அதிகரிக்கும் உள்ளாடை விற்பனை.. அட இதுல இப்படி ஒரு மேட்டர் இருக்கா? பொருளாதாரம் வளருதாம்
டெல்லி: நாட்டின் பொருளாதாரம் ஏற்றம் காண்பதற்கு சில அறிகுறிகள் உள்ளன. குறையும் பணவீக்கம், தென் மேற்கு பருவமழை சிறப்பாக பெய்தல் போன்றவற்றை வைத்து பொருளாதார வளர்ச்சியை ஓரளவுக்கு யூகிக்க முடியும். இது மட்டுமல்ல உள்ளாடை விற்பனையும் பொருளாதார வளர்ச்சியை பிரதிபலிக்கும் என்கின்றனர் பொருளாதார வல்லுநர்கள்.
பேஜ் இண்டஸ்ட்ரீஸ் (ஜாக்கி), ஆதித்யா பிர்லா ஃபேஷன்ஸ் அண்ட் ரீ - டெய்ல், அர்விந்த் ஃபேஷன்ஸ் மற்றும் ரூபா அண்ட் கோ உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் விற்பனை அதிகரித்திருப்பதை ஒப்புக் கொண்டுள்ளனர். ஆண்களின் உள்ளாடை நுகர்வு மீட்பை பொறுத்தவரை, ஜூன் காலாண்டில் பாசிட்டிவான ரிசல்ட்கள் கிடைத்துள்ளன. "அது எப்படி வாத்தியாரே உள்ளாடை விற்பனையானால், பொருளாதாரம் உயரும்?" என்று கலகலப்பு பட காமெடி போல உங்கள் மைண்ட் வாய்ஸில் சந்தேகம் வரலாம். ஆனால், அதை நம்பித்தான் ஆக வேண்டும்.

அமெரிக்கா பெடரல் ரிசர்வ் அமைப்பின் முன்னாள் தலைவர் அலன் க்ரீன்ஸ்பேன், "கடினமான காலங்களில் இருந்து மீள்வதை ஒரு சில பொருட்களின் நுகர்வை வைத்து தெரிந்துகொள்ளலாம். பணப்புழக்கம் குறைவாக இருக்கும்போது, மக்கள், அதிலும் ஆண்கள் இதுபோன்ற அத்தியாவசிய ஆடைகள் வாங்குவதை முடிந்தவரை தவிர்க்கிறார்கள். இவ்வளவு தான் சமாச்சாரம்." என்று தனது ஆய்வினை போட்டு உடைத்துள்ளார்.
பேஜ் இண்டஸ்ட்ரீஸ் நிர்வாக இயக்குநர் கணேஷ், "விற்பனை சிறப்பான முறையில் உயர்ந்துள்ளது. தேவையை நன்கு உணர்ந்து விநியோகத்தை மேம்படுத்தியுள்ளோம். முக்கியமாக, கடைகளில் புதிய வெளியீடுகள் கிடைப்பதை உறுதி செய்திருக்கிறோம்." என்று பாசிட்டிவ் அறிகுறியை கண்டு முதலீட்டாளர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். மேலும், ஆடை மற்றும் அணிகலன்களின் விற்பனை அதிகரிப்பு நம்பிக்கையளிக்கும் வகையில் உள்ளது என்று அவர்களின் ஜூன் காலாண்டு வருவாய் குறித்து குறிப்பிட்டுள்ளனர்.
இ-காமர்ஸ், டிஜிட்டல் தளங்களில் ஏற்பட்டுள்ள எழுச்சி மார்க்கெட்டை பலமடங்கு விரிவு செய்துள்ளது. அது அந்தந்த பிராண்ட்களை மக்களுடன் இணைக்கும் பணியை எளிமையாக்கியுள்ளது. அதுவும் இந்தத் தொழில்துறை வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிக்கிறது. மந்தநிலை காரணமாக கடந்த ஆறு காலாண்டுகளாகவே உள்ளாடை உள்ளிட்ட மொத்த ஆடைகளின் விற்பனையும் பாதிக்கப்பட்டிருந்தது. கொரோனா வைரஸ் காலகட்டத்தில் ஏற்பட்ட பின்னடைவால், பொருட்கள் தேக்கமடைந்திருந்தன.
அர்விந்த் ஃபேஷன்ஸ் நிறுவனத்தில், மொத்த விற்பனையில் மற்ற பிரிவை விட உள்ளாடை பிரிவின் வளர்ச்சி இரண்டு மடங்கு அதிக வேகத்தில் இருக்கிறதாம். ரூபா அண்ட் நிறுவனத்தின் வருவாய் ஏப்ரல் - ஜூன் காலாண்டில் 8 சதவீதம் உயர்ந்துள்ளதாம். லக்ஸ் இண்ட்ஸ்ட்ரீஸ் நிறுனமும் கடந்த காலாண்டில் வருவாய் 9 சதவீதம் உயர்ந்திருப்பதாக கூறியுள்ளனர்.
விஐபி கிளாத்திங் நிறுவனம், சந்தையில் பாசிட்டிவான சூழல் தென்படுகிறது. இதனால் செப்டம்பர் காலாண்டில் அவர்களின் வருவாய் 15-20 சதவீதம் அதிகரிக்கும் என்று நம்பிக்கை தெரிவிக்கின்றனர். ஆண்களுக்கான உள்ளாடை விற்பனை மட்டுமல்லாமல் மேலும் சில அறிகுறிகளும் பாசிட்டிவாக உள்ளன. நுகர்வோர் விலை குறியீட்டின் அடிப்படையில் ஜூலை மாதத்தில் பணவீக்கம் 3.54 சதவீதமாக உள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் இது மிகவும் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. பருவமழையும் சிறப்பாக இருக்கிறது. இந்திய ரிசர்வ் வங்கியும், நாட்டின் பொருளாதாரம் அடுத்த நிதியாண்டுக்குள் 7.2 சதவீதம் வளரும் என்று குறிப்பிட்டுள்ளது.
-
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications