ஒரே ஒரு சின்ன தப்பு.. H-1b விசாவை ரத்து செய்த அமெரிக்க அதிகாரிகள்.. கண்ணீர் வடிக்கும் இந்திய பெண்
டெல்லி: அமெரிக்கா செல்லவிருந்த இந்தியப் பெண்ணின் ஹெச்-1பி விசா கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளது. அவர் தேவையில்லாமல் செய்த ஒரே ஒரு சின்ன தவறு காரணமாகவே அவர் இப்போது விசாவை இழந்துள்ளார். அவரது ஹெச்-1பி விசா ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், இப்போது நேர்காணல்களும் நடக்காமல் இருப்பதால் அவர் இந்தியாவிலேயே சிக்கியிருக்கிறார்.
டிரம்ப் வந்த பிறகு ஹெச்-1பி விசா உட்பட அமெரிக்கா விசா கெடுபிடிகள் அதிகரித்துவிட்டது. சின்ன சின்ன விஷயத்திற்கு எல்லாம் விசா ரத்து செய்யப்படுகிறது. இதனால் அமெரிக்காவில் உள்ள இந்தியர்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர். அப்படியொரு சம்பவம் தான் இப்போது நடந்துள்ளது.

ஹெச்-1பி விசா
ஹெச்-1பி விசா வைத்திருந்த பெண் ஒருவர் தனது விசா எந்தவொரு முன்னறிவிப்பும் இல்லாமல் ரத்து செய்யப்பட்டதாகக் கூறியுள்ளார். இது தொடர்பாகத் தனது அனுபவத்தை ரெட்டிட் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். கடந்த ஜனவரி மாதம் கணவருடன் அமெரிக்கா திரும்பும் போது அபுதாபியில் உள்ள அமெரிக்கச் சுங்க மையத்தில் தனது விசா திடீரென ரத்து செய்யப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
தனது மகளின் முதல் பிறந்தநாளைக் கொண்டாட நவம்பர் மாதம் இந்தியாவுக்கு வந்ததாக அவர் கூறினார். டிசம்பர் 3வது வாரத்தில் இந்தியாவில் மிகப் பெரியளவில் விசா ஸ்டாம்பிங் பிரச்சனை வந்தது அனைவருக்கும் தெரியும். விசா நேர்காணல் பிரசாஸ் 6 மாதங்கள் முதல் ஓராண்டு வரையிலும் கூட தள்ளி வைக்கப்பட்டது. இருப்பினும், இந்த பெண் சரியாக அதற்கு முன்பே விசா ஸ்டாம்பிங் வாங்கிவிட்டாராம். எனவே, அதில் பிரச்சனை இல்லை.
சிறு தவறு
அவரது கணவருக்கு எந்தவொரு சிக்கலும் இல்லை. இருப்பினும், இவரைத் தடுத்து நிறுத்தியுள்ளனர். இந்தியாவில் எவ்வளவு காலம் தங்கியிருந்தார்? அப்போது வேலை செய்தாரா? எனக் கேட்டுள்ளனர். தான் சுமார் இரண்டு மாதங்கள் இந்தியாவில் இருந்ததாகவும், விடுமுறைக்கு வந்தாலும் பகுதி நேரமாக வேலை செய்ததாகப் பதிலளித்தார்.. அதாவது அதிகாரப்பூர்வமாக விடுப்பில் இருந்தாலும் கூட நடுவே கொஞ்சம் பார்ட் டைமாக வேலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதுவே அவருக்குச் சிக்கலாக மாறியுள்ளது.
அவரை அனுமதிக்காமல் மேற்கொண்ட சோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். அங்கிருந்த அதிகாரிகள் வேலை அக்ரிமெண்ட்டில் இந்தியாவில் இருந்து வேலை செய்ய அனுமதிக்கப்பட்டது என்பதைக் காட்டும் ஆவணங்களை வழங்கும்படி கேட்டனர். ஆனால், அதுபோன்ற பாயிண்டுகள் தனது வேலை ஆவணங்களில் சேர்க்கப்படவில்லை என்று அந்தப் பெண் தெரிவித்தார்.
விசா ரத்து
இதையடுத்து அவர் இந்தியாவில் அதிகக் காலம் தங்கி இருந்ததாக அமெரிக்கச் சுங்கத் துறை அதிகாரிகள் குற்றம் சாட்டினர். இந்தியாவில் இருந்து வேலை செய்து கொண்டு ஒரு அமெரிக்க நிறுவனத்திடம் இருந்து சம்பளம் பெறுவது அமெரிக்கக் குடிவரவு விதிமுறைகளை மீறுவதாகும் என்றும் கூறினர். இதையடுத்து அவரது ஹெச்-1பி விசாவை ரத்து செய்துள்ளனர். ஹெச்-1பி வேண்டும் என்றால் மீண்டும் விண்ணப்பிக்க அறிவுறுத்தியுள்ளனர்.
முன்பே குறிப்பிட்டது போல இப்போது புதிய ஹெச்-1பி விசா நேர்காணல் எதுவும் நடைபெறுவதில்லை. நேர்காணல்கள் மாதக்கணக்கில் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதனால் அமெரிக்கா செல்ல முடியாமல் இந்தியாவிலேயே சிக்கித் தவிப்பதாக அவர் கூறியுள்ளார்.
வல்லுநர்கள் சொல்வது என்ன
தான் எதாவது தவறு செய்துவிட்டேனா என அவர் தனது நிறுவனத்தின் வழக்கறிஞரிடம் கேட்டுள்ளார். இருப்பினும், இந்தியாவில் இருந்து வேலை செய்வது சட்டவிரோதமல்ல என்று அவரது நிறுவனத்தின் குடிவரவு வழக்கறிஞர் கூறியுள்ளார். தவறு செய்யவில்லை என்றாலும் கூட விசா பறிபோய்விட்டது. இதனால் அந்தப் பெண் மிகுந்த மன அழுத்தத்தில் இருப்பதாகவும், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து யோசித்து வருவதாகத் தெரிவித்தார்.
தேவையே இல்லாத விஷயத்திற்காகவே அந்த பெண்ணின் விசா ரத்து செய்யப்பட்டுள்ளது என்ற போதிலும் இதைச் செய்ய அமெரிக்க அதிகாரிகளுக்கு முழுமையாக அதிகாரம் உள்ளதாகவே வல்லுநர்கள் கூறுகிறார்கள். டிரம்ப் காலத்தில் விசா விதிமுறைகள் மிகக் கடுமையாக மாற்றப்பட்டுள்ள நிலையில், நேர்காணல்களில் கவனமாக இருக்கும்படி அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
-
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
இரண்டாக பிளந்த விமானம்.. விமான நிலையத்தில் மோசமான விபத்து.. திடீர் பரபரப்பு! -
பலமாக அடி வாங்கிய அமெரிக்கா! ரவுண்டு கட்டும் ஈரான்.. F-15 போர் விமானத்தின் நிலையை பாருங்க -
போச்சு.. ஈரானின் ஈரலை அறுத்த அமெரிக்கா! நடன்ஸ் அணுமையம் மீது இஸ்ரேல் அட்டாக்! நெருங்கும் கிளைமேக்ஸ்? -
"இன்னும் 48 மணி நேரம் தான் டைம்.." ஈரானுக்கு இறுதி எச்சரிக்கை கொடுத்த டிரம்ப்! அடுத்து பேரழிவு தான்? -
பஹ்ரைனில் சொதப்பிய US! பாதுகாப்பு டெக்னாலஜியில் பெரிய ஓட்டை! குடியிருப்புக்குள் பாய்ந்த ஏவுகணை -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
Greenland: கிரீன்லாந்தை பாதுகாக்க நாங்க தயார்.. டிரம்ப் விலைக்கு கேட்டு வந்த நிலையில் ஈரான் அதிரடி! -
20% வரை சரிந்த தங்கம் விலை! ஆனாலும் இந்தியாவுக்கு முழு பலன் கிடைக்காது! நிபுணர்கள் சொல்லும் விளக்கம் -
3ம் உலகப்போர் வாசலில் நிற்கும் உலகம்? ஈரானை வீழ்த்த அணு குண்டை கையில் எடுக்கும் இஸ்ரேல், அமெரிக்கா? -
கர்ப்பிணிக்கு WFH மறுப்பு! குழந்தை உயிரிழந்த விவகாரத்தில் அமெரிக்க நிறுவனத்திற்கு ₹188 கோடி அபராதம்!












Click it and Unblock the Notifications