நீரஜ் சோப்ராவை கொண்டாடி தீர்த்த ராணுவம்.. அவருக்கும், ராணுவத்துக்கும் உள்ள தொடர்பு தெரியுமா?
டெல்லி: நாட்டின் ஒட்டுமொத்த மக்கள் மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள இந்தியர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளார் நீரஜ் சோப்ரா. டோக்கியோ ஒலிம்பிக் தொடரில் ஈட்டி எறிதல் போட்டியில் தங்கம் வென்றுள்ள நீரஜ் சோப்ரா பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரராகியுள்ளார்.
Recommended Video
இந்த ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கான முதல் தங்கம் வாங்கி கொடுத்தவர், இந்திய ஒலிம்பிக் வரலாற்றிலேயே தடகள போட்டியில் முதல் தங்கம் வாங்கி கொடுத்தவர். 13 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவுக்கு ஒலிம்பிக்கில் தங்கம் பெற்று கொடுத்தவர் என்ற சாதனை தற்போது நீரஜ் சோப்ராவிடம் உள்ளது.

ராணுவ அதிகாரி
பல்வேறு பெருமைகளை பெற்றுள்ள நீரஜ் சோப்ரா ஹரியானாவைச் சேர்ந்த ஒரு விவசாயியின் மகன் ஆவார். சண்டிகரில் உள்ள டி.ஏ.வி கல்லூரியில் பட்டப்படிப்பு முடித்துள்ள நீரஜ் சோப்ரா, இந்திய இராணுவத்தில் அதிகாரியாக பணிபுரிந்து வந்தார். நீரஜ் சோப்ரா தங்கம் வெல்ல வேண்டும் என்று அவருடன் பணிபுரிந்த சக ராணுவ வீரர்கள் எதிர்பார்த்தனர்.

ராணுவம் வாழ்த்து
அதேபோல் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றவுடன் ராணுவ வீரர்கள் இதனை கொண்டாடி தீர்த்தனர். ''ஒலிம்பிக்கில் சுபேதார் நீரஜ் சோப்ராவின் தங்க வெற்றி இந்திய இராணுவத்திற்கு பாராட்டுக்களைத் தருகிறது" என்று இராணுவம் அவரை பாராட்டியது. இதேபோல் பாதுகாப்பு துறை ராஜ்நாத் சிங்கும் நீரஜ் சோப்ராவை வெகுவாக பாராட்டியுள்ளார்.

ராஜ்நாத் சிங் பாராட்டு
''ஒலிம்பிக்கில் சுபேதார் நீரஜ் சோப்ராவின் பொன்னான வெற்றி இந்திய இராணுவத்திற்கு பாராட்டுக்களைத் தருகிறது. அவர் ஒலிம்பிக்கில் ஒரு உண்மையான சிப்பாய் போல் நடித்தார். இந்திய ஆயுதப்படைகள் உட்பட முழு நாட்டிற்கும் இது ஒரு வரலாற்று மற்றும் பெருமைமிக்க தருணம்! அவருக்குப் பல வாழ்த்துக்கள்'' என்று பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் டுவிட்டரில் பாராட்டியுள்ளார்.

எம்.எம் நரவனே
மேலும் இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் எம்.எம் நரவனே மற்றும் இந்திய இராணுவத்தின் அனைத்து பிரிவுகளும் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு வாழ்த்துகள் தெரிவித்துள்ளனர். நாட்டின் அரசியல், விளையாட்டு, சினிமா பிரபலங்களும் நீரஜ் சோப்ராவுக்கு வாழ்த்து தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications