புல்வாமா தாக்குதல்போல் இந்தியாவில் தற்கொலை படை தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் சதி.. உளவு துறை வார்னிங்
Recommended Video
டெல்லி: புல்வாமா தாக்குதல் போல் இந்தியாவில் தற்கொலை படை தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் சதி திட்டம் தீட்டியதாக உளவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
மத்திய அரசுக்கு இந்திய உளவு துறை ஒரு எச்சரிக்கை செய்தியை அனுப்பியுள்ளது. அதில் அந்த அமைப்பு குறிப்பிடுகையில், ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பும் ஐஎஸ் தீவிரவாத அமைப்பும் தற்கொலை படை தாக்குதலை இந்தியாவில் நடத்தக் கூடும்.
பாகிஸ்தான் உளவு அமைப்புடன் தொடர்பில் உள்ள தீவிரவாதிகள் இந்தியாவில் தாக்குதலில் ஈடுபடக் கூடும். காஷ்மீரின் புல்வாமா போன்ற ஒரு சக்திவாய்ந்த தாக்குதலை நடத்த சதி செய்துள்ளது.

உளவு துறை
ஜெய்ஷ் இ முகமது மற்றும் ஐஎஸ் தீவிரவாதிகள் அமைப்பின் கூட்டம் ஒன்றை ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் உளவு துறை நடத்தி வருவதாக தகவல் இந்திய உளவு துறை எச்சரிக்கை தெரிவித்துள்ளது.

பதைபதைப்பு
இலங்கையில் கடந்த ஈஸ்டர் பண்டிகையின்போது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 350 -க்கும் மேற்பட்டோர் இறந்தனர். பிஞ்சு குழந்தைகள், பெண்கள், ஆண்கள் என தீயில் கருகி உயிரிழந்த காட்சிகள் நெஞ்சை பதைபதைக்க வைப்பதாக இருந்தன.

இலங்கையில் ஊடுருவல்
இந்த தாக்குதலுக்கு ஐஎஸ் தீவிரவாதிகள்தான் காரணம் என இலங்கை அரசு கூறுகிறது. மேலும் 160 தீவிரவாதிகள் இன்னொரு தாக்குதல் நடத்த இலங்கையில் ஊடுருவியுள்ளதாக கூறப்படுகிறது.

உயிரிழப்புகள்
இலங்கை தாக்குதல் குறித்து இந்திய உளவு துறை இரு முறை எச்சரிக்கை விடுத்தும் இலங்கை அலட்சியம் காட்டியதால் நூற்றுக்கணக்கான உயிரிழப்புகளை சந்திக்க நேரிட்டது. இந்த நிலையில் இந்திய உளவு துறை மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications