இண்டிகோவின் கதை முடிகிறது? புதிய விமான நிறுவனங்களுக்கு அனுமதி.. மத்திய அமைச்சர் சொன்ன குட்நியூஸ்
டெல்லி: நம் நாட்டில் 65 சதவீதம் வரை உள்நாட்டு விமான போக்குவரத்தை இண்டிகோ கையில் வைத்துள்ளது. இதனால் தான் தற்போது மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் தான் எவ்வளவு பெரிய நிறுவனமாக இருந்தாலும் மக்களை பாதிக்கும் படியான செயலை ஏற்க முடியாது. புதிய விமான நிறுவனங்களை ஊக்குவிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம்மோகன் நாயுடு லோக்சபாவில் இன்று கூறினார்.
நம் நாட்டில் இண்டிகோ விமான சேவைகள் கடந்த 2ம் தேதி முதல் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். இன்னும் இண்டிகோ நிறுவனத்தில் விமான சேவைகள் இயல்பு நிலைக்கு வரவில்லை. இன்றும் நாடு முழுவதும் 500 இண்டிகோ விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் பயணிகள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தான் இண்டிகோ விமான சேவை பாதிப்புக்கு மத்திய அரசு தான் காரணம். மத்திய அரசு இண்டிகோ நிறுவனத்துக்கு ஏகபோகத்தை வழங்கி இருப்பது தான் மக்களின் சிரமத்துக்கு முக்கிய காரணம் என்று காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி உள்பட பல தலைவர்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.
இதற்கிடையே தான் இண்டிகோ விமான நிறுவனத்திடம் மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அதோடு இன்று மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு இன்று லோக்சபாவில் விளக்கம் அளித்தார்.
இதுபற்றி ராம் மோகன் நாயுடு கூறியதாவது: இண்டிகோ விமான போக்குவரத்து படிப்படியாக மீண்டு வருகிறது. நம் நாட்டில் எந்த விமான நிறுவனமாக இருந்தாலும் சரி, அது எவ்வளவ பெரிய நிறுவனமாக இருந்தாலும் கூட மக்களுக்கு பிரச்சனையை வழங்குவதை ஏற்க முடியாது. தற்போதைய பிரச்சனைக்கு விமான நிறுவனத்தின் (இண்டிகோ) திட்டமிடல் சார்ந்த தோல்வி, சட்டப்பூர்வமான விதியை பின்பற்றாதது உள்ளிட்டவை தான் காரணம்.
சிவில் விமான போக்குவரத்து பயணத்தின் பாதுகாப்பு என்பது மிகவும் முக்கியம். இதனால் அரசு வலுவான மற்றும் போட்டித்தன்மை வாய்ந்த விமானபோக்குவரத்து சூழலை உருவாக்குவதில் உறுதியாக உள்ளது'' என்றார். இதன்மூலம் நம் நாட்டில் உள்நாட்டு விமான சேவையை தொடங்க புதிய விமான நிறுவனங்களை தொடங்கும் முயற்சியை ஊக்குவிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.
நம் நாட்டை எடுத்து கொண்டால் இண்டிகோ விமானங்கள் தான் அதிகளவில் உள்நாட்டு சேவைகளை வழங்கி வருகிறது. உள்நாட்டு சேவையில் 65 சதவீதத்தை இண்டிகோ தான் பூர்த்தி செய்கிறது. இதற்கு அடுத்தப்படியாக ஏர் இந்தியா நிறுவனம் 27 சதவீத மார்க்கெட்டை வைத்துள்ளது. இதனால் தான் இண்டிகோ விமானங்கள் பற்றாக்குறையால் கடந்த ஒரு வாரமாக விமான சேவைகள் பெரியளவில் பிரச்சனையை எதிர்கொண்டு வருகிறது. இதற்கு மத்திய அரசு கொண்டு வந்த எப்டிடிஎல் ரூல்ஸ் தான் காரணம் என்று கூறப்பட்டது.
கடந்த டிசம்பர் 1ம் தேதி முதல் இந்த ரூல்ஸ் அமலுக்கு வந்த நிலையில் பைலட்டுகளை சுழற்சி முறையில் பணியமர்த்த முடியாமல் இண்டிகோ தவித்தது. இதனால் பைலட்டுகள் பற்றாக்குறை ஏற்பட்டது. தற்போது இந்த ரூல்ஸில் இருந்து இண்டிகோவுக்கு தளர்வு வழங்கப்பட்டுள்ளது. இது இண்டிகோவிற்கு மத்திய அரசு பணிந்ததை காட்டும் வகையில் உள்ளதாக எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.
அதாவது இண்டிகோ 65 சதவீதம் உள்நாட்டு சேவையை வழங்குவதால் மத்திய அரசால் அந்த நிறுவனம் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க முடியவில்லை. அப்படி நடவடிக்கை எடுத்தால் இன்னும் விமான சேவைகள் பாதிக்கப்பட்டு மக்கள் பாதிக்கப்படுவார்கள். இதனால் இண்டிகோவிற்கு செக் வைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. முதற்கட்டமாக, இண்டிகோ நிறுவனம் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
அதுமட்டுமின்றி தான் இண்டிகோ தற்போது இயக்கும் உள்நாட்டு வழித்தடங்களில் அதற்கு பதில் பிற நிறுவன விமானங்களை இயக்கவும், புதிதாக விமான நிறுவனங்களை ஊக்குவிக்கவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது நடக்கும் பட்சத்தில் இண்டிகோவின் விமான நிறுவனத்தின் சேவைகளில் பெருமளவில் குறையும். இதனால் அந்த நிறுவனத்துக்கு சிக்கல் ஏற்படும்.
-
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications