காலனித்துவ நடைமுறைக்கு முடிவு.. இந்திய கடற்படை அதிரடி முடிவு.. உடனடியாக அமலுக்கு வந்தது புதிய விதி
டெல்லி: இந்திய கடற்படையில் வீரர்கள் கைகளில் பேடன்கள் (சிறு தடி) வைத்திருக்கும் நடைமுறை நிறுத்தப்படுவதாக நேவி அறிவித்துள்ளது. உடனடியாக இந்த நடைமுறை அமலுக்கு வருவதாகவும் காலனித்துவ மரபாக இருப்பதால் இந்த மாற்றம் கொண்டு வரப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்தியில் ஆளும் பாஜக அரசு ஆங்கிலேயர் காலத்தில் இருந்து பின்பற்றப்பட்டு வந்த சில நடைமுறைகளுக்கு முடிவு கட்டி வருகிறது. குறிப்பாக தலைநகர் டெல்லியில் இருந்த ராஜபாதை என்பதை கடமை பாதை என பெயர் மாற்றம் செய்தது. ராஜபாதை என்பது துவக்கத்தில் கிங்ஸ்வே என்று அறியப்பட்டது. இங்கு குடியரசு தின அணிவகுப்புகள் நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் தான் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ராஜபாதை மறுவடிவம் செய்யப்பட்டு கடமை பாதை எனவும் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. அதிகார சின்னத்தை குறிப்பதில் இருந்து மக்களுக்கான உரிமை மற்றும் அதிகாரமளித்தலை குறிப்பதாக கடமை பாதை மாறியுள்ளதாக பிரதமர் அலுவலகம் குறிப்பிட்டு இருந்தது. இந்த நிலையில், தான் தற்போது இந்திய கடற்படையில் வீரர்கள் மத்தியில் கையாளப்படும் batons (சிறு தடி) நடைமுறையை உடனடியாக முடிவுக்கு கொண்டு வரப்படுவதாக இந்திய கடற்படை அறிவித்துள்ளது.
இது தொடர்பாக இந்திய கடற்படை வெளியிட்டுள்ள அறிக்கையில், "காலப்போக்கில் கடற்படை வீரர்கள் கையில் (Baton) தடியை சுமந்து செல்வது வழக்கமாகிவிட்டது. தடியை கையில் வைத்திருப்பதன் மூலம் அதிகாரத்தின் அடையாளமாக குறிப்பிடுவது காலனியாதிக்க மரபு ஆகும். அமிர்த காலத்திற்கு மாறிய கடற்படையில் அதற்கு இடம் இல்லை. எனவே, அதிகாரிகள் உள்பட அனைவரும் பேடன்களை கையில் வைத்து இருப்பது உடனடியாக தடை செய்யப்படுகிறது" என்று தெரிவிக்கபப்ட்டுள்ளது.
கடற்படையின் ஓவ்வொரு யூனிட் பிரிவின் தலமை அதிகாரி அலுவலகத்தில் இந்த தடியை உரிய முறையில் வைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கமாண்ட் அளவிலான அதிகாரிகள் மாறும் போது அலுவலகத்திற்குள் மட்டும் தடியை ஒப்படைக்கும் நிகழ்ச்சியை நடத்திக் கொள்ளலாம் என்றும் கடற்படை அறிவுறுத்தியுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications