இனி சார்ட் போட்ட பறகும் டிக்கெட் புக்கிங் செய்யலாம்! இந்திய ரயில்வே அதிரடி அறிவிப்பு
டெல்லி: இந்திய ரயில்களில் இனி சார்ட் போட்ட பிறகும் டிக்கெட் புக்கிங் செய்யலாம் என இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. இதனால் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளார்கள்.
இந்தியாவில் நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் ரயில்களில் பயணித்து வருகின்றனர். சொகுசு ரயில்கள், அதிவேக விரைவு ரயில்கள், வந்தே பாரத், தேஜாஸ், சதாப்தி, ராஜ்தானி உள்ளிட்ட பல்வேறு அதிநவீன ரயில்கள் இயக்கப்பட்டாலும், முக்கிய வழித்தடங்களில் டிக்கெட் கிடைப்பது சவாலாகவே உள்ளது. குறிப்பாக பண்டிகை மற்றும் விடுமுறை காலங்களில் இருக்கைகளுக்கான தேவை மிக அதிகமாக இருக்கிறது.

இந்திய ரயில்வே, பயணிகள் பயணத்தை உறுதி செய்யும் வகையில், ரயில் புறப்படுவதற்கு முன்பு இரண்டு முறை உறுதிப்படுத்தப்பட்ட பயணிகளின் பட்டியலை (சார்ட்) வெளியிடுகிறது. முன்னதாக, முதல் சார்ட் 4 மணி நேரத்திற்கு முன்பாக வெளியிடப்பட்டு வந்தது. தற்போது இது மாற்றப்பட்டு, ரயில் புறப்படுவதற்கு 8 மணி நேரத்திற்கு முன்பாகவே வெளியிடப்படுகிறது. இரண்டாவது மற்றும் இறுதி சார்ட், ரயில் கிளம்பும் 30 நிமிடங்களுக்கு முன்பாக வெளியாகும்.
இந்திய ரயில்வே வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பின்படி, பயணிகள் இனி இறுதி நேரம் வரை டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முடியும். இதற்கு முன்னர், முதல் சார்ட் வெளியான பிறகு டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வது சாத்தியமில்லாமல் இருந்தது. ஆனால் இப்போது, ரயில் புறப்படுவதற்கு கடைசி 30 நிமிடங்கள் முன்பு வரை, அதாவது இரண்டாவது சார்ட் வெளியாகும் வரை, டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய இந்திய ரயில்வே அனுமதித்துள்ளது. இது திடீர் பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்குப் பெரும் உதவியாக இருக்கும்.
முதல் சார்ட் வெளியிடப்பட்ட பிறகு, ஏதேனும் இருக்கைகள் காலியாக இருந்தால், அவை ஐ.ஆர்.சி.டி.சி (IRCTC) இணையதளத்திலும், மொபைல் செயலியிலும் உடனடியாகக் காட்டப்படும். காலியான இருக்கைகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் பயணிகள் தங்களுக்குத் தேவையான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்துகொள்ளலாம். இந்த இருக்கைகளை ஐ.ஆர்.சி.டி.சி அதிகாரப்பூர்வ வலைத்தளம், மொபைல் செயலி அல்லது ரயில் நிலையங்களில் உள்ள முன்பதிவு கவுண்ட்டர்கள் வழியாகப் பெற்றுக் கொள்ள முடியும்.
இந்த அறிவிப்பு பண்டிகை காலங்களில் எந்த அளவுக்கு கைக் கொடுக்கும் என தெரியவில்லை. பண்டிகை காலங்களில் முன்கூட்டியே டிக்கெட்டுகள் புக்கிங் செய்யப்படுகிறது. இது சில நிமிடங்களில் விற்றுத் தீர்ந்துவிடுவதால் பலருக்கு டிக்கெட் கிடைக்காத நிலை உள்ளது. எனவே இந்த சலுகை மற்ற நாட்களில் பயன்படுத்திக் கொள்ள ஏதுவாக அமையும்.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications