'லிப்-லாக்' முத்தக்காட்சி! ஃபைட்டர் திரைப்படத்திற்கு எதிராக.. இந்திய விமானப்படை அதிகாரி நோட்டீஸ்
டெல்லி: சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில், ஹிருத்திக் ரோஷன் மற்றும் தீபிகா படுகோனே நடிப்பில் உருவாகி வெளியாகியுள்ள ஃபைட்டர் திரைப்படத்திற்கு எதிராக இந்திய விமானப்படை அதிகாரி நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
சமீப காலமாக இந்திய திரைப்படங்கள் தொடர் சர்ச்சையில் சிக்குவது அதிகரித்து வருகிறது. குறிப்பாக திரைப்பட விமர்சனங்கள் அரசியல் உள்நோக்கம் கொண்டவையாக இருப்பதாக இயக்குநர்கள் கூறுகின்றனர். இந்த விமர்சன வரிசையில் தற்போது ஃபைட்டர் திரைப்படம் சிக்கியிருக்கிறது. இந்த திரைப்படத்தின் ஹீரோவாக நடித்துள்ள ஹிருத்திக் ரோஷனும், ஹீரோயினாக தீபிகாவும் திரைப்படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் முத்தமிட்டுக்கொள்கின்றனர்.

இந்த காட்சி விமானப்படையின் வீரத்தை அவமதித்திருப்பதாக விமானப்படை அதிகாரி படக்குழுவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இது குறித்து விமானப்படை தரப்பில் கூறுகையில், "சீருடையில் இருக்கும்போது இருவரும் முத்தமிட்டுக்கொண்டிருக்கிறார்கள். விமானப்படை அதிகாரிக்கு இது பிடிக்கவில்லை. இந்த காட்சியில் ராணுவத்தின் வீரமும் அதன் சீருடையும் அவமதிக்கப்பட்டுள்ளது. எனவே படக்குழுவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறது" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
திரைப்படங்கள் இதுபோன்று எதிர்ப்பை சம்பாதிப்பது இது முதல் முறையல்ல. குறிப்பாக பாலிவுட் திரையுலகில் ஷாருக்கான், சல்மான்கான் மற்றம் அமீர்கானின் திரைப்படங்கள் தொடர்ந்து விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டு வருவது அனைவரும் அறிந்ததே. 'பிகே' தொடங்கி சமீபத்தில் வெளியான 'பதான்' திரைப்படம் வரை சர்ச்சைகளில் சிக்கியுள்ளன. பிகே திரைப்படம் மத உணர்வுகளை புண்படுத்தியதாக கடுமையாக விமர்சிக்கப்பட்டது. இந்த திரைப்படத்தை திரும்ப பெற வேண்டும் என பல போராட்டங்கள் நடைபெற்றன.
அதேபோல பதான் திரைப்படத்தில் தீபிகா படுகோனே, காவி நிறத்தில் உடையை அணிந்துக்கொண்டு ஷாருக்கானுடன் நெருக்கமாக நடனமாடியிருந்தார். காவி என்பது இந்துக்களின் புனித நிறம் என்றும், இந்த நிறத்தில் உடையை அணிந்துக்கொண்டு நெருக்கமாக நடனமாடியிருந்தது இந்துக்களின் மனதை புண்படுத்திவிட்டது எனவும் பல மாநிலங்களில் இந்து அமைப்பினர் போராட்டங்களில் குதித்தனர்.
அதேபோல ரன்பீர் கபூர் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், தான் ஒரு மாட்டிறைச்சி பிரியர் என்று கூறியிருந்தார். அவ்வளவுதான், அடுத்து அவர் நடிப்பில் வெளியான திரைப்படங்களை புறக்கணிக்க வேண்டும் என்று இந்துத்துவா அமைப்புகள் போராட்டத்தில் குதித்தன. ஆனால், மறுபுறம் காஷ்மீர் ஃபைல்ஸ், தி கேரளா ஸ்டோரி போன்ற திரைப்படங்களுக்கு பாஜக ஆளும் மாநிலங்களில் வரி விலக்கும் அளிக்கப்பட்டது. நடுநிலையான திரைப்பட விமர்சகர்கள் கூட இந்த படங்கள் மிகைப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளதாக விமர்சித்திருந்தாலும், இந்துத்துவா ஆதரவாளர்கள் இப்படங்களை தூக்கி வைத்து கொண்டாடினார்கள்.
இப்படியாக திரைப்படத்திற்குள் ஒரு சார்பு அரசியல் உயர்த்தி பிடிக்கப்படுவதாக பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டியுள்ளனர். இதற்கு வலு சேர்க்கும் விதமாக, தற்போது ஃபைட்டர் திரைப்படமும் சர்ச்சையில் சிக்கியுள்ளது.
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications