ஒன்றரை டன் வெயிட்.. 600 கிமீ தூரம் செல்லும்.. பெயரே சூறாவளிதான்! இந்தியா ஏவிய ஏவுகணை பற்றி தெரியுமா?
டெல்லி: ஆபரேஷன் சிந்தூரின் ஒரு பகுதியாக பாகிஸ்தான் உள்ளே இந்தியாவின் முப்படைகள் தாக்கி உள்ளன. இந்தியாவின் எல்லையில் இருந்து கொண்டே முப்படைகள் தாக்கி உள்ளன. இதில் சூறாவளி ஏவுகணை ஒன்றும் பயன்படுத்தப்பட்டது.
இந்தியாவில் Nagastra-1 எனப்படும் "Suicide Drones" உள்ளது. இதை கடற்படை வழியாக ஏவி உள்ளனர். இதை இந்தியா சுசைட் ஏவுகணைகள் , "Suicide Drones" என்று அழைப்பார்கள். இதை loitering munitions என்றும் அழைப்பார்கள். அதாவது இங்கும் அங்கும் மாறி மாறி மிதந்து சென்று அதன்பின்னர் தாக்கும் ஏவுகணைகள்.
இதை கடற்படை வழியாக இந்திய எல்லையில் இருந்து ஏவி உள்ளனர்.
அதேபோல் இந்திய எல்லையில் இருந்து தரைப்படை வழியாக நீண்ட தூரம் செல்லும் ஏவுகணைகள் ஏவப்பட்டு உள்ளன. அதேபோல் ரபேல் விமானங்களை பயன்படுத்தி.. இந்திய எல்லையை கடக்காமல் SCALP எனப்படும் storm வகை ஏவுகணைகளை ஏவி உள்ளனர்.
அதாவது ரபேல் விமானங்களை இந்திய எல்லைக்கு கொண்டு சென்று, பாகிஸ்தான் எல்லைக்கு செல்லாமல்.. இங்கிருந்து SCALP cruise missiles மற்றும் HAMMER ஆயுதங்களை ஏவி உள்ளனர்.

புயல் என்று அழைக்கப்படும் SCALP cruise missilesன் இன்னொரு பெயர் Storm Shadow ஆகும். பிரான்ஸ் - பிரிட்டிஷ் மூலம் உருவாக்கப்பட்ட ஏவுகணை ஆகும். நீண்ட தூர வான்வழி ஏவப்பட்டகூடிய ஏவுகணை ஆகும். வானத்தில் இருந்தே இதை ஏவ முடியும். இந்தியா இதை பிரான்சிடம் இருந்து வாங்கியது. பிரான்சில் இதன் பெயர் SCALP-EG ஆகும்.
இது ஒன்றரை டன் எடை கொண்டது. 600 கிமீ வரை சென்று தாக்க கூடியது. 1994-2001 வரை ஆய்வு செய்யப்பட்டு உருவாக்கப்பட்டு 2003ல் பயன்பாட்டிற்கு வந்தது. 5.1 m நீளம் கொண்டது. Mach 0.95 (323 m/s; 1,060 ft/ வேகம் கொண்டது. அதவாது ஒரு நொடிக்கு 1.163 கிலோ மீட்டர் செல்ல கூடி திறன் கொண்டது ஆகும் இது.
2016ல் இந்தியா இதை வாங்கியது. நாம் ரபேல் விமானங்களை வாங்கிய போது அத்துடன் சேர்த்து இதுவும் பயன்படுத்தப்பட்டது. டசால்ட் நிறுவனத்திடம் இருந்து இது வாங்கப்பட்டது.
பாகிஸ்தான் மீது தாக்குதல்
பாதுகாப்பு துறையால் ஆபரேஷன் சிந்தூர் என்று இந்த தாக்குதலுக்கு பெயரிடப்பட்டு உள்ளது. இந்தியா பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தளங்களில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. நீண்ட தூரம் பயணிக்கும் ஏவுகணைகளை கொண்டு தாக்குதல் நடித்தியது இந்திய ராணுவம்.
அங்கு தீவிரவாத முகாமக்கள் மட்டும் குறிவைத்து தாக்குதல்கள் நடத்தப்பட்டன. 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற குறியீட்டுப் பெயரில் இரவு நேர துல்லியத் தாக்குதல்களில் மொத்தம் ஒன்பது தளங்கள் ரேடாரில் துல்லியமாக குறிவைக்கப்பட்டு தாக்கப்பட்டன.
இந்தியாவிற்கு உள்ளே இருந்தே தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. அதாவது இந்தியாவில் இருந்தே ஏவுகணைகள் மூலம் 9 இடங்கள் தாக்கப்பட்டு உள்ளன. நீண்ட தூரம் பயணிக்கும் ஏவுகணைகளை கொண்டு தாக்குதல் நடத்தியது இந்திய ராணுவம். இதில் பாகிஸ்தான் ராணுவ பகுதிகள் எதுவும் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட வில்லை. இந்த தாக்குதல் மூலம் 12 பாகிஸ்தான் தீவிரவாதிகள் கொல்லப்பட்டு உள்ளனர்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications