிக்கு தடை.. ஜூன் 22 வரை யூஸ் செய்ய முடியாது! நீட் லீக் விவகாரத்தில் அதிரடி -
ஹார்முஸை பத்திரமாக கடந்த முதல் இந்திய டேங்கர் திஷா.. அமைதி ஒப்பந்தம் வந்தவுடனேயே நடந்த மாற்றம்! -
இந்தியர்கள் உட்பட வெளிநாட்டினருக்கு மட்டும் தடை.. AI வைத்து அமெரிக்கா ஆடும் கேம்? பின்னணி -
கரப்பான் பூச்சி நிறுவனரை தாக்கிய ஆர்எஸ்எஸ் அமைப்பினர்? திப்கே பகிரங்க குற்றச்சாட்டு.. என்ன நடந்தது -
டாக்டர் சீட்டு இல்லையா? இனி சிரப் வாங்கவே முடியாது.. மத்திய அரசு புதிய கட்டுப்பாடு.. பின்னணி -
வளைகுடா போர் நிறுத்தத்தால் மிடில் கிளாஸ் மக்களுக்கு என்ன லாபம்? சத்தமில்லாமல் மாற போகும் 5 மேட்டர்












Click it and Unblock the Notifications