இந்தியா டுடே டாப் 10 அரசியல் தலைவர்கள்.. முதல் இடத்தில் மோடி.. 8வது இடத்தில் ஸ்டாலின்
டெல்லி: இந்தியா டுடே பத்திரிகை தமிழ்நாட்டின் அரசியல் கட்சி தலைவர்களின் டாப் 10 பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் பிரதமர் நரேந்திர மோடி முதலிடத்தில் உள்ளார். எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி நான்காவது இடத்திலும் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் எட்டாவது இடத்திலும் உள்ளனர்.
இந்தியா டுடே பத்திரிகை ஒவ்வொரு ஆண்டும் ஆளுமை மிக்க அரசியல் கட்சி தலைவர்களின் டாப் 10 பட்டியலை வெளியிட்டு வருகிறது. அதன்படி 2024 ஆம் ஆண்டுக்கான அரசியல் கட்சித் தலைவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் தாக்கம் அடிப்படையில் இந்தப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல் அரசியலில் பல்வேறு தாக்கத்தை ஏற்படுத்தியது. பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காதது, இந்தியா கூட்டணி பலமான எதிர்க்கட்சியாக உருவானது, நிதிஷ்குமார், சந்திரபாபு நாயுடு முக்கிய தலைவர்களாக உருவானது, இந்தியா கூட்டணியின் முக்கிய தலைவராக மு.க.ஸ்டாலின் இருந்தது என்று பல அம்சங்கள் உள்ளன.
அந்த வகையில் இந்தியா டுடே வெளியிட்டுள்ள 2024 ஆம் ஆண்டுக்கான டாப் 10 அரசியல் தலைவர்கள் பட்டியலில், பிரதமர் நரேந்திர மோடி முதலிடத்தில் உள்ளார். ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் இரண்டாவது இடத்திலும், உள்துறை அமைச்சர் அமித்ஷா மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி நான்காவது இடத்தில் உள்ளார். தேசிய ஜனநாயக கூட்டணியின் முக்கிய தூண்களாக உள்ள ஆந்திரா மாநிலம் முதல்வர் சந்திரபாபு நாயுடு ஐந்தாவது இடத்திலும், பீஹார் மாநிலம் முதல்வர் நிதிஷ் குமார் ஆறாவது இடத்திலும் இருக்கிறார்கள்.
உத்தரப்பிரதேச மாநிலம் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஏழாவது இடத்தில் உள்ளார். இந்தப் பட்டியலில் தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் எட்டாவது இடத்தில் உள்ளார். மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி ஒன்பதாவது இடத்திலும், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் பத்தாவது இடத்திலும் இருக்கின்றனர்.
அந்தக் கட்டுரையில் நரேந்திர மோடியை வரலாற்று சாதனை படைத்தவர் என பாராட்டியுள்ளனர். ஜவஹர்லால் நேருவுக்கு பிறகு பிரதமர் பதவியில் தொடர்ந்து மூன்றாவது முறை அமர்ந்த பெருமைக்கு சொந்தக்காரர். நாடாளுமன்ற தேர்தலில் எதிர்பார்த்த ஆளுமை கிடைக்காவிடினும் ஹரியானா சட்டமன்ற தேர்தலில் மோடியின் ஆளுமையால் நிரூபிக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளனர்.
மோடி 3.0 அரசாங்கம் அமைய முக்கிய காரணமாக இருந்தவர் என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்தை பாராடியுள்ளனர். தி ஸ்ட்ராங் மேன். பாஜகவின் வலிமையான முகம் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை பாராட்டியுள்ளனர். மோடிக்கு எதிரான தலைவராக முன்னிறுத்தப்பட்டு, அதில் வெற்றியின் அருகில் வந்தவர் என எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியை பாராட்டியுள்ளனர்.
ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடுவை ஃபீனிக்ஸ் பறவை என்றும், பீஹார் முதல்வர் நிதிஷ் குமாரை கிங் மேக்கர் என்றும் பாராட்டியுள்ளனர். உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை, உத்தரப்பிரதேசத்தை நீண்ட காலம் ஆண்ட முதல்வர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் என பாராட்டு தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலினை, தென்னிந்திய அரசியலை தன் கோட்டையாக கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர். மொழி தடங்களால் அவரின் பேச்சு வடக்கில் புரியாமல் இருந்திருக்கலாம். ஆனால் அவர் வைத்த அரசியல் முழக்கம் டெல்லி வரை எதிரொலித்தது.
நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணியை ஸ்வீப் அடிக்க வைத்து, தென்னிந்தியாவில் இந்தியா கூட்டணி முன்னிலை பெற முக்கிய காரணமாக இருந்தவர் என்றும் இந்தியா டுடே பாராட்டு தெரிவித்துள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications