2027 ல்.. இந்தியா தான் நம்பர் ஒன் ஆக இருக்கும்.. மக்கள் தொகையில்.. ஐ.நா. தகவல்
டெல்லி: இந்தியாவின் மக்கள் தொகையானது வரும் 2027-ஆம் ஆண்டிற்குள் சீனாவை முந்தி, உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக விளங்கும் என ஐ.நா ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ஐ.நா.சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது, உலக மக்கள் தொகை தற்போது 770 கோடியாக உள்ளது. 2050 ஆம் ஆண்டில், மேலும் 200 கோடி அதிகரிக்கும். இன்னும் 8 ஆண்டுகளில், அதாவது, 2027-ல் உலக மக்கள் தொகையில் சீனாவை பின்னுக்கு தள்ளி இந்தியா முதலிடத்தை பிடித்து விடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக மக்கள் தொகை எண்ணிக்கையில் தற்போது சீனாவுக்கு அடுத்தப்படியாக, இந்தியா 2-வது இடத்தில் இருக்கிறது. 2019ஆம் ஆண்டிலிருந்து 2050ஆம் ஆண்டு வரை, உலக மக்கள் தொகை அதிகரிக்க இருக்கும் எண்ணிக்கையில் பாதி, இந்தியா, நைஜிரியா, பாகிஸ்தான், காங்கோ, எத்தியோபியா, டான்சானியா, இந்தோனேஷியா, எகிப்து மற்றும் அமெரிக்கா ஆகிய 9 நாடுகளாக இருக்கும்
2050-ம் ஆண்டுக்குள் இந்தியாவின் மக்கள் தொகை 273 கோடியாக உயர்ந்து விடும். நைஜீரியா நாட்டின் மக்கள் தொகை 200 கோடியாக அதிகரித்து விடும். இந்தியாவிலும் நைஜீரியாவிலும் பெண்கள் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால், இந்த இரு நாடுகளிலும் அடுத்த 30 ஆண்டுகளில் மக்கள் தொகை அதிகரிப்பது, மிக, மிக அதிக அளவில் இருக்கும்.
அதே சமயம், மக்கள் தொகை அதிகரிக்கும் நாடுகளில், குழந்தை இறப்பு, பிரசவகால இறப்பு, சண்டைகள், ஹெச்.ஐ.வி போன்ற கொடிய நோய்கள் ஆகியவை ஆயுள் காலம் குறைவதற்கு காரணமாக இருக்கும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
-
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்? -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு












Click it and Unblock the Notifications