வாரத்திற்கு 90 மணி நேரம் வேலை செய்தேன்.. வீண் போகல.. இன்போசிஸ் நாராயண மூர்த்தி மீண்டும் பரபர பேச்சு
டெல்லி: சமீபத்தில் இளைஞர்கள் வாரத்திற்கு 70 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்று பேசிய கருத்து விமர்சனங்களை ஏற்படுத்திய நிலையில், தற்போது தான் 85-90 மணி நேரம் வேலை செய்ததாக நாராயண மூர்த்தி கூறியுள்ளார்.
பெரும் பணக்காரரும் இன்போசிஸ் இணை நிறுவனருமான நாராயண மூர்த்தி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று தொழில் சார்ந்த விஷயங்களை பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பாக ‛தி ரெக்கார்டு' எனும் பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் பங்கேற்று இருந்தார். அந்த நிகழ்ச்சியில் அவர் இந்திய பொருளாதாரம் குறித்தும், இளைஞர்கள் குறித்தும் கூறிய கருத்து கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியிருந்தது.

நாரயண மூர்த்தி கூறுகையில், “இந்தியாவின் உற்பத்தி திறன் மிகக்குறைவாக உள்ளது. அரசு துறைகளில் உள்ள ஊழல்களை குறைக்க நடவடிக்கை, முயற்சிக்க வேண்டும் . நாட்டுக்கான எனது கோரிக்கை என்னவென்றால் இளைஞர்கள் கடினமாக உழைக்க வேண்டும். இளைஞர்கள் வாரத்திற்கு 70 மணி நேரம் வேலை செய்ய வேண்டும். அடுத்த 20 முதல் 50 ஆண்டுகளுக்கு இளைஞர்கள் தினமும் 12 மணி நேரம் வேலை செய்ய வேண்டும்" என கூறியிருந்தார்.
நாராயண மூர்த்தியின் இந்த கருத்துக்கு பலரும் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர். தொழிலாளர் அமைப்புகளும் கடும் ஆட்சேபம் தெரிவித்தன. கடுமையான போராட்டங்களுக்கு பிறகே 8 மணி நேரம் என்பது சட்டமாக்கப்பட்டுள்ளது. தற்போதும் பல நிறுவனங்கள் தினமும் 8 மணி நேரத்துக்கும் அதிகமான வேலை வாங்கி வருகின்றன. இத்தகைய சூழலில் தினமும் 12 மணி நேரம் இளைஞர்கள் வேலை செய்ய வேண்டும் என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என பலரும் விமர்சித்து வந்தனர்.
இந்த நிலையில், இன்போசிஸ் தொடங்கிய புதிதில் வாரத்திற்கு 85 முதல் 90 மணி நேரத்திற்கும் மேலாக தான் உழைத்ததாக நாராயண மூர்த்தி கூறியுள்ளார். இது தொடர்பாக நாராயண மூர்த்தி கூறுகையில், “நான் காலை 6.20 மணிக்கு அலுவலகத்தில் இருப்பதையும் இரவு 8.30 மணிக்கு அலுவலகத்தில் இருந்து கிளம்பி செல்வதையும் வழக்கமாக கொண்டு இருந்தேன். வாரத்திற்கு ஆறு நாட்களும் வேலை செய்தேன்.
செழிப்பாக இருக்கும் ஒவ்வொரு நாடும் கடின உழைப்பு மூலமே அதை சாத்தியப்படுத்தியது என நான் அறிவேன். வறுமையில் இருந்து தப்பிக்க ஒரே வழி கடின உழைப்புதான் என்று எனது பெற்றோர்கள் எனக்கு கற்று கொடுத்தனர். எனது 40 வருடத்திற்கு மேலான தொழில்முறை வாழ்க்கையில் வாரத்திற்கு 70 மணி நேரத்திற்கும் மேல் நான் உழைத்துள்ளேன் . 1994 ஆம் ஆண்டு வரை வாரத்திற்கு 85 முதல் 90 மணி நேரம் வேலை செய்தேன். அது வீண் போகவில்லை” என்றார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications