எங்க ஊரு பொண்ணுங்க ஃப்ளவர் இல்ல ஃபயரு! குங்குமம், பெண்களை வைத்தே பாக்.ஐ பந்தாடிய இந்தியா! கொல மாஸ்.!
டெல்லி: ஜம்மு காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பலியான நிலையில் ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்துள்ளது இந்தியா. தாக்குதலில் கொல்லப்பட்ட பெண்களின் குங்குமம் அழிக்கப்பட்டதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்த நடவடிக்கைக்கு 'ஆபரேஷன் சிந்தூர்' என பெயரிடப்பட்டுள்ளது. மேலும் இந்த தாக்குதல் தொடர்பாக இரு பெண் அதிகாரிகளை வைத்து விளக்கம் கொடுத்திருக்கிறது இந்தியா. பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்க எங்கள் பெண்களே போதும் என நேரடியாகவே பாகிஸ்தானை சாடி இருக்கிறது இந்தியா.
காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த மாதம் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் உள்ள பயங்கரவாத முகாம்களை துல்லியமாக தாக்கியுள்ளது. இந்தியா மேற்கொண்ட இந்த தாக்குதலுக்கு உலகின் முக்கிய நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
இந்த தாக்குதலில் 9 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக ஜெய்ஸ்-இ-முகமது, லஷ்கர்-இ-தொய்பா, ஹிஸ்புல் முஜாஹிதீன் ஆகிய அமைப்புகள் பயன்படுத்திய முகாம்கள் குறிவைக்கப்பட்டன. பாகிஸ்தான் நிலப்பரப்பில் உள்ள 4 முகாம்கள், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 5 முகாம்கள் தாக்கப்பட்டன.

இந்த தாக்குதலுக்கு அமெரிக்கா, இஸ்ரேல் உள்ளிட்ட உலகின் முக்கிய நாடுகள் இந்தியாவுக்கு ஆதரவாக உள்ளன. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், "இந்தியாவின் நடவடிக்கைக்கு முழு ஆதரவு. தீவிரவாதத்தை ஒழிப்பதில் இந்தியாவுடன் உறுதியாக இருப்போம்" என்று கூறியுள்ளார். இஸ்ரேல் பிரதமர், "தீவிரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் போராட்டத்தை முழுமையாக ஆதரிக்கிறோம். இந்தியா எங்கள் நல்ல நண்பர்" என்று தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் இந்த தாக்குதலில் குறி வைக்கப்பட்ட இலக்குகள் மற்றும் தாக்குதல் குறித்த விவரங்களை இன்று வெளியுறவுத்துறை செயலர் விக்ரம் மிஸ்ரி செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அப்பாவி பொதுமக்கள் மீது பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதாகவும் அதற்கு பதிலடி கொடுக்கும் விதத்திலேயே திருப்பித் தாக்கும் வாய்ப்பையே இந்தியா பயன்படுத்தியுள்ளது என கூறியிருந்தார்.
தொடர்ந்து தாக்குதல் தொடர்பான விபரங்களை இந்திய ராணுவத்தின் கர்னல் சோபியா குரேசி, இந்திய விமானப் படையின் விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகியோர் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர். தாக்குதல் குறித்த விபரங்களை தெரிவித்த இருவருமே ராணுவம் மற்றும் விமானப்படையின் மிகச்சிறந்த வீராங்கனைகள் என்பது குறிப்பிடத்தக்கது.
https://twitter.com/ANI/status/1919987661911069007ஜம்மு காஷ்மீரில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் ஆண்களை குறி வைத்து கொலை செய்தனர். நெற்றி பொட்டுக்கு அருகே துப்பாக்கியை வைத்து சுட்டு கொலை செய்தது தெரியவந்துள்ளதாக வெளியுறவுத்துறை செயலர் விக்ரம் மிஸ்ரி கூறியிருந்தார்.
இந்த நிலையில் இந்தியாவின் நடவடிக்கைகள், எங்கள் ஊர் பெண்களே போதும் பாகிஸ்தானை பந்தாடுவதற்கு என்ற செய்தியை நேரடியாக சொல்வது போல் தான் இருக்கிறது. ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரின் மூலம் பெண்களின் திலகத்தை அழித்த தீவிரவாதிகளை பந்தாடியதோடு தாக்குதல் குறித்த விபரங்களை பெண் அதிகாரிகள் மூலம் தெரிவித்து இருக்கிறது. பொதுவாக ராணுவ நடவடிக்கைகள் குறித்த தகவல்களை ராணுவத்தின் உயர் அதிகாரிகள் குறிப்பாக ஆண் அதிகாரிகள் தான் தெரிவிப்பார்கள். ஆனால் முதன் முறையாக பெண் அதிகாரிகளை வைத்து விளக்கம் கொடுத்திருக்கிறது இந்தியா என்பது கவனிக்கத்தக்கது.
-
இந்தியர்களுக்கு குட்பை.. அமெரிக்காவிற்கே மூட்டையைக் கட்டிய பிரபல நிறுவனம்.. ஐடி ஊழியர்கள் ஷாக் -
இந்தியக் கப்பல்கள் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்.. டிரம்பின் பகீர் குற்றச்சாட்டும், பின்னணியும்! -
மீண்டும் டிரம்ப் அடித்த பல்டி! "எல்லாம் நல்லா போகுது.. தாக்குதல் கேன்சல்!" உற்று பார்க்கும் ஈரான் -
வாழ வைத்த இந்தியா! 22 வயசுல பெங்களூர் வந்த அமெரிக்கர்.. இன்னைக்கு டாப் கோடீஸ்வரர்! எப்படினு பாருங்க -
அடங்காத போர் வெறி.. அமெரிக்க தாக்குதலில் பறிபோன 3 இந்தியர்களின் உயிர்! ஓமனில் அதிர்ச்சி! -
அமெரிக்க தாக்குதலில் இந்திய மாலுமிகள் மாயம்.. துணை தூதரை அழைத்து கண்டித்த மத்திய அரசு! -
"ஹார்முஸை நெருங்கினாலே சரமாரி தாக்குதல் நடத்துவோம்.." அச்சுறுத்தும் ஈரான்.. அமைதி ஒப்பந்தம் காலி -
டென்ஷனான இந்தியா.. அமெரிக்க தூதரக பொறுப்பாளரை நேரில் அழைத்து சம்மன்.. பரபரப்பு சம்பவத்தின் பின்னணி -
"எங்களை ரஷ்ய கச்சா எண்ணெய்யை வாங்க சொன்னதே அமெரிக்கா தான்.." ரகசியத்தை உடைத்த இந்தியா! என்ன நடந்தது -
பேரழிவு வர போகுது.. ஈரானுக்கு நேரடியாக டிரம்ப் தந்த மரண வார்னிங்.. மீண்டும் வெடிக்கும் போர் -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி












Click it and Unblock the Notifications