இந்தியாவில் சமூகப் பரவலாக மாறுகிறது கொரோனா - இந்திய மருத்துவர் சங்கம் எச்சரிக்கை
டெல்லி: இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு சமூகப் பரவலாக மாறிவருவதாக என்று இந்திய மருத்துவர் சங்கத்தின் மருத்துவமனை வாரியத் தலைவர் டாக்டர் வி.கே. மோங்கா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Recommended Video
உலக நாடுகளில் கொரோனா பாதிப்பில் இந்தியா 3-வது இடத்தில் இருந்து வருகிறது. இந்தியாவில் 1077618 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தம் 26816 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் அடுத்தடுத்து கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. இந்த நிலையில் இந்திய மருத்துவர் சங்கத்தின் மருத்துவமனை வாரிய தலைவர் டாக்டர் விகே மோங்கா கூறியிருப்பதாவது:
இந்தியாவில் நாள்தோறும் 30,000 பேர் கொரோனாவால் பாதிப்படைந்து வருகின்றனர். இது மிக மிக மோசமான நிலைமையாகும். தற்போது கிராமப்புறங்களிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து உள்ளது. கிராமங்கள் கொரோனா பாதிப்பு மண்டலங்களாக மாறினால் மீள்வது சிரமமாகிவிடும்.
இது அபாயகரமான எச்சரிக்கை. கொரோனா வைரஸ் தாக்கம் என்பது சமூகப் பரவலாக மாறி இருக்கிறது என்பதையே வெளிப்படுத்துகிறது. இவ்வாறு வி.கே. மோங்கா கூறியுள்ளார்.
கொரோனா பாதிப்பு சமூகப் பரவலாக மாறி இருப்பதாக கேரளாவின் 2 கடலோர பகுதிகளை முன்வைத்து அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் சுட்டிக் காட்டி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
-
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது












Click it and Unblock the Notifications