Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாகிஸ்தானின் மிகப்பெரிய நிறுவனங்கள் கூட.. இந்தியா கிட்ட நெருங்க முடியாது! நமது பலமே பொருளாதாரம் தான்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட மோதல் தற்போது குறைந்திருக்கிறது. இந்நிலையில் இரு நாடுகளும் பொருளாதாரத்தில் எந்த அளவுக்கு பலமாக இருக்கின்றன என்பது பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி இந்தியாவின் முதல் 240 நிறுவனங்களிடம், பாகிஸ்தானின் மிக்பெரிய நிறுவனங்களும் நெருங்கக்கூட முடியாது என்று சொல்லப்பட்டிருக்கிறது.

இந்தியாவின் சந்தை மூலதனம் 4.24 டிரில்லியன் டாலர். ஆனால் பாகிஸ்தானின் சந்தை மூலதனம் வெறும் 44.06 பில்லியன் டாலர் மட்டுமே.

Pakistan China Asia

பாகிஸ்தானின் மிகப்பெரிய நிறுவனம் ஆயில், கேஸ் டெவலப்மென்ட் கம்பெனி லிமிடெட்தான். இதன் சந்தை மூலதனம் 2.74 பில்லியன் டாலராகும். ஒரு வேளை இந்த நிறுவனம் இந்தியாவில் இருந்திருந்தால் அது 280வது இடத்தில் இருந்திருக்கும். அதேபோல அந்நாட்டில் 1 பில்லியன் டாலருக்கும் அதிகமான சந்தை மூலதனத்தை கொண்ட நிறுவனங்கள் 9 மட்டுமே இருக்கின்றன.

  • எண்ணெய் மற்றும் எரிவாயு மேம்பாட்டு நிறுவனம் லிமிடெட் - 2.74
  • மரி எனர்ஜிஸ் லிமிடெட்- 2.32
  • யுனைடெட் பேங்க் லிமிடெட்/பாகிஸ்தான் - 1.99
  • மீசான் பேங்க் லிமிடெட் - 1.61
  • ஃபாஜி ஃபெர்டிலைசர் கோ லிமிடெட் - 1.67
  • பாகிஸ்தான் பெட்ரோலியம் லிமிடெட் - 1.27
  • நெஸ்லே பாகிஸ்தான் லிமிடெட் - 1.13
  • எம்சிபி பேங்க் லிமிடெட் - 1.12
  • கோல்கேட் பாமோலிவ் - 1.02
  • பாகிஸ்தான் டொபாக்கோ கோ லிமிடெட் - 0.99
  • பெஸ்ட்வே சிமென்ட் லிமிடெட் - 0.81
  • ஸ்டாண்டர்ட் சார்ட்டர்டு பேங்க் பாகிஸ்தான் லிமிடெட் - 0.78
  • எங்ரோ ஃபெர்டிலைசர் லிமிடெட் - 0.74
  • ஹபீப் பேங்க் லிமிடெட் - 0.68
  • பாகிஸ்தான் தேசிய வங்கி - 0.57
  • ஃபாத்திமா ஃபெர்டிலைசர் கோ லிமிடெட் - 0.57
  • ஹப் பவர் கோ லிமிடெட்/தி - 0.55
  • பாகிஸ்தான் ஸ்டேட் ஆயில் கோ லிமிடெட் - 0.52
  • இண்டஸ் மோட்டார் கோ லிமிடெட் - 0.52
  • பேங்க் அல் ஹபீப் லிமிடெட் - 0.53

இதுதான் பாகிஸ்தானின் மிகப்பெரிய நிறுவனங்கள். இந்த நிறுவனங்களின் பங்குகள் இந்திய சந்தையை விட குறைவாக இருக்கிறது என்று ப்ளூம்பெர்க் வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களில் தெரிய வந்திருக்கிறது.

இந்தியாவை பொறுத்தவரை சுமார் 550க்கும் அதிகமான நிறுவனங்கள் 1 பில்லியன் டாலருக்கும் அதிகமான சந்தை மூலதனத்தை கொண்டிருக்கின்றன. அதேபோல இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனங்களாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், HDFC வங்கி, TCS, பாரதி ஏர்டெல் மற்றும் ICICI வங்கி ஆகியவை ஒவ்வொன்றும் தலா 100 பில்லியன் டாலருக்கும் அதிகமான சந்தை மூலதனத்தைக் கொண்டுள்ளன. சென்செக்ஸ் பட்டியலில் உள்ள மிகச்சிறிய நிறுவனமான இண்டஸ்இண்ட் வங்கி கூட சுமார் 7.5 பில்லியன் டாலர் சந்தை மூலதனத்தைக் கொண்டுள்ளது.

ப்ளூம்பெர்க் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி இந்தியாவின் 20 நிறுவனங்கள் கடந்த ஓராண்டில் சுமார் 1 பில்லியன் டாலருக்கும் அதிகமாக சந்தை மதிப்பை கொண்டிருக்கின்றன. இதே காலகட்டத்தில் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, HDFC வங்கி மற்றும் RIL போன்ற நிறுவனங்கள் ஒவ்வொன்றும் 8-10 பில்லியன் டாலர் நிகர லாபத்தை ஈட்டியுள்ளன. இதையெல்லாம் வைத்து பார்க்கும்போது பொருளாதாரத்தில் இந்தியாவின் பக்கத்தில் கூட பாகிஸ்தான் நெருங்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+