ஆசியாவின் பெஸ்ட் பல்கலைக்கழகங்கள்.. டாப் இடத்தில் இந்தியா.. சீனாவால் நெருங்கவே முடியல தெரியுமா! செம
டெல்லி: சிறந்த பல்கலைக்கழகங்களைக் கொண்ட க்யூ.எஸ் ரேங்கிங் என்ற தரவரிசை பட்டியலில்ல இந்தியா வேற லெவல் சாதனையைப் படைத்துள்ளது. ஆசியாவிலேயே டாப் இடத்தில் இந்திய பல்கலைக்கழகங்கள் பிடித்துள்ளன.
இந்தியா கல்வித் துறையில் மிகப் பெரிய பாய்ச்சலை மேற்கொண்டு வருகிறது. கல்வித் துறையை மேம்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இதனால் கல்வித் துறையில் இந்தியா சமீப ஆண்டுகளில் பெரிய மாற்றத்தை அடைந்து இருக்கிறது.

அதிலும் குறிப்பாக உயர் கல்வியில் கடந்த சில ஆண்டுகளில் நாம் மிகப் பெரிய முன்னேற்றத்தை அடைந்து வருகிறோம். பள்ளி முடித்து கல்லூரியில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அமெரிக்கா போன்ற நாடுகளில் குறைந்து வரும் நிலையில், இந்தியாவில் அது வேகமாக அதிகரித்து வருகிறது.
கல்வி நிறுவனங்கள்: இது நாம் உயர் கல்விக்கு எந்தளவுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறோம் என்பதைக் காட்டுவதாக இருக்கிறது. இதற்கு ஒரு சாட்சியாக இப்போது முக்கியமான ரேங்கிங் ஒன்று வெளியாகியுள்ளது. ஆசிய அளவில் இருக்கும் பல்கலைக்கழகங்களை அடிப்படையாக வைத்து QS பல்கலைக்கழக தரவரிசை பட்டியல் ஒவ்வொரு ஆண்டும் வெளியிடப்படும். இதில் இந்தாண்டிற்கான ரேங்கிங்கில் உலக நாடுகளை இந்தியா கவனிக்க வைத்துள்ளது.
இந்தியா ஆதிக்கம்: சமீபத்தில் வெளியான இந்த QS ரேங்கிங்கில் சீனாவை இந்தியா ஓவர்டேக் செய்துள்ளது. இந்த லிஸ்டில் அதிகபட்சமாக இந்தியாவில் இருந்து மொத்தம் 148 பல்கலைக்கழகங்கள் இடம் பெற்றுள்ளன. அதாவது முந்தைய ஆண்டை காட்டிலும் கூடுதலாக 37 பல்கலைக்கழகங்கள் இதில் இருக்கிறது. சீனாவில் இருந்து 133 பல்கலைக்கழகங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், அதை ஓவர்டேக் செய்துள்ள இந்தியா முதல் இடத்தை பிடித்துள்ளது. ஜப்பான் 96 பல்கலைக்கழகங்கள் உடன் 3ஆவது இடத்தில் இருக்கிறது.
டாப் 50: இதில் டாப் 50 இடங்களில் ஐஐடி பாம்பே மற்றும் ஐஐடி டெல்லி ஆகியவை இடம்பெற்றுள்ளன. மேலும், டாப் 100இல் மேலும் ஐந்து இந்திய நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன. மொத்தம் 25 நாடுகளில் இருந்து 856 கல்வி நிறுவனங்கள் இந்த ரேங்கிங்கில் உள்ளது. இந்த லிஸ்டில் இந்தாண்டு இந்தியாவில் இருந்து 37 பல்கலைக்கழகங்கள் புதிதாக இருக்கிறது. அதேநேரம் சீனாவில் இருந்து வெறும் ஏழு பல்கலைக்கழகங்கள் மட்டுமே புதிதாக இடம்பிடித்துள்ளன.
இந்தியா தற்போது உயர் கல்வியில் கவனம் செலுத்தி வருவதையே இந்த ரேங்கிங் காட்டுவதாக வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள். மேலும், இதில் முக்கிய பிரிவுகளில் இந்தியாவின் செயல்பாடுகள் கலவையாகவே இருக்கிறது. Academic Reputation மற்றும் நிறுவனங்களின் விருப்பத் தேர்வு ஆகிய இரண்டிலும் இந்தியா ஆசிய அளவில் ஒப்பிடும் போது சராசரிக்குக் கீழே இந்தியா இருக்கிறது.

இந்தியா டாப்: அதேநேரம் முனைவர் பட்டம் வைத்திருக்கும் பேராசிரியர்கள் சராசரியில் இந்தியா சராசரியைக் காட்டிலும் இரண்டு மடங்கு அதிகமாகவே இருக்கிறது. இது இந்தியக் கல்வி நிறுவனங்கள் மிகச் சிறந்த பேராசிரியர்களைக் கொண்டு இருப்பதையே காட்டுகிறது. மேலும், சர்வதேச ஆய்வுகளில் இந்தியாவின் சராசரி ஆசியச் சராசரியுடன் சற்று குறைவாக இருக்கிறது. இப்படிப் பல முக்கிய துறைகளில் இந்தியா டாப் இடத்தில் இருக்கிறது.
மேலும், வெளிநாடுகளுக்குச் சென்று படிக்கும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இது இந்திய மாணவர்கள் உயர்கல்விக்கு எந்தளவுக்கு முக்கியத்துவம் தருகிறார்கள் என்பதையே காட்டுவதாக இருக்கிறது.












Click it and Unblock the Notifications