எல்லையை நெருங்கும் பாகிஸ்தான்! இந்தியா vs பாக். எந்த ராணுவம் வலிமையானது? எங்கே அதிக வீரர்கள் உள்ளனர்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: உலகின் மிகப் பெரிய பாதுகாப்புப் படைகளில் இந்தியாவும் ஒன்றாகும். இந்தியப் பாதுகாப்புப் படையை நவீனமயமாக்கத் தேவையான பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே இரு நாட்டு ராணுவத்தில் எது மிக வலிமையானது என்பது குறித்து நாம் பார்க்கலாம்

எல்லையில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், இன்று ராணுவ அதிகாரிகள் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது எல்லையை நோக்கி பாகிஸ்தான் ராணுவம் பதற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில் முன்னேறி வருவதாக ராணுவம் தெரிவித்தது. இது மிகவும் முக்கியமான ஒரு பாயிண்டாக இருக்கிறது.

India Pakistan India Pakistan

இந்தியா உலகின் மிகப் பெரிய பாதுகாப்புப் படையைக் கொண்ட நாடுகளில் ஒன்றாகும். இதற்கிடையே இந்தியா மற்றும் பாகிஸ்தான் பாதுகாப்புப் படையின் பலம் என்ன! இரண்டில் எது வலிமையானது என்பது குறித்த ஒப்பீட்டை நாம் பார்க்கலாம்.

இந்தியா தான் பெஸ்ட்

குளோபல் ஃபையர் பவர் ரேங்க்கிங் அமைப்பின்படி, ராணுவ பலத்தில் சர்வதேச அளவில் இந்தியா நான்காவது இடத்தில் இருக்கிறது. மறுபுறம் பாகிஸ்தான் இதில் 12வது இடத்தில் தான் இருக்கிறது. அதேபோல மிலிட்டரி வாட்ச் என்ற பத்திரிக்கை உலக நாடுகளின் ராணுவத்தை அதன் பலத்தைப் பொறுத்துப் பட்டியலிட்டுள்ளது. அதன்படி இந்திய ராணுவம் டையர் 2ல் வருகிறது. ஆனால், பாகிஸ்தான் ராணுவம் டையர் 3ல் தான் இருக்கிறது.

பாதுகாப்பு பட்ஜெட்

இந்தியா தனது மத்திய பட்ஜெட்டில் 2025-26 நிதியாண்டில் பாதுகாப்புத் துறைக்கு ₹6.8 லட்சம் கோடியை ஒதுக்கியது. அதிலும் குறிப்பாக ₹1.8 லட்சம் கோடி ராணுவத்தை நவீனமயமாக்கச் செலவிட ஒதுக்கப்பட்டது. பாதுகாப்புத் துறைக்கான பட்ஜெட் என்பது இந்தியாவின் மொத்த ஜிடிபியில் 1.9 சதவீதம் ஆகும். இது மத்திய அரசின் பட்ஜெட்டில் 13.45 சதவீதமாக உள்ளது.

மறுபுறம் பாகிஸ்தானைப் பொறுத்தவரை 2024-25 நிதியாண்டிற்கு ரூ.2.12 லட்சம் கோடி (பாகிஸ்தான் ரூபாய்) அதாவது இந்திய மதிப்பில் ₹64,082 கோடியை ஒதுக்கியது. அதாவது இது அந்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.7 சதவீதமாகும்.

செலவுகள்

2024ஆம் ஆண்டின் டேட்டாவை வைத்துப் பார்த்தால் இந்தியாவின் ராணுவச் செலவு என்பது பாகிஸ்தான் ராணுவ செலவை விட கிட்டத்தட்ட ஒன்பது மடங்கு அதிகமாக இருப்பதாக ஸ்வீடன் நாட்டை சேர்ந்த ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. அதாவது இந்தியா 86.1 பில்லியன் டாலரை ராணுவத்திற்கு செலவிடும் நிலையில், பாகிஸ்தான் 10.2 பில்லியன் டாலர் மட்டுமே செலவிடுகிறது.

வீரர்கள் எவ்வளவு பேர்

குளோபல் ஃபயர்பவர் டேட்டாவின்படி, இந்தியாவில் மொத்தம் 51 லட்சம் பாதுகாப்புப் படை வீரர்கள் உள்ளனர் (ராணுவம், துணை ராணுவம் சேர்த்து). மறுபுறம் பாகிஸ்தானில் வெறும் 17 லட்சம் பாதுகாப்புப் படை வீரர்கள் மட்டுமே உள்ளனர்.

முப்படைகளின் பலத்திலும் கூட இந்தியா பாகிஸ்தானை விடப் பல மடங்கு வலிமையானதாக இருக்கிறது. ராணுவத்தைப் பொறுத்தவரை இந்தியாவில் 21 லட்சம் வீரர்கள் (21,97,117) உள்ள நிலையில், பாகிஸ்தானில் 13 லட்சம் வீரர்கள் (13,11,500) மட்டுமே உள்ளனர். விமானப்படையில் இந்தியாவுக்கு 3 லட்சம் (3,10,575) வீரர்கள் உள்ள நிலையில், பாகிஸ்தானில் 78,128 வீரர்கள் மட்டுமே உள்ளனர். கடற்படையில் இந்தியாவிடம் 1,42,252 வீரர்கள் உள்ள நிலையில், பாகிஸ்தானிடம் 1.24 லட்சம் வீரர்கள் மட்டுமே உள்ளனர்.

கடற்படை

குளோபல் பையர் பவர் டேட்டாவின் படி இந்தியாவிற்கு இரண்டு விமானம் தாங்கி போர்க் கப்பல்கள், 13 டெஸ்டிராயர் கப்பல்கள், 14 frigates போர்க்கப்பல்கள், 18 கோர்வெட்கள் (Corvettes), 135 ரோந்துக் கப்பல்கள் மற்றும் 18 நீர்மூழ்கிக் கப்பல்கள் உட்பட மொத்தம் 293 போர்க் கப்பல்கள் உள்ளன.

மறுபுறம் பாகிஸ்தானைப் பொறுத்தவரை அவர்களிடம் விமானம் தாங்கி போர்க் கப்பல்கள், டெஸ்டிராயர் கப்பல்கள் எதுவும் இல்லை. பாகிஸ்தானிடம் தலா 9 frigates மற்றும் கோர்வெட்கள், 69 ரோந்து கப்பல்கள், எட்டு நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் மூன்று மைன் போர் கப்பல் உட்பட 121 கப்பல்கள் மட்டுமே கடற்படையில் உள்ளது.

விமானப்படை

விமானப்படையை பொறுத்தவரை இந்தியாவிடம் 2,229 விமானங்கள் உள்ளன, அதே நேரத்தில் பாகிஸ்தானிடம் 1,399 விமானங்கள் மட்டுமே உள்ளன. குளோபல் ஃபயர் டேட்டாவின்படி இந்தியாவிடம் 513 ஃபைட்டர்ஸ் விமானங்கள் உள்ளன. மேலும், 130 அட்டாக் விமானங்கள், 270 ராணுவ போக்குவரத்து விமானங்கள், 351 பயிற்சி விமானங்கள், 74 ஸ்பெஷல் மிஷன் விமானங்கள், 6 டேங்கர் விமானங்கள், 899 ஹெலிகாப்டர்கள், 80 அட்டாக் ஹெலிகாப்டர்கள் உள்ளன.

மறுபுறம் பாகிஸ்தானை பொறுத்தவரை 328 பைட்டர் விமானங்கள், 90 அட்டாக் விமானங்கள், 64 ராணுவ போக்குவரத்து விமானங்கள், 565 பயிற்சி விமானங்கள், 27 ஸ்பெஷல் மிஷன் விமானங்கள், 4 டேங்கர் விமானங்கள், 373 ஹெலிகாப்டர்கள், 57 அட்டாக் ஹெலிகாப்டர்கள் மட்டுமே உள்ளன.

ராணுவம்

ராணுவ பலத்தைப் பொறுத்தவரை இந்தியாவிடம் 3982 போர் டாங்கிகள் உள்ளன. மேலும், 4,241,500 வீரர்கள், 1922 பீரங்கி படைகள், 39 போர் ஹெலிகாப்டர்கள், 700 சப்போர்ட் ஹெலிகாப்டர்கள், 3200 கவச சண்டை வாகனங்கள், 708 போக்குவரத்து விமானங்கள் மட்டுமே உள்ளன. மறுபுறம் பாகிஸ்தானைப் பொறுத்தவரை 2682 போர் டாங்கிகள் 964,000 வீரர்கள், 1842 பீரங்கி படைகள், 43 போர் ஹெலிகாப்டர்கள், 328 சப்போர்ட் ஹெலிகாப்டர்கள், 2600 கவச சண்டை வாகனங்கள், 296 போக்குவரத்து விமானங்கள் மட்டுமே உள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+