ஒருவழியாக சீனாவை முந்தப்போகிறோம்.. பொருளாதார வளர்ச்சியில் இல்லை! முதலிடத்துக்கு முன்னேறும் இந்தியா
டெல்லி: உலக அளவில் மக்கள் தொகை அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் இருந்த சீனாவை பின்னுக்கு தள்ளி இந்தியா முதலிடம் பிடிக்க இருப்பதாக கணிக்கப்பட்டு உள்ளது. UNFPA எனப்படும் ஐக்கிய நாடுகளின் மக்கள் தொகை நிதியம் அமைப்பு இந்த தகவலை உறுதி செய்து இருக்கிறது.
ஐக்கிய நாடுகள் சபையின் கீழ் இயங்கி வரும் UNFPA எனப்படும் ஐக்கிய நாடுகளின் மக்கள் தொகை நிதியம் அமைப்பு உலகளவில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளின் விபரத்தை வெளியிட்டு இருக்கிறது. அதில் பல ஆண்டுகளாக முதலிடம் பிடித்து இருந்த சீனாவை இந்தியா முந்த உள்ளதாக கூறப்பட்டு உள்ளது.

அதாவது சீனாவை விட 29 லட்சம் பேர் அதிகம் உள்ளதாக அந்த அமைப்பு கூறி உள்ளது. 142.86 கோடி மக்கள் தொகையுடன் இந்தியா முதலிடத்திலும், 142.57 கோடி மக்கள் தொகையுடன் சீனா 2வது இடத்திலும் உள்ளது. UNFPA அமைப்பு வெளியிட்டு 2023 ஆம் ஆண்டுக்கான உலக மக்கள் தொகை அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
பல ஆண்டுகளாக இந்த பட்டியலில் முதலிடத்தில் சீனாவும் 2 வது இடத்தில் அதன் அண்டை நாடான இந்தியாவும் இருந்து வரும் நிலையில், சீனாவில் மக்கள் தொகை கட்டுப்பாட்டிற்கான பல்வேறு சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன. குறிப்பாக அதிகளவில் குழந்தை பெற்றுக்கொள்வதற்கு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டன. அதே நேரம் இந்தியாவில் இதற்கான கட்டுப்பாடுகள் இல்லை.

எனவே சீனாவை விட இந்தியாவில் மக்கள் தொகை அதிகரித்து ஒருநாள் அந்த பட்டியலில் முதலிடம் பிடிக்கும் என்று பல ஆண்டுகளாக பேசப்பட்டு வந்தது. அந்த ஒருநாள் இன்றுதான் என்று சொல்லும் அளவிற்கு UNFPA வெளியிட்டு உள்ள அறிக்கை இருக்கிறது. இதுகுறித்து UNFPA தெரிவிக்கையில், எப்போது மக்கள் தொகையில் முந்தியது என்ற நாளை குறிப்பிடுவதற்கு வாய்ப்பு இல்லை.
2011 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை உலகம் முழுவதும் இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் நடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் ஆனால், கொரோனா ஊரடங்கு நடவடிக்கைகள் காரணமாக இந்த பணிகள் தாமதமானதாகவும் ஐநா அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். இந்தியா மற்றும் சீனாவில் உள்ள மக்கள் தொகையை சேர்த்தால் உலகில் மூன்றில் ஒரு பங்கு மக்கள் தொகையை விட அதிகம்.

உலக மக்கள் தொகையை பொறுத்தவரை 804 கோடியாக அதிகரித்து உள்ளது. அதே நேரம் இந்தியா மற்றும் சீனாவில் மக்கள் தொகை பெருக்க விகிதம் குறைந்து இருப்பதாகவும், அதே நேரம் இந்தியாவை விட சீனாவில் தற்போது மக்கள் தொகை பெருக்க விகிதம் அதிகரித்து உள்ளதாகவும் கூறப்படுகிறது.
கடந்த 60 ஆண்டுகளில் முதல் முறையாக கடந்த ஆண்டு சீனாவில் மக்கள் தொகை எண்ணிக்கை குறைந்தது. கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் இந்தியாவில் மக்கள் தொகை எண்ணிக்கை 1.2 சதவீதம் அதிகரித்து வருகிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் இந்த விகிதம் 10 சதவீதம் அதிகரித்து உள்ளதாக அரசு தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
கொஞ்சம் கூட பொறுப்பே இல்லை.. அமெரிக்காவுக்கு கடும் கண்டனம் தெரிவித்த சீனா! -
அமெரிக்க போர் கப்பல்கள் கண்ணில் மண்ணை தூவிய சீனா.. அசால்டாக ஹார்முஸை கடந்து பயணம்! அது எப்படி -
ஈரான் போர்.. இடியாப்ப சிக்கலில் மாட்டிக்கொண்ட சீனா.. டிரம்ப் வைத்த செக்! -
பாகிஸ்தான் சட்டையை பிடிக்கும் அமீரகம்! "அந்த ₹25,000 கோடியை உடனே திருப்பி தாங்க.." எகிறும் நெருக்கடி -
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ்












Click it and Unblock the Notifications