அதுமட்டும் நடக்க கூடாது.. கடைசியாக முயற்சிக்கும் இந்தியா.. நேபாளத்திற்கு எதிராக இந்தியாவின் அஸ்திரம்
நேபாளத்தின் புதிய மேப்பிற்கு அந்நாட்டு பாராளுமன்றத்தில் முழு அங்கீகாரம் கிடைக்கும் முன் கடைசி கட்டமாக பேச்சுவார்த்தை மூலம் பிரச்சனையை தீர்க்க இந்தியா முயன்று வருகிறது.
டெல்லி: நேபாளத்தின் புதிய மேப்பிற்கு அந்நாட்டு பாராளுமன்றத்தில் முழு அங்கீகாரம் கிடைக்கும் முன் கடைசி கட்டமாக பேச்சுவார்த்தை மூலம் பிரச்சனையை தீர்க்க இந்தியா முயன்று வருகிறது.
இந்தியா - நேபாளம் இடையிலான உறவு மொத்தமாக முறியும் நிலையில் இருக்கிறது. நேபாளத்தின் புதிய மேப் மட்டும் அந்நாட்டு அரசின் முழு அங்கீகாரத்தை பெற்றால், இரண்டு நாட்டு உறவு மொத்தமாக முறிந்துவிடும். ஆனால் இதை தடுக்க இந்தியா முயன்று வருகிறது.
இரண்டு நாட்டு உறவில் சிக்கல் ஏற்படாத வகையில் இந்தியா சில மூவ்களை செய்து வருகிறது. ராஜாங்க ரீதியாக மனஸ்தாபங்களை சரி செய்ய இந்தியா முடிவு எடுத்துள்ளது.

எப்படி வந்த சண்டை
இந்தியாவில் இருக்கும் லிபு லேக் பகுதியை தங்களுக்கு சொந்தமானது என்று நேபாளம் சொந்தம் கொண்டாடி வருகிறது.அங்கு இந்தியா அமைத்த சாலைக்கு நேபாளம் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. இதுதான் சண்டைக்கு காரணம். இந்தியாவை எதிர்க்க முடிவு செய்த நேபாளம் இதற்காக மேப் ஒன்றையும் வெளியிட்டு இருக்கிறது. இந்தியாவில் இருக்கும் லிபு லேக், லம்பியாதூரா, கலபாணி ஆகிய பகுதிகளை நேபாளம் உள்ளே கொண்டு வந்து வரைபடமாக அந்த நாடு வெளியிட்டது.

நிறைவேறியது
இதை அந்நாட்டின் இரண்டு அவைகளிலும் பிரதமர் சர்மா தாக்கல் செய்துள்ளார். இந்த புதிய வரைபடம் நேற்று அந்நாட்டு பாராளுமன்றத்தில் கீழ் அவையில் நிறைவேற்றப்பட்டது. ஆளும் கட்சி, எதிர்க்கட்சி இரண்டும் புதிய வரைபடத்திற்கு ஆதரவு தெரிவித்தது. இதனால் மசோதா ஒரு மனதாக நிறைவேறியது. இனி இந்த மேப் மேலவையில் நிறைவேற்றப்பட வேண்டும். ஆனால் அது வெறும் சம்பிரதாயம்தான்.

இந்தியா முயற்சி
ஆனால் இந்த மேப்பிற்கான முழு அனுமதி கிடைக்கும் முன் பேச்சுவார்த்தை மூலம் அதை தீர்க்க இந்தியா முடிவு செய்துள்ளது. பேச்சுவார்த்தை மூலம் சுமுகமான தீர்வை கொண்டு வர இந்த முடிவு எடுத்து உள்ளது. இதற்கான தூது மற்றும் ராஜாங்க ரீதியான நடவடிக்கைகளை இந்தியா கடைசி கட்டமாக எடுத்து வருகிறது. வரைபடத்தை அமலுக்கு கொண்டு வர வேண்டாம், வாங்க பேச்சுவார்த்தையில் ஈடுபடலாம் என்று இந்திய அழைப்பு விடுத்துள்ளது.

இப்போது வேண்டாம்
இப்போது வரைபடத்தை நிறைவேற்ற வேண்டாம். முதலில் பேசலாம். அதன்பின் எந்த விதமான முடிவாக இருந்தாலும் எடுத்துக் கொள்ளலாம் என்று இந்திய வெளியுறவுத்துறை, நேபாளத்தின் வெளியுறவுத்துறைக்கு தெரிவித்து உள்ளது. ஆனால் நேபாளம் இதற்கு இன்னும் எந்த விதமான கருத்தும் தெரிவிக்கவில்லை. இந்தியாவின் கடைசி முயற்சியாக இது இருக்கும். இனி இந்தியாவும் இறங்கி போகாது என்று கூறுகிறார்கள்.

ஆனால் என்ன
இந்தியா இப்படி பேச்சுவார்த்தைக்கு முயலும் நிலையில் இன்னொரு பக்கம் புதிய மேப்பிற்கான சட்ட திருத்த மசோதாவை மேலவையில் தாக்கல் செய்ய நேபாளம் முனைப்பு காட்டி வருகிறது. சாதாரணமாக மசோதாவை நிறைவேற்றாமல் வேகமாக, துரித கதியில் நிறைவேற்ற முடிவு செய்துள்ளது. அதாவது மேலவையில் விவாதம் எதுவும் இன்றி மசோதாவை நிறைவேற்றி அதிபர் ஒப்புதலுக்கு அளிக்க முடிவு செய்துள்ளது.
Recommended Video

என்ன அழுத்தம்
யாரோ கொடுக்கும் அழுத்தத்தின் கீழ் செயல்படுவது போல நேபாளம் செயல்படுகிறது. இந்தியா பலமுறை பேச்சுவார்த்தைக்கு அழைத்தும் கூட நேபாளம் அதற்கு செவி மடுக்கவில்லை. இந்தியா பேச்சுவார்த்தைக்கே அழைக்கவில்லை என்றும் கூட நேபாளம் பொய் சொன்னது. இந்த நிலையில் இந்தியா கடைசியாக அமைதியாக செல்ல முயன்று வருகிறது.

ராஜ்நாத் சிங் என்ன சொன்னார்
நேபாளத்தின் இந்த முடிவு இந்தியாவை கோபம் அடைய வைத்துள்ளது. இது தொடர்பாக பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசுகையில், நேபாளம் தவறாக புரிந்து கொண்டு இருக்கிறது. லிபுலேக் பகுதியில் நாங்கள் அமைத்த சாலை குறித்து சந்தேகம் இருந்தால் எங்களிடம் நேராக பேசலாம். பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணலாம். நம்முடைய உறவு என்பது சாதாரண உறவு இல்லை. இதை நாம் உடைக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும், என்று ராஜ்நாத் சிங் தெரிவித்து இருக்கிறார்.
-
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications