சபாஷ்! ஜப்பானை ஓவர்டேக் செய்த இந்தியா.. உலகின் 4வது மிக பெரிய பொருளாதாரமாக மாறியது!
டெல்லி: இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி சிறப்பாகவே இருப்பதாகக் கூறப்பட்டு வருகிறது. இதற்கிடையே உலகப் பொருளாதார தரவரிசையில் இந்தியா இப்போது ஜப்பானை ஓவர்டேக் செய்து 4வது இடத்தை பிடித்துள்ளது. மேலும், இதே நிலை தொடர்ந்தால் விரைவில் உலகின் மூன்றாவது மிகப் பெரிய பொருளாதாரமாக மாறும் வாய்ப்பும் கூட பிரகாசமாக இருப்பதாக நிதி ஆயோக்கின் சுப்ரணியம் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கத் தொடர்ச்சியாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. 1991ல் தாராளமயமாக்கல் கொள்கையை இந்தியா பின்பற்றத் தொடங்கியதில் இருந்தே பல்வேறு சீர்திருத்தங்கள் காலத்திற்கு ஏற்ப செய்யப்பட்டு வருகிறது.

பொருளாதார வளர்ச்சி
இதனால் இந்தியா பொருளாதார ரீதியாக வேகமாக வளர்ந்து வருகிறது. குறிப்பாகக் கடந்த சில ஆண்டுகளில் பொருளாதார வளர்ச்சி மிக வேகமாகவே இருக்கிறது. இதற்கிடையே உலகப் பொருளாதார தரவரிசையில் இந்தியா இப்போது ஜப்பானை ஓவர்டேக் செய்துள்ளது.
4வது இடத்தில் இந்தியா
ஜப்பானை முந்தி உலகின் நான்காவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறியுள்ளதாக நிதி ஆயோக்கின் தலைமை நிர்வாக அதிகாரி பி.வி.ஆர். சுப்ரமணியம் தெரிவித்தார். இப்போது நமது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 4 டிரில்லியன் டாலர்களாக உள்ள நிலையில், அமெரிக்கா, சீனா மற்றும் ஜெர்மனிக்கு பிறகு நான்காவது மிகப் பெரிய பொருளாதாரமாக இந்தியா உருவெடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
நிதி ஆயோக்கின் 10வது நிர்வாகக் குழு கூட்டத்திற்குப் பிறகு பேசிய சுப்ரமணியம், "உள்நாட்டில் எடுக்கப்பட்ட சீர்திருத்த நடவடிக்கைகள், இந்தியாவுக்கு ஆதரவாக இருக்கும் சர்வதேச சூழல் ஆகியவை காரணமாக இந்திய பொருளாதாரத்திற்கு நல்ல ஒரு சூழல் ஏற்பட்டுள்ளது. நாம் இப்போது உலகின் நான்காவது பெரிய பொருளாதாரமாக இருக்கிறோம். நாம் 4 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாறியிருக்கிறோம்" என்று சொன்ன அவர் சர்வதேச நாணய நிதியத்தின் ரிப்போர்ட்களை மேற்கோள் காட்டினார்.
விரைவில் 3வது இடம்
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "இப்போது அமெரிக்கா, சீனா மற்றும் ஜெர்மனி மட்டுமே நம்மை விட முன்னால் உள்ளன. நாம் இதே ரூட்டில் பயணித்தால் அடுத்த 2.5 முதல் 3 ஆண்டுகளில் மூன்றாவது மிகப் பெரிய பொருளாதாரமாக மாற முடியும்" என்றார்.
இப்போது சர்வதேச புவிசார் சூழல் வேகமாக மாறிக் கொண்டு இருக்கிறது. உலகின் பல்வேறு டாப் நிறுவனங்களும் சீனாவுக்குப் பதிலாக வேறு ஒரு உற்பத்தி மையத்தைத் தேடுகிறார்கள். இந்தச் சூழலில் இந்தியா தன்னை ஒரு மாற்று உற்பத்தி மையமாக முன்னிறுத்துகிறது. இந்தியா வேகமாகப் பொருளாதார வளர்ச்சி அடைய இதுவும் முக்கிய காரணமாக இருக்கிறது.
டிரம்ப்பால் சிக்கல் வருமா?
அதேநேரம் அதிபர் டிரம்ப் அமெரிக்காவில் தான் உற்பத்தியைச் செய்ய வேண்டும் எனக் கூறி வருகிறார்கள். குறிப்பாக ஐபோன் விவகாரத்தில் ஆப்பிள் நிறுவனம் இந்தியாவை விட்டுவிட்டு அமெரிக்காவில் தான் உற்பத்தி செய்ய வேண்டும் என டிரம்ப் வெளிப்படையாகவே பேசியிருந்தார். இது தொடர்பான கேள்விக்குப் பதிலளித்த சுப்ரமணியம், "அமெரிக்காவில் வரும் காலத்தில் வரிகள் எல்லாம் எப்படி இருக்கும் என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஆனால், அவை எப்படி இருந்தாலும் இந்தியா உற்பத்தி தளத்தில் மிக முக்கியமான இடத்தை கொண்டிருக்கிறது.
மேலும், அரசு சொத்துகளைப் பணமாக்கப் பல புதிய திட்டங்களை முன்னெடுத்து வருகிறோம். அரசு சொத்துகளை விற்கும் 2வது கட்ட நடவடிக்கையை விரைவில் தொடங்கவுள்ளோம்" என்றார்.
-
பெரிய சிக்கலில் இந்தியா! 1970ல் நடந்தது போல.. இப்போதும் நடக்கப்போகுது! வெளியான ஷாக் தகவல்! -
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம் -
ஹேப்பி நியூஸ்..சிலிண்டர் சிக்கல் இனி வராது! இந்தியாவுக்கு கைகொடுத்த ஈரான்! பாய்ந்து வரும் கப்பல்கள்! -
20% வரை சரிந்த தங்கம் விலை! ஆனாலும் இந்தியாவுக்கு முழு பலன் கிடைக்காது! நிபுணர்கள் சொல்லும் விளக்கம் -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications