நமோ டிவி உரிமம் அளிக்கப்பட்ட சேனல் இல்லை.. தேர்தல் ஆணையத்துக்கு ஒலிபரப்புத் துறை பதில்
டெல்லி: நமோ டிவி உரிமம் அளிக்கப்பட்ட சேனல் இல்லை என தேர்தல் ஆணையத்துக்கு தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகம் பதில் அளித்துள்ளது.
நமோ என்ற டிவி சேனல் கடந்த மார்ச் 31-ஆம் தேதி தொடங்கப்பட்டது. அதில் பிரதமர் மோடியின் சாதனைகள் மற்றும் அவரது பேச்சுகள் ஒளிபரப்பப்பட்டன. பாஜகவின் தொழில்நுட்ப பிரிவினரும் மோடியின் சாதனைகளை அறிய நமோ டிவியை டியூன் செய்ய கூறியும் நமோ செயலியை செல்போனில் பதிவிறக்கம் செய்யுமாறு விளம்பரப்படுத்தினர்.

இந்த டிவி சேனல் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் போது தொடங்கப்பட்டது. எனினும் இதன் உரிமையாளர் யாரெணன புரியவில்லை. இதையடுத்து காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் நமோ டிவி விவகாரத்தை தேர்தல் ஆணையத்துக்கு கொண்டு சென்று புகார் அளித்தன.
இதுகுறித்து விளக்கம் அளிக்குமாறு இந்திய தேர்தல் ஆணையம் தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகத்திடம் கேட்டது. அதற்கு அந்த அமைச்சகம் பதில் அளிக்கையில் நமோ டிவி சேனல் உரிமம் அளிக்கப்பட்ட சேனல் அல்ல. ஆனால் விளம்பரப்படுத்தும் சேனலாகும் என்று பதில் அளித்துள்ளது.
அதே வேளையில் கடந்த 31-ஆம் தேதி நானும் காவலன்தான் என்ற பிரதமர் மோடியின் பொதுக் கூட்டத்தை நேரடியாக ஒலிபரப்பியது குறித்து தூர்தர்ஷனுக்கும் தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டுள்ளது.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications