“இந்தியா தொடர்ந்து ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கும்” - நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்
டெல்லி: இந்தியா ரஷ்யாவிடமிருந்த அதிக அளவில் கச்சா எண்ணெய் வாங்கி வருகிறது. இதன் காரணமாக, அமெரிக்கா நமக்கு 25% அளவுக்கு வரியை போட்டு மொத்த வரியை 50% ஆக ஏற்றி தலையில் இறக்கியிருக்கிறது. இருப்பினும், ரஷ்யாவிடமிருந்து தொடர்ந்து கச்சா எண்ணெய் வாங்குவோம் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருக்கிறார்.
"இந்தியா, ரஷ்யாவிடமிருந்து தொடர்ந்து எண்ணெய் வாங்கும். இந்த முடிவு தேச நலனுக்கு முன்னுரிமை அளித்து எடுக்கப்பட்டது. தேவைக்கு வாங்குவது நமது முடிவு. எங்கிருந்து வாங்க வேண்டும் என்பதையும் நாம்தான் தீர்மானிக்க வேண்டும்" என்று நிர்மலா சீதாராமன் கூறியிருக்கிறார்.

ரஷ்யா சலுகை விலையில் நமக்கு கச்சா எண்ணெய்யை விற்பனை செய்து வருகிறது. இதனால் உலக அளவில் ரஷ்யாவிடமிருந்து அதிக எண்ணெய் வாங்கும் நாடாக இந்தியா மாறியிருக்கிறது. இந்த வர்த்தகம் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் கண்களை உறுத்துகிறது. எனவே எண்ணெய் வணிகத்தை கைவிட வேண்டும் என்று தொடர்ந்து டிரம்ப் வலியுறுத்தி வருகிறார். அப்படி நடந்தால் அரபு நாடுகளைதான் நாட வேண்டி வரும். அரபு நாடு சும்மா தராது. அதாவது அமெரிக்க டாலரை வாங்கிக்கொண்டு தரும். இது அமெரிக்காவுக்குதான் லாபம்.
ஆனால் ரஷ்யா இந்தியா ரூபாயை வாங்கிக்கொண்டு தருகிறது. எனவேதான் நாம் ரஷ்யாவிடம் அதிக அளவில் எண்ணெய் வாங்குகிறோம். எண்ணெய்க்கு எண்ணெய்யும் ஆச்சு, சொந்த காசில் வர்த்தகமும் நடந்த மாதிரி ஆச்சு. டாலருக்கு எதிராக சொந்த கரன்சியில் வர்த்தகம் செய்வது டிரம்ப்பு பிடிக்கவில்லை.
இந்த சூழலில்தான் ரஷ்யாவிடமிருந்து எண்ணெய்யை தொடர்ந்து வாங்குவோம் என நிர்மலா சீதாராமன் கூறியிருக்கிறார்.
-
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே!












Click it and Unblock the Notifications