இந்தியாவில் எந்தெந்த பொருட்களின் விலை குறையும்? அமெரிக்கா உடனான வர்த்தக ஒப்பந்தத்தால் குட்நியூஸ்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட வர்த்தக ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக வர்த்தக பற்றாக்குறையை காரணம் காட்டி விதித்த வரி 25 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைப்பதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். இதற்கு கைமாறாக அமெரிக்காவுக்கான வரியையும் நம் நாடு குறைக்க திட்டமிட்டுள்ளது. இந்த வரி குறைப்பால் நம் நாட்டில் விலை குறைய வாய்ப்புள்ள பொருட்களின் லிஸ்ட் வெளியாகி உள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நம் நாட்டுக்கு 50 சதவீத வரியை விதித்தார். அமெரிக்கா உடனான வர்த்தகப்பற்றாக்குறைக்கு 25 சதவீதம், ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதற்கு 25 சதவீதம் என்று மொத்தம் 50 சதவீதம் வரி விதிக்கப்பட்டது. இதனால் நம் நாட்டில் இருந்து அமெரிக்காவுக்கான ஏற்றுமதி சரிவை சந்தித்தது.

India US trade deal donald trump pm modi

இந்த பிரச்சனையை தீர்க்க இருநாடுகள் இடையே புதிய வர்த்தக ஒப்பந்தம் செய்வது தொடர்பான பேச்சுவார்த்தை நடந்து வந்தது. ஆனால் முடிவு எட்டப்படாமல் இருந்தது. இந்நிலையில் தான் டொனால்ட் டிரம்ப் - பிரதமர் மோடி ஆகியோர் நேற்று தொலைபேசியில் உரையாடினர். இருநாடுகளின் வர்த்தகம் பற்றி பேசினர்.

18 சதவீதமாக வரி குறைப்பு

அதன்பிறகு டொனால்ட் டிரம்ப் தனது ட்ரூத் வலைதளத்தில் வெளியிட்ட அறிவிப்பில், இந்தியா மீது விதிக்கப்பட்ட வர்த்தக பற்றாக்குறைக்கான வரி 25 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குகை்கப்பட்டுள்ளது என்று அறிவித்தார். அதோடு ரஷ்யாவுக்கு பதில் அமெரிக்கா, வெனிசுலாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்கும். மேலும் 500 பில்லியன் டாலர் மதிப்புள்ள ஒப்பந்தத்தை செய்வதாக உறுதியளிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவும் குறைக்கிறது?

அதேபால், அமெரிக்கா பொருட்கள் மீதான வரியை பூஜ்ஜியமாக குறைக்க இந்தியா முன்வரும் என்றும் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளது. இந்த வரி குறைப்பால் தற்போது நம் நாட்டில் இருந்து அமெரிக்காவுக்கான ஏற்றுமதி அதிகரிக்கும். மேலும் அமெரிக்காவின் எரிபொருள், விவசாயம் உள்பட பல்வேறு துறைகளைசார்ந்த பொருட்களுக்கான வரியை நம் நாடு குறைக்கும் என்று டிரம்ப் கூறியுள்ளார்.

இந்தியாவுக்கு என்ன லாபம்?

அதன்படி பார்த்தால் அமெரிக்காவில் இருந்து ஏராளமான பொருட்கள் நம் நாட்டின் சந்தைக்கு விற்பனைக்கு வரும். இதனால் இங்கு சில முக்கிய பொருட்களின் விலைகள் குறைய வாய்ப்புள்ளது. அமெரிக்கா விவசாய பொருட்களை அதிகளவில் நம் நாட்டுக்கு ஏற்றுமதி செய்ய வாய்ப்புள்ளது. இதனால் பருப்பு, பால், மக்காச்சோளம் உள்ளிட்டவற்றின் விலைகள் குறைய வாய்ப்புள்ளது. அதேபோல் பதப்படுத்தப்பட்ட உணவுகளின் விலையும் வீழ்ச்சியடையும்.

விலை குறையும் பொருட்கள்

இதுதவிர லேப்டாப்புகள், எலக்ட்ரானிக் சாதனங்கள், பாக்கெட்டில் அடைக்கப்பட்ட பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்களின் விலைகள் குறைய வாய்ப்புள்ளது. தற்போது நம் நாட்டில் பல பொருட்களின் விலைகள் கிடுகிடுவென அதிகரித்து வருகிறது. இப்படியான சூழலில் இந்த பொருட்களின் விலை குறைவது பொதுமக்களுக்கு நிம்மதியை கொடுக்கும்.

அமெரிக்காவுக்கு என்ன பலன்?

அதேவேளையில் நம் நாட்டில் இருந்து அமெரிக்காவுக்கு துணிகள், நகைகள், இரும்பு ரசாயனங்கள் உள்ளிட்டவை அதிகளவில் ஏற்றுமதியாக வாய்ப்புள்ளது. இதனால் இந்த பொருட்களின் விலைகள் அமெரிக்காவில் குறைய வாய்ப்புள்ளது. ஆனாலும், அலுமினியம், காப்பர், வாகன உதிரிபாகங்களின் விலைகள் அப்படியே இருக்கும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+