ஸ்லீப்பர் வந்தே பாரத் ரயிலை விடுங்க.. புதுசா வரும் சரக்கு ரயில்! இந்தியன் ரயில்வேயின் மாஸ்டர் பிளான்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: வந்தே பாரத் ரயில்களில் விரைவில் ஸ்லீப்பர் ரயில் அறிமுகம் செய்யப்பட உள்ள நிலையில், அடுத்த கட்டமாக வந்தே பாரத் சரக்கு ரயில் அறிமுகம் செய்ய ரயில்வே திட்டமிட்டு வருகிறதாம். சரக்கு ரயிலை பொறுத்தவரை விலை உயர்ந்த மற்றும் அழுகக்கூடிய பொருட்களை இந்த ரயில்களில் கொண்டு செல்லும் வகையில் இயக்க ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பயணிகள் விரைவாகவும் சொகுசாகவும் பயணம் செய்யும் வகையில், வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. பல்வேறு வழித்தடங்களிலும் வந்தே பாரத் ரயில்களை இந்திய ரயில்வே படிப்படியாக அறிமுகப்படுத்தி வருகிறது. வந்தே பாரத் ரயில்களை பொறுத்தவரை பயணிகளுக்கு சொகுசான இருக்கைகள், தானியங்கி கதவும், முழுவதும் ஏசி வசதி என பல்வேறு வசதிகளும் உள்ளன.

vande bharat train railway

வந்தே பாரத் ரயில்கள் தற்பொது இருக்கை வசதி கொண்டவையாக இயக்கப்படுகின்றன. விரைவில் ஸ்லீப்பர் வசதி கொண்ட ரயில்கள் இயக்கப்பட உள்ளது. வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டு விரைவில் சோதனை ஓட்டமும் நடைபெற உள்ளது. தற்போது வந்தே பாரத் ஸ்லீப்பர் பெட்டிகளை போல வந்தே பாரத் சரக்கு ரயிலும் அறிமுகம் செய்ய ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாம்.

பிளிப் கார்ட், அமேசான் போன்ற இ காமர்ஸ் நிறுவனங்களின் செல்போன்கள் உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்கள் இந்த வந்தே பாரத் ரயில்களில் எடுத்து செல்லப்படும் என ரயில்வே வட்டார தக்வல்கள் கூறுகின்றன. தற்பொது இ காமர்ஸ் நிறுவனங்கள் வாடிக்கையாளர்கள் ஆர்டர் செய்த பொருட்களை சப்ளை செய்ய விமானம் வழியாகவும் சாலை வழியாகவும் கொண்டு செல்கின்றன.

வந்தே பாரத் சரக்கு ரயில் அறிமுகம் செய்யப்பட்டு அவற்றில் இத்தகைய பொருட்களை கொண்டு செல்லும் போது, வாடிக்கையாளர்களுக்கும் பயன்கிடைக்கும் என்பதொடு.. ரயில்வேக்கும் கணிசமான வருவாய் கிடைக்கும் என்பதால் ரயில்வே நிர்வாகம் இத்தகைய திட்டத்தை கையில் எடுத்து இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

மும்பை - குஜராத் ரூட்டில் சோதனை ஓட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அடுத்த நிதியாண்டில் இருந்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வாய்ப்புள்ளதாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன. தற்போது இந்திய ரயில்வே சரக்கு போக்குவரத்து மூலமே கணிசமான வருவாய் ஈட்டுகிறது. அதிலும் நிலக்கரி, ஸ்டீல், இரும்பு தாது, உணவு தானிய பொருட்கள், உரங்கள் ஆகிய சரக்குகள் மட்டுமே சரக்கு ரயில்களில் எடுத்து செல்லப்படுகிறது.

தற்போது உயர் மதிப்பு கொண்ட பொருட்களையும் எடுத்து செல்ல திட்டமிட்டு இருப்பதன் மூலமாக ரயில்வேயின் வருவாய் மேலும் அதிகரிக்கும் என்றே ரயில்வே வட்டாரங்கள் கூறுகின்றன. தற்போது இந்த பெட்டிகள் சென்னை ரயில் பெட்டி தொழிற்சாலையில் (ஐசிஎப்) தயாரிக்கப்பட்டு வருகிறது. சுமார் 250 - 290 டன் வரையில் மதிப்பு மிக்க பொருட்களை கையாளும் வகையில் இந்த ரயில் இயக்கப்படும் என கூறப்படுகிறது.

இதேபோல் இந்த ரயில்களின் பெட்டிகளின் நீளம் அதிகபட்சமாக 13 மீட்டர் தொலைவு கொண்டதாக இருக்கும் எனவும் ரயில்வே தகவல்கள் கூறுகின்றன. வந்தே பாரத் பார்சல் ரயில்கள் என்பது தற்போது டெவலப்பிங் ஸ்டேஜில் தான் இருப்பதாகவும் எனினும் நவீன பொருட்களை எடுத்து செல்லும் வகையிலான பெட்டிகளை தயாரிக்க அனைத்து தரவுகளையும் பெற்று வருவதாகவும் பெயர் வெளியிட விரும்பாத அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

விலை மதிப்பு மிக்க பொருட்கள் ரோஜாக்கள் மற்றும் மல்லிகை போன்ற ஏற்றுமதி பொருட்கள் ஆகியவற்றையும் இந்த வந்தே பாரத் சரக்கு ரயில்களில் எடுத்து செல்லும் வகையில் திட்டம் வகுக்கப்படுவதாக அதிகாரிகள் தரப்பில் சொல்லப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+