Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அடிப்பாவி.. 5 வயசு சின்ன பையனை காதலித்த சோனம்.. ஹனிமூனில் கணவனை தீர்த்துக் கட்டிய பின்னணி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தூர் தொழிலதிபர் ராஜா ரகுவன்ஷி கொலை வழக்கில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன. ராஜா ரகுவன்ஷியின் மனைவி சோனம் ரகுவன்ஷி, மேகாலயாவில் தேனிலவின்போது தனது கணவரை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சோனத்திற்கு ராஜ் குஷ்வாஹா என்ற இளைஞருடன் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. ராஜ் குஷ்வாஹாவுடனான உறவு காரணமாகவே சோனம் தனது கணவரை கொலை செய்ததாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ராஜ் குஷ்வாஹா யார், சோனம் அவரை எப்படி சந்தித்தார்.. இதோ விவரம்.

Meghalaya Hanymoon

வயது குறைவான காதலன்

சோனத்திற்கும் மே 10ம் தேதி திருமணமானது. ஆனால், ராஜ் குஷ்வாஹாவிடன் அதற்கு முன்பே காதல் இருந்தது. இதில் கவனிக்க வேண்டியது, ராஜ் குஷ்வாஹா சோனத்தை விட ஐந்து வயது சிறியவர் என்று கூறப்படுகிறது. சோனத்தின் தந்தை தேவி சிங் இந்தூரில் சிறிய பிளைவுட் தொழிற்சாலை வைத்திருக்கிறார், அங்கு ராஜ் குஷ்வாஹா வேலை செய்து வந்தார். சோனம் அடிக்கடி தனது தந்தையின் தொழிற்சாலைக்கு செல்வார். அப்போது சிறியவனாக இருந்தபோதிலும், ராஜ் குஷ்வாஹாவை காதலிக்க தொடங்கினார் சோனம்.

விபுல் ரகுவன்ஷி கூறியது

ராஜ் குஷ்வாஹா மற்றும் சோனம் குறித்து ராஜா ரகுவன்ஷியின் சகோதரர் விபுல் ரகுவன்ஷி கூறுகையில், "அந்த 3-4 கொலையாளிகளை பற்றி எனக்கு தெரியாது. ஆனால், ராஜ் குஷ்வாஹா பெயர் எனக்கு தெரியும். அவர் சோனம் அப்பாவின் ஊழியர். திருமணத்திற்கு பிறகும் அவர்கள் தொடர்ந்து தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தார்கள். ஆனால் சோனம், ராஜாவைக் கொலை செய்வார் என்று தான் நினைக்கவில்லை" என்றும் அவர் கூறினார்.

Meghalaya Hanymoon

"சோனமுக்கு திருமணம் நிச்சயமானபோது, ​​இருவரும் மகிழ்ச்சியாகதான் இருந்தார்கள்... பிறகு சோனம் இப்படி ஏன் செய்தாள் என்றே தெரியவில்லை. நான் இதுவரை ராஜ் குஷ்வாஹாவை பார்த்ததில்லை, அவன் பெயரை மட்டுமே கேள்விப்பட்டிருக்கிறேன்... சோனத்திற்கு இதில் தொடர்பு இருக்கலாம்... அவர்கள் காமாக்யா கோவிலில் பிரார்த்தனை செய்வதற்காக அசாம் செல்ல வேண்டியிருந்தது. அதன் பிறகு, அவர்கள் ஷில்லாங் செல்வதாகக் கூறினார்கள். ஆனால் திடீரென ஏன் மேகாலயா போனார்கள் என எங்களுக்குத் தெரியாது" என்று மேலும் அவர் தெரிவித்தார்.

சோகம் நிறைந்த தேனிலவு

இந்தூரைச் சேர்ந்த புதுமணத் தம்பதியினர் ராஜா ரகுவன்ஷி (29) மற்றும் சோனம் ரகுவன்ஷி (27) ஆகியோருக்கு மே 10 அன்று திருமணம் நடந்தது. மே 20ஆம் தேதி மேகாலயா சென்ற இந்த ஜோடியின் பயணம், மே 23ஆம் தேதி இருவரும் காணாமல் போனபோது மர்மமான முறையில் முடிந்தது.

நீண்ட தேடுதலுக்குப் பிறகு, ஜூன் 2ஆம் தேதி கிழக்கு காசி ஹில்ஸ் மாவட்டத்தில் உள்ள வெய்சாடோங் நீர்வீழ்ச்சிக்கு அருகே சுமார் 150 அடி ஆழமான பள்ளத்தாக்கில் இருந்து ராஜா ரகுவன்ஷியின் உடல் மீட்கப்பட்டது.

சோனம் காணாமல் போனதாக கூறப்பட்டதால், வழக்கில் சந்தேகம் மேலும் அதிகரித்தது. காவல்துறையினர் அருகிலுள்ள உள்ளூர்வாசிகள், சுற்றுலா வழிகாட்டிகள் மற்றும் ஹோட்டல் ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர், ஆனால் ஆரம்பத்தில் எந்தவிதமான தடயங்களும் கிடைக்கவில்லை. பின்னர், சோனம் ஜூன் 9ஆம் தேதி உத்தரப் பிரதேசத்தின் காசிப்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு தாபா உணவகத்தில் வைத்து காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

ராஜா ரகுவன்ஷி கொலை வழக்கு பல மர்மங்களை உள்ளடக்கியுள்ளது. இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் விரைவில் கண்டுபிடிக்கப்பட்டு நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+