"காஸ்ட்லி நகரங்கள்.." டாப் 2 இடங்களில் மும்பை, டெல்லி.. அப்போ சென்னை, பெங்களூருக்கு எந்த இடம்?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மெர்சர் என்ற நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் காஸ்ட்லி நகரங்கள் குறித்த லிஸ்டை வெளியிடும். இந்தாண்டு இந்தியாவிலேயே மிகவும் காஸ்ட்லியான நகரம் என்ற பெயரை நமது நாட்டின் நிதி தலைநகராகக் கருதப்படும் மும்பை இருக்கிறது. நமது தேசிய தலைநகர் டெல்லி இதில் இரண்டாவது இடத்தில் உள்ள நிலையில், மற்ற இந்திய நகரங்களும் லிஸ்டில் உள்ளன.

நாட்டின் மனிதவள ஆலோசனை நிறுவனமான மெர்சர் எந்த இந்திய நகரம் மிகவும் காஸ்ட்லியானது என்பது குறித்த ரிப்போர்ட்டை வெளியிட்டுள்ளது. இதில் சர்வதேச அளவில் பார்க்கும்போது ஹாங்காங் தான் விலையுயர்ந்த நகரமாக இருக்கிறது.

Mumbai delhi Chennai offbeat

காஸ்ட்லி நகரங்கள்: இந்திய அளவில் பார்க்கும் போது நாட்டின் நிதி தலைநகராகவும் பாலிவுட் தாயகமாகவும் விளங்கும் மும்பை தான் நாட்டிலேயே வாழ மிகவும் காஸ்ட்லி நகரமாக இருப்பதாக மெர்சர் நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தனிப்பட்ட செலவு, எனர்ஜி, போக்குவரத்து மற்றும் வீட்டு வாடகை ஆகியவற்றில் மும்பை மிகவும் காஸ்ட்லியாக இருப்பதாக அதில் கூறப்பட்டுள்ளது. கடந்த ஓராண்டில் இந்த தரவரிசையில் மும்பை பல இடங்கள் மேலே சென்றுள்ளது.

சரவதேச அளவிலான தரவரிசையில் ஒரேயாண்டில் மும்பை 11 இடங்கள் முன்னேறி 136ஆவது இடத்தை பிடித்துள்ளது. டெல்லியும் கூட கணிசமான இடங்களில் முன்னேறி இருக்கிறது. கடந்தாண்டு உடன் ஒப்பிடுகையில் 4 இடங்கள் முன்னேறி காஸ்ட்லி நகரங்களில் டெல்லி 164ஆவது இடத்தை பிடித்துள்ளது.

சென்னை எங்கே: அதேநேரம் நமது தலைநகர் ஓராண்டில் சென்னை 5 இடங்கள் சரிந்து 189ஆவது இடத்தை பிடித்துள்ளது. கர்நாடகாவின் பெங்களூர் 6 இடங்கள் சரிந்து 195 இடத்தை பிடித்துள்ளது. ஹைதராபாத் எந்தவொரு ஏற்ற இறக்கம் இல்லாமல் 202ஆவது இடத்தில் தொடர்கிறது. புனே எட்டு இடங்கள் முன்னேறி 205ஆவது இடத்திலும், கொல்கத்தா நான்கு இடங்கள் முன்னேறி 207வது இடத்திலும் உள்ளன.

ஆசியா பிராந்தியத்தில் மும்பை 21வது மிகவும் காஸ்ட்லியான நகரமாக இருக்கிறது. டெல்லி ஆசியப் பிராந்தியத்தில் 30வது இடத்தில் உள்ளது.

தொழில் செய்ய ஏற்ற இடம்: இது தொடர்பாக ஆய்வை நடத்திய மெர்சர் நிறுவனத்தின் இந்திய பிரிவு தலைவர் ராகுல் ஷர்மா கூறுகையில், "சர்வதேச அளவில் பல்வேறு பொருளாதார சவால்கள் இருந்தபோதிலும் இந்தியாவில் செலவுகள் குறைந்துள்ளன. மும்பை தரவரிசையில் அதிகரித்த போதிலும் ஒட்டுமொத்தமாகப் பார்க்கும் போது இந்திய நகரங்களில் செலவு குறைந்துள்ளது. இது பன்னாட்டு மற்றும் இந்திய நிறுவனங்களுக்கு ஈர்க்கவே செய்யும். இந்தியாவில் நிலவும் சூழல்கள் நமது நாட்டை தொழில் செய்ய ஏற்ற இடமாக மாற்றுகிறது" என்றார்.

எந்த நகரில் எது காஸ்ட்லி: இந்திய நகரங்களில் முக்கிய செலவாக வாடகை தான் இருக்கிறது. இதில் டெல்லியில் ஓராண்டில் வாடகை 12-15 சதவிகிதம் அதிகரித்துள்ளது. நாட்டிலேயே வீட்டு வாடகை அதிகம் உள்ள நகரம் என்றால் அது டெல்லி தான்.. அடுத்து மும்பையில் 6-8 சதவீதமும், பெங்களூரில் 3-6 சதவீதமும், புனே, ஹைதராபாத் மற்றும் சென்னையில் தலா 2-4 சதவீதமும் வீட்டு வாடகை அதிகரித்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

மும்பையில் ஆட்டோமொபைல் மற்றும் வாகன உதிரிப்பாகங்கள் உட்பட போக்குவரத்து செலவுகள் அதிகமாக இருக்கிறது. இந்த போக்குவரத்தில் பெங்களூர் இரண்டாவது இடத்தில் வருகிறது. மறுபுறம் பால், பழங்கள் மற்றும் காய்கறிகள் மிகவும் மலிவாக விற்கப்படும் நகரமாகக் கொல்கத்தா இருக்கிறது. இதில் அடுத்த இடத்தில் புனே வருகிறது.

டெல்லியில் மது மற்றும் புகையிலை பொருட்களின் விலை குறைவாக இருக்கிறது. தனிநபர் பராமரிப்புப் பொருட்களைப் பொறுத்தவரை, மும்பை மிகவும் காஸ்ட்லியாக இருக்கும் நிலையில், சென்னை இரண்டாவது இடத்தில் வருகிறது. இதிலும் கொல்கத்தா தான் செலவு குறைந்த நகரமாக இருக்கிறது. எனர்ஜி மற்றும் மின்சாரத்தில் மும்பை, புனே அடுத்தடுத்த இடங்களில் உள்ளது.

சர்வதேச ரேங்கிங்: இதில் சர்வதேச அளவில் பார்க்கும் போது முதல் 5 இடங்களில் மாற்றம் எதுவும் இல்லை. ஏற்கனவே சொன்னது போல ஹாங்காங் முதலிடத்தில் இருக்கிறது. சிங்கப்பூர், சூரிச், ஜெனிவா, பாசல், பெர்ன், நியூயார்க் நகரம், லண்டன், நாசாவ் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் ஆகியவை வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+