அனல் பறக்கும் நாடாளுமன்றம்.. தொடங்கியது பட்ஜெட் கூட்டத்தொடரின் 2ம் கட்ட அமர்வு! பெரும் எதிர்பார்ப்பு
மாநிலங்களவையில்தான் இந்த கூட்டத்தொடரில் அதிக மசோதாக்கள் நிறைவேற்றப்பட உள்ளன
டெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு தொடங்கி உள்ளது. எதிர்க்கட்சிகள் பல முக்கியமான விஷயங்களை இன்று நாடாளுமன்றத்தில் முன்வைப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முக்கியமாக பல்வேறு மாநிலங்களில் எதிர்க்கட்சிகள் சிபிஐ மூலம் குறி வைக்கப்படுவதற்கு எதிராக இன்று நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் குரல் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதை முன்னிட்டு இன்று எதிர்க்கட்சிகள் சார்பாக எம்பிக்கள் முக்கிய ஆலோசனை கூட்டம் நடத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது . தமிழ்நாடு எம்பிக்கள் பெரும்பாலும் நீட் விவகாரம், ஆன்லைன் ரம்மி விவகாரம் தொடர்பாக கோரிக்கைகளை வைக்க வாய்ப்பு உள்ளது.
2023ம் ஆண்டிற்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி 31ம் தேதி தொடங்கியது. இரண்டு சபைகளின் கூட்டுக் கூட்டம் பாராளுமன்ற மைய மண்டபத்தில் நடந்தது. நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரை நிகழ்த்தி அவையை தொடங்கி வைத்தார்.
அதன்பின் அமைச்சர் நிர்மலா சீதாராமன் மூலம் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

கூட்டத்தொடர் பின்னணி
நாடாளுமன்ற கூட்ட தொடரின் முதல் அமர்வு ஜனவரி 31ம் தேதி தொடங்கி பிப்ரவரி 13ம் தேதி வரை நடந்தது. இரண்டாவது அமர்வு இன்று மார்ச் 13ம் தேதி தொடங்கி ஏப்ரல் 6ம் தேதி வரை நடக்கும். மொத்தம் இரண்டு அமர்வுகளாக இந்த நீண்ட கூட்டத்தொடர் நடக்க உள்ளது. மாநிலங்களவையில்தான் இந்த கூட்டத்தொடரில் அதிக மசோதாக்கள் நிறைவேற்றப்பட உள்ளன. மொத்தம் 26 மசோதாக்கள் இந்த கூட்டத்தொடரில் மாநிலங்களவையில் மட்டும் நிறைவேற்றப்படும். மக்களவையில் 9 மசோதாக்கள் மட்டும் நிறைவேற்றப்படும்.

மசோதாக்கள்
மொத்தமாக இப்படி 35 மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் கூட்டுறவுச் சங்கம் தொடர்பான மசோதா அமைச்சர் அமித் ஷா மூலம் நிறைவேற்றப்பட உள்ளது. மேலும் ஜன்விஸ்வாஸ் திருத்த மசோதா நிறைவேற்றப்பட உள்ளது. இந்த கூட்டத்தொடரில் அதானி குழும பங்குகள் சரிவு, ஹிண்டர்பர்க் குற்றச்சாட்டு, எல்ஐசி பங்குகள் சரிவு, மோடி பிபிசி ஆவண பட சர்ச்சை போன்றவை குறித்து எதிர்க்கட்சிகள் விவாதிக்க கோரி கோஷம் மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரி கட்டுப்பாடு, வருமான வரி குறைப்பு, சாமானியர்களுக்கு சாதகமாக பெரிய அறிவிப்புகள் எதுவும் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி உள்ளன.

அமளி
அதை குறிப்பிட்டு எதிர்க்கட்சிகள் கோஷம் எழுப்பும். நாடாளுமன்ற தேர்தல் வருவதால் பல கவர்ச்சிகரமான அறிவிப்புகள் இதில் இந்த கூட்டத்தொடரில் இடம்பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது . இது போக நாடு முழுக்க எதிர்கட்சித் தலைவர்கள் சிபிஐ, அமலாக்கத்துறை மூலம் குறிவைக்கப்பட்டு உள்ளனர். லாலு பிரசாத் யாதவ், தேஜஸ்வி யாதவ், மணீஷ் சிசோடியா, ஷர்மிளா ரெட்டி என்று பலரை டெல்லி நேரடியாக குறி வைத்து வருகிறது. இதில் பலருக்கு சிபிஐ சம்மன் அனுப்பி உள்ளது. இவர்களிடம் நடத்தப்படும் விசாரணைக்கு எதிராக நாடாளுமன்றத்தில் அமளி மேற்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்க்கட்சிகள்
அடுத்த வருடம் நாடாளுமன்ற தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தலுக்கு முன்பாக எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு முன்னோட்டமாக இந்த கூட்டத்தொடர் அமையும் என்று கருதப்படுகிறது. எதிர்க்கட்சிகள் ஒன்றாக பாஜகவை எதிர்க்கும் வாய்ப்புகள் உள்ளன. இதை முன்னிட்டு இன்று எதிர்க்கட்சிகள் சார்பாக எம்பிக்கள் முக்கிய ஆலோசனை கூட்டம் நடத்துவார்கள் என்று.எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாடு எம்பிக்கள் பெரும்பாலும் நீட் விவகாரம், ஆன்லைன் ரம்மி விவகாரம் தொடர்பாக கோரிக்கைகளை வைக்க வாய்ப்பு உள்ளது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications