1971 ஆம் ஆண்டு போருக்கு பின் இதுதான் முதல் முறை.. பாகிஸ்தானுக்கு எதிராக களமிறங்கிய முப்படைகள்
ஸ்ரீநகர்: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து "ஆபரேஷன் சிந்தூர்" என்ற பெயரில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. பாகிஸ்தானுக்கு எதிராக 1971 ஆம் ஆண்டு போருக்கு பிறகு இந்திய ராணுவம் முப்படைகளை களம் இறக்கியிருப்பது இதுவே முதல் முறையாகும்.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலால் கொதித்து போயிருந்த இந்தியா, இந்த தாக்குதலுக்கு பின்னால் இருந்த பயங்கராவதிகளை ஒழித்துக்கட்ட வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு இருந்தது. பயங்கரவாத முகாம்களை குறிவைத்து பதிலடி கொடுக்க இந்திய ராணுவம் தக்க தருணம் பார்த்து காத்துக்கொண்டு இருந்த நிலையில், நள்ளிரவு 1.44 மணிக்கு இந்திய ராணுவம் தனது அதிரடியை தொடங்கியது.

54 ஆண்டுகளுக்கு பிறகு
ஏவுகணைகள் மூலமாக இந்திய ராணுவம் அதிரடியாக நடத்திய தாக்குதலில் பாகிஸ்தானின் உள்ள 9 இடங்கள் குறிவைக்கப்பட்டன. ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலில் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ளது. இந்தியாவின் முப்படைகளும் இணைந்து இந்த தாக்குதலை முன்னெடுத்துள்ளன.
1971 ஆம் ஆண்டுக்கு பிறகு அதாவது 54 ஆண்டுகளுக்கு பின் ராணுவம், விமானப்படை, கடற்படை என மூன்று படைகளும் ஒருங்கிணைந்து பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டது இதுவே முதல் முறையாகும். இந்திய மண்ணிலிருந்தே இந்த தாக்குதல்களை நடத்தியிருப்பதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
சூசைட் டிரோன்கள்
பாகிஸ்தான் உள்ளே இந்திய ராணுவம் தாக்குதல் நடத்திய போது, இந்திய போர் விமானங்கள் எல்லையில் அரணாக பறந்துள்ளன. இந்திய ஏவுகணைகள் உள்ளே சென்ற போது பாகிஸ்தான் உடனே பதிலடி கொடுத்தால் அதை எதிர்கொள்ளும் விதமாக விமானப்படை தயார் நிலையில் இருந்துள்ளது.
இந்தியாவிடம் நாகஸ்த்ரா - 1 என்ற சூசைட் டிரோன்கள் உள்ளது. இதை இன்றைய தாக்குதலுக்கு இந்தியா பயன்படுத்தியிருப்பதாக சொல்லப்படுகிறது. இந்தியாவின் கடற் பகுதிகளில் இருந்து கடற்படை சார்பாக தாக்குதலுக்கு பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.
ஆபரேஷன் சிந்தூர்
* இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் அதிரடி நடவடிக்கையை தொடங்கியது
* நள்ளிரவு 1.44 மணிக்கு இந்த தாக்குதலை இந்திய ராணுவம் மேற்கோண்டது
* இந்த நடவடிக்கை மூலம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளன.
* ஜம்மு காஷ்மீரில் தாக்குதல் நடத்தப்படும் பெரும்பாலான தாக்குதல்கள் இங்கிருந்துதான் திட்டமிடப்படுவதாக சொல்லப்படுகிறது.
* Precision strike - தாக்குதலில் இந்தியாவின் முப்படைகளும் ஒருங்கிணைந்து ஈடுபட்டுள்ளன.
லாகூரில் அவசர நிலை
இந்தியா நடத்திய பதிலடி தாக்குதலையடுத்து, பாகிஸ்தான் லாகூரில் அவசர நிலை பிரகடனம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவின் ராணுவ தாக்குதலுக்கு பதிலடி கொடுப்போம் என்று பாகிஸ்தான் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், பதற்றம் அதிகரித்துள்ளது. பயங்கரவாத முகாம்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியது தொடர்பாக அமெரிக்கா, ரஷ்யா, உள்ளிட்ட நாடுகளிடம் இந்தியா எடுத்துரைத்துள்ளது.
பஹல்காம் தாக்குதலுக்கு லஷ்கர் இ தொய்பாவின் கிளை அமைப்பான ரெசிஸ்டண்ட் ஃப்ரண்ட் அமைப்பு பொறுப்பு ஏற்று இருந்தது. எனவே இந்த பயங்கரவாத முகாம்கள் இருக்கும் இடத்தை டார்கெட் செய்து இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது.
விமானப்படை விமானங்கள் ஒத்திகை
பாகிஸ்தான் எல்லை அருகே இந்திய விமானப்படை விமானங்கள் ஒத்திகையில் ஈடுபட்டுள்ளன. ராஜஸ்தானில் பாகிஸ்தான் எல்லை அருகே உள்ள விமானப்படை விமானங்கள் ஒத்திகையில் ஈடுபட்டு இருக்கின்றன. பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா நடவடிக்கைக்கு பதிலடி கொடுப்போம் என்று பாகிஸ்தான் அறிவித்து இருப்பதால் எல்லையில் நிலைமையை இந்தியா உன்னிப்பாக கவனித்து வருகிறது.
பாகிஸ்தான் பதிலடி கொடுத்தால் உடனடியாக திருப்பி அடிக்க இந்திய ராணுவம் தயார் நிலையில் உள்ளது. இத்தகைய சூழலில் தான் விமானப்படை விமானங்கள் எல்லையில் ஒத்திகையில் ஈடுபட்டு இருக்கின்றன.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications