கப்சிப் என கதையை முடித்த இந்தியா.. கை கொடுத்த ஸ்பெஷல் ட்ரோன்! ஆபரேஷன் சிந்தூரின் முக்கிய ஆயுதம்
டெல்லி: பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், இந்திய ராணுவம் இன்று அதிகாலை தாக்குதலை தொடங்கியது. 9 நிலைகளை குறி வைத்து நடத்தப்பட்ட தாக்குதல் வெற்றியடைந்துள்ளது. இதற்கு பெரிதும் உதவியது ஸ்பெஷல் ட்ரோன்தான்.
இந்திய ராணுவத்தின் பதிலடி தாக்குதலுக்கு ஆபரேஷன் சிந்தூர் என பெயரிடப்பட்டிருக்கிறது. இதில் பயன்படுத்தப்பட்ட ஸ்பெஷல் ஆயுதம் பற்றி இந்த செய்தி விவரிக்கிறது.

இந்திய ராணுவம் பயன்படுத்திய ஸ்பெஷல் ட்ரோன் 'Loitering Munitions' எனும் வகையை சேர்ந்தது. இவை சூசைட் ட்ரோன்கள் என்றும் அழைக்கப்படுகிறது. ட்ரோன்கள், ஏவுகணைகள், ராக்கெட்டுகள் எனில் எதிரிகளால் எளிதில் கண்டுபிடித்துவிட முடியும். ஆனால், இந்த வகை ஆயுதங்களை கண்டுபிடிப்பது கஷ்டம். இது பார்க்க ட்ரோன் போல இருந்தாலும் இது ட்ரோன் லிஸ்ட்டில் வராது. காரணம் இது மிக எளிமையான வடிவமைப்பை கொண்டிருக்கிறது.
ஒரு கேமரா, கொஞ்சம் வெடிப்பொருள். அவ்வளவுதான் இதன் உள்ளடக்கமே! இலக்கை இது தானாக முடிவு செய்து தாக்கும் திறன் கொண்டதாகும். கார், வீடு, கட்டிடத்தின் குறிப்பிட்ட இடம், பெரிய பீரங்கி என குறிப்பிட்ட இலக்கை நாம் இதில் உள்ளீடு செய்ய வேண்டும். குட்டி விமானம் போல இருக்கும் இது, வானில் பறந்து இலக்கை அடையாளம் கண்டு தானாகவே தாக்கும். மலை பகுதியில், பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லாமல் ஒரு குறிப்பிட்ட இலக்கை மட்டும் தாக்க இது பயன்படுத்தப்படுகிறது. அதிகபட்சம் 2 மணி நேரம் வரை இது பறக்கும்.
இதை தடுப்பதற்கு நிறைய செலவு செய்ய வேண்டும். ட்ரோனின் விலை மலிவானது. இதை தடுக்க பயன்படுத்தும் ஆயுதத்தின் விலை பல மில்லியன் டாலர் வரை இருக்கும். எனவேதான் இது எதிரிகளுக்கு தலைவலியாக இருக்கிறது.
பாகிஸ்தானுக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூரில் இது பயன்படுத்தப்பட்டதற்கான காரணம், இலக்குகளை துல்லியமாக தாக்க வேண்டும் என்பதுதான். ஜெய்ஷ்-இ-முகமது மற்றும் லக்ஷர்-இ-தொய்பா போன்ற பயங்கரவாதிகளின் குடியிருப்பை மட்டும் குறிப்பிட்டு தாக்குதவதற்கு இந்த ஆளில்லா விமானங்கள்தான் சரியான ஆப்ஷன். மற்ற ஆயுதங்கள் எனில் குடியிருப்பு பகுதிகளில் பாதிப்பை ஏற்படுத்தலாம். பொதுமக்கள் சிலர் உயிரிழக்கலாம். எனவேதான் இது பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
கடந்த முறை விமானப்படை விமானங்களை கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் பாகிஸ்தான் எல்லைக்குள் ஊடுருவ வேண்டிய சூழல் ஏற்பட்டது. இப்படித்தான் அபிநந்தன் எனும் வீரர் அங்கு சிக்கினார். இந்த முறையும் இதுபோன்ற தவறுகள் ஏதும் நடந்துவிடக்கூடாது என்பதில் ராணுவம் மிக கவனமாக இருந்தது. ட்ரோன்களை பயன்படுத்த இதுவும் முக்கியமான காரணமாகும்.
-
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்!












Click it and Unblock the Notifications